search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deepavali bonus"

    தமிழக அரசில் பணியாற்றுபவர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. #Deepavalibonus #TNgovtstaff
    சென்னை:

    தமிழக அரசில் பணியாற்றுபவர்கள் மற்றும் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.



    நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8.33 சதவீதம் போனஸ் தொகை, 11.67 சதவீதம் கருணை தொகையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு கருணை தொகையாக 3 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. #Deepavalibonus #TNgovtstaff
    புதுச்சேரி மாநில அரசு பணியாளர்களுக்கு ரூ.6,908 தீபாவளி போனஸ் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. #Puducherryemployees #DeepavaliBonus
    புதுவை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, மாநில அரசு பணியாளர்கள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படும்.

    அவ்வகையில், புதுச்சேரி மாநில அரசில் உள்ள ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு பணியாளர்களுக்கு 6 ஆயிரத்து 908 ரூபாய் தீபாவளி போனஸ் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அரசு துறைகளில் மூன்றாண்டுகளுக்கு அதிகமாக தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு 1,184 ரூபாய் போனசாக அளிக்கப்படும். இதனால், அரசுக்கு கூடுதலாக 18 கோடி ரூபாய் செலவாகும் என புதுவை முதல் மந்திரி நாராயணசாமி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதர பொதுத்துறை பணியாளர்களுக்கான உற்பத்திசார்ந்த போனஸ் தொகை மத்திய அரசு அறிவிக்கும் விகிதாச்சாரத்தின்படி கணக்கிட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Puducherryemployees  #DeepavaliBonus
    ×