என் மலர்
உள்ளூர் செய்திகள்

துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்
- பட்டாசு கொளுத்தும் போது ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.
- தீ புண்ணுக்கு குளிர்ந்த நீர் அல்லது சாதாரண நீரை மட்டுமே ஊற்ற வேண்டும்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுவது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
வெடிகளை திறந்த வெளியில் வைத்து வெடிக்க வேண்டும்.
நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு கொளுத்தும் போது ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.
தீ புண்ணுக்கு குளிர்ந்த நீர் அல்லது சாதாரண நீரை மட்டுமே ஊற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் நிலைய அலுவலர் (போக்குவரத்து) ராமச்சந்திரன் தலைமையில் வழங்கப்பட்டு பிரச்சாரம் நடைபெற்றது.
தீயணைப்பு வீரர்கள் நீலகண்டன், வெங்கடேசன், ஆகாஷ் கண்ணன், நிரஞ்சன், விமல் ராஜ், வினோத் ஆகியோர் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில், புதிய பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.