search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமகிரிபேட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தண்ணீரை குடித்த 10 பேருக்கு வாந்தி
    X

    நாமகிரிபேட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தண்ணீரை குடித்த 10 பேருக்கு வாந்தி

    • நாமகிரிபேட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தண்ணீரை குடித்த 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    • சமத்துவபுரத்தில் 100-க்கும் ஏற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்ற பகுதி மக்களுக்காக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ளது பிலிப்பாக்குட்டை கிராமம். இங்குள்ள சமத்துவபுரத்தில் 100-க்கும் ஏற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

    இந்த பகுதி மக்களுக்காக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்துதான் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் உபயோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. அந்தத் தண்ணீர் ஒருவித வாசனையுடன் வந்ததாக தெரிகிறது. இதனால் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டது.

    இந்த தண்ணீரை 10-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியதாக தெரிகிறது. தண்ணீரை குடித்த பழனிச்சாமி (வயது50), வெள்ளையம்மாள் (60), விஜயா(47) உள்பட 10 பேர் வாந்தி எடுத்தனர். உடனடியாக அவர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் 9 பேர் வீடு திரும்பினர்.

    நேற்று நாமகிரிப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் தயா சங்கர் தலைமையில் சமத்துவபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தனர். ஒருவித வாசனையுடன் வந்த தண்ணீர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கார்கூடல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×