search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோத்தகிரி"

    566 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்த கிரி வெள்ளநிவாரண மையத்தில் கலைஞர் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி ஆ.ராசா ஆகியோர் கலந்துகொண்டு 566 பயனாளிகளுக்கு, ரூ.3.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதனஒருபகுதியாக வருவாய்-பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் 12 பேருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் 300 பேருக்கு ரூ.3 லட்சம் பெறுவதற்கான ஏ.டி.எம் கார்டுகள், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை யின்கீழ் 21 பேருக்கு ரூ.1.4 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகள், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 10 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் கடனுதவிகள், தோட்டக் கலைதுறை சார்பில் 14 பேருக்கு மானியவிலையில் ரூ.10.42 லட்சம் மதிப்பில் வேளாண்மை எந்திரங்கள் வழங்கப்பட்டது.

    ஆத்மா திட்டத்தின்கீழ் 6 பேருக்கு ரூ.24 ஆயிரம் மதிப்பில் விதைகள், முதல மைச்சரின் விரிவான மரு த்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் காப்பீட்டு அட்டைகள், மருத்துவம்-மக்கள் நலவாழ்வுதுறை சார்பில் 20 பேருக்கு மக்களைத்தேடி மருத்துவம் சார்பில் ரூ.20 ஆயிரம் மதிப்பில் மருந்து பெட்ட கங்கள், 10 பேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

    வேளாண் பொறியி யல்துறை சார்பில் 6 பேரு க்கு டிராக்டர்க ளுக்கான மானியதொகை ரூ.25.57 லட்சம், சுழல்கருவி வாங்கு வதற்கு ரூ.6.20 லட்சம், 5 பேருக்கு ரூ.49,600 மதிப்பில் தேயிலை பறிக்கும் எந்திரம், முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 86 பேருக்கு ரூ.21.50 லட்சம் மதிப்பில் பத்திரங்கள், மாவட்ட ஆதிதிராவிடர்-பழங்குடியி னர் நலத்துறை யின்கீழ் 3 பேருக்கு ரூ.16,740 மதிப்பில் தையல் மிஷின் கள், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் சுய உதவிகுழுவினருக்கு ரூ.18 லட்சம் மதிப்பில் கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சார்பில் 10 பேருக்கு ரூ.4850 மதிப்பில் மடக்குகுச்சிகள், கருப்பு கண்ணாடி என மொத்தம் 566 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து சுற்றுலாத் துறை அமைச்சரும், எம்.பி.யும் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கியில் கலை ஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு சேமிப்பு திட்டத்தை துவக்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சிதலைவர் பொன்தோஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமாம கேஸ்வரி, தோட்டக்க லைத்துறை இயக்குனர் சிபிலாமேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் வாஞ்சிநாதன், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷனகு மார், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் இப்ராஹிம்ஷா, ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், பேரூராட்சி தலைவி ஜெயக்குமாரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கல்பனா,மாவட்ட முன்னோடி வங்கி மேலா ளர் சசிகுமார் சக்கரபாணி, பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர்நல அலுவலர் ராஜேஷ்குமார், ஆதிதிராவிடர்-பழங்குடி யினர் நல அலுவலர் செல்வகுமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல்அமீத், மாவட்ட தொழில்மைய மேலாளர் சண்முகம் சிவா, மாவட்ட சமூக நல அலுவலர் பிர வீனா தேவி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

    • காரின் கதவை திறந்து அங்கிருந்து ஓடியதால் டிரைவர் உயிர் தப்பினார்
    • உயிர் சேதம் ஏற்படும் முன்பே யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    இதில் ஒற்றை யானை ஒன்று அவ்வப்போது சாலைக்கு வந்து, வாகன ஓட்டிகளை துரத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    அப்போது வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை அந்த சாலையில் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.

    யானை நிற்பதை பார்த்ததும் காரை ஓட்டி வந்தவர், காரை சிறிது தொலைவிலேயே நிறுத்தி விட்டார்.சாலையில் சுற்றி திரிந்த யானை மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது.

    திடீரென அந்த யானை, காரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான காரின் டிரைவர், காரின் கதவை திறந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    காரின் அருகே வந்த யானை ஆக்ரோஷமாக, காரை அடித்து நொறுக்கியது. மேலும் காரை அப்படியே அலேக்காக தூக்கி நடுரோட்டில் வீசியது.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் பார்த்து அச்சத்தில் உறைந்து போயினர்.

    20 நிமிடத்திற்கும் மேலாக அந்த இடத்தை விட்டு நகராமல் யானை அங்கேயே நின்றபடி காரை சேதப்படுத்தியது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த ஆண்டு சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் அதிக அளவில் இடம்பெயர்ந்து உணவு தேடி மலை பாதைக்கு வருவதால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

    குறிப்பாக ஒற்றை யானையின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. எனவே உயிர் சேதம் ஏற்படும் முன்பே காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக பாராளுமன்றத்தில் பேசியதாக கூறினார்.
    • ‘இந்தியா’ கூட்டணி வலுவான நிலையில் இல்லை.

     ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த மேல் அனையட்டி கிராமத்தில் மாநிலங்களவை உறுப்பினா் நிதியின் கீழ் சமுதாயக் கூடம் கட்டுவதற்காக ரூ. 20 லட்சம் நிதியை ஜி.கே.வாசன் எம்.பி. ஒதுக்கீடு செய்திருந்தாா். இதையடுத்து இங்கு சமுதாயக் கூடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் பங்கேற்பதற்காக கோத்தகிரி வந்த ஜி.கே.வாசனுக்கு படுகா் இன மக்களின் பாரம்பரிய முறைப்படி மாவட்டத் தலைவா் மனோஜ் காணி, மாவட்ட நிா்வாகி பெள்ளன் ஆகியோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல் அனையட்டி கிராமத்தில் சமுதாயக் கூடத்தை அவா் திறந்து வைத்தாா்.

    பின்னா் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    படுகா் சமுதாயத்தை பழங்குடியின பட்டியலில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலங்களவையில் பேசியுள்ளேன். தொடா்ந்து இதற்காக முயற்சி செய்வேன். இந்த சமுதாய மக்களின் வளா்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பச்சைத் தேயிலைக்கு உரிய விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'இந்தியா' கூட்டணி வலுவான நிலையில் இல்லை. இந்தக் கூட்டணியால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. மக்கள் நினைக்கும் வலுவான கூட்டணி தமிழகத்தில் அமையும். அதில் முக்கிய கட்சியாக த.மா.கா. இருக்கும்.

    காவிரி நீா் விவகாரத்தில் கா்நாடக அரசு மனிதாபி மானமின்றி செயல்படு கிறது. இந்தப் பிரச்சினையில் கா்நாடக அரசு நடுநிலையு டன் செயல்பட வேண்டும். காவிரி நதிநீா் ஆணையம் நிா்ணயிக்கும் அளவு கூட வழங்க மாட்டோம் என்று சொல்வது ஏற்புடையதல்ல. எனவே, காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது குறித்து யோசிக்காமல் இதுகுறித்து தமிழக அரசு நேரடியாகப் பேசி முடிவெடுக்க வேண்டும்.

    தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூரில் டெல்டா மாவட்ட விவசாயிகள் சாா்பில் நடைபெற உள்ள ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வனஉயிரின வாரவிழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வனச்சரக செல்வராஜ், ராம்பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்றனர்.

    கோத்தகிரி முக்கிய சாலைகள் வழியாக பேரணி எடுத்துச் சென்று கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

    கோத்தகிரி லாங்வுட் சோலை பாதுகாப்போம் குழு கோத்தகிரி வனச்சராகம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் கோத்தகிரி அருகில் உள்ள பெண்கள் மேல் நிலையில் பள்ளியில் நடைபெற்றது

    இதில் லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே ஜே ராஜு கலந்து கொண்டு காடுகள் மற்றும் வன விலங்குகள் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தரங்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டது

    • கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பி. எஸ். ஐஸ்வர்யா வரவேற்றார்.
    • நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

    அரவேணு,

    கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் வளர்ந்து வரும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ் நடுஹட்டி கிராமத்தில் உழவர் பெருவிழா நடைபெற்றது.

    மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலாமேரி தலைமை தாங்கினார். நடுஹட்டி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் இ. ராம்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மூலிகை நாற்று தொகுப்புகளை வழங்கினார்.

    உழவர் பெருவிழாவில் பிரதம மந்திரி கௌரவ ஊக்க தொகை பெற விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    முன்னதாக கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பி. எஸ். ஐஸ்வர்யா வரவேற்றார்.

    இறுதியில் துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

    • பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சா்வ சாதாரணமாக உலவிவருகின்றன.
    • கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரவேணு:

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. அவை உணவு, தண்ணீா் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறி பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சா்வ சாதாரணமாக உலவிவருகின்றன.

    இந்நிலையில் கோத்தகிரி அருகே கேசலாடா கிராமத்தில் ஒரு கரடி நேற்று புகுந்தது. அங்கு அங்கு உள்ள பகுதிகளில் சுற்றி திரிந்தது. இதனால் அங்கு வசிக்கும் கிராம மக்கள் அச்சம் அடைந்தனா். சேசலாடா குடியிருப்புப் பகுதியில் நீண்ட நேரமாக சுற்றித் திரிந்த கரடி, பின்னா் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு சென்று விட்டது.

    எனவே அசம்பாவிதம் நடக்கும் முன்பாக இந்தக் கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனா். 

    • மக்கள் அதிகாரம் நிர்வாகி ஆனந்தராஜ், ராஜா, மாவட்ட இணை செயலாளர் வெங்கட் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
    • தனியார்மய போக்கின் ஒரு பகுதியாக நீட் தேர்வு உள்ளதால், ஜல்லிக்கட்டு போல மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடல் பகுதியில் நீட் தேர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் அந்த அமைப்பின் நிர்வாகி ஆனந்தராஜ், ராஜா, மாவட்ட இணை செயலாளர் வெங்கட், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளர் மன்னரசன், பெண்கள் இணைப்பு குழுவின் சாரா உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது நிர்வாகிகள் பேசுகையில், இந்திய மருத்துவத்தை தனியார்மயமாக்கும் போக்கின் ஒரு பகுதியாக நீட் தேர்வு உள்ளதால், ஜல்லிக்கட்டு போல மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

    • சம்பள உயர்வு, போனஸ் குறித்த தொழிலாளர்கள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.
    • ரோடு அமைப்பதற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொ ண்டார்.

    அரவேணு -

    தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நீலகிரி மாவட்டத்தில் சுற்று ப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒருபகுதியாக அவர்

    கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் குயின்சோலை பகுதியில் உள்ள டேன் டீ தொழிற்சாலைக்கு சென்ற அமைச்சர், அங்கு தயாராகும் தேயிலை தூளின் தரம், தொழிற்சாலை உபகரணங்கள் குறித்து ஆய்வு செய்தார். அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து, பணியில் ஏதேனும் இடர்பாடுகள் உள்ளதா, குடியிருப்புகளில் போதிய அடிப்படை வசதிகளும் உள்ளதா? என கேட்டறி ந்தார்.

    அப்போது சம்பள உயர்வு, போனஸ் குறித்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்ட அமைச்சர், உங்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

    பின்னர் கொடநாடு பகுதியில் வனத்துறை கட்டு ப்பாட்டில் உள்ள கோடு தேன்மந்து, நேர்தேன்மந்து ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்கு ரோடு அமைப்பதற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொ ண்டார்.

    நிகழ்ச்சியில் முதுமலை கள இயக்குநர் வெங்கடேஷ், மாவட்ட வனஅலுவலர் கவுதம், நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பொன்தோஷ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், கோத்தகிரி வட்டார வட்டாட்சியர் கோமதி, கோத்தகிரி டவுன் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமல், கீழ்க்கோத்தகிரி வனசரக அலுவலர் ராம்குமார் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உதவி மேலாண்மை உதவி இயக்குனர் ஜோதிகுமார் மண் மாதிரிக்கான செயல்முறை விளக்கம் அளித்தார்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆகியவை செய்து இருந்தன.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரக்கம்பை கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை திட்டம் குறித்து விளக்கினார்.

    ஊட்டி மண் ஆய்வுக்கூட வேளாண் அலுவலர் நிர்மலா, காய்கறி தோட்டத்தில் ஏக்கருக்கு 10 புள்ளி 12 இடங்களில் முக்கால் அடி ஆழத்தில் மண் மாதிரி சேகரிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். உதவி மேலாண்மை உதவி இயக்குனர் ஜோதிகுமார் மண் மாதிரிக்கான செயல்முறை விளக்கம் அளித்தார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் பேசும்போது உழவன் அட்மா திட்டம், வட்டார தொழில்நுட்பம், உழவன் செயலி பயன்பாடு மற்றும் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான செயல்பாடுகள் ஆகியவை குறித்தும் விளக்கினார். பிரவீனா மணிமேகலை நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆகியவை செய்து இருந்தன.

    • சாலை, குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
    • ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவற்றை திரும்ப ஒப்படைப்போம்.

     அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கூக்கல்தொரை ஊராட்சியில் உள்ளது ஜீவா நகர். இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் சாலை, குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த பகுதியானது வனத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகள் நடமாட்டமும் உள்ளது. இரவு நேரங்களில் தெரு விளக்குகள் இல்லாதால், வனவிலங்குகள் வருவது தெரியாது. இதனால் சில சமயங்களில் வனவிலங்குகள் தாக்கும் சம்பவமும் நிகழ்கிறது.

    தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு, பொதுமக்கள் ஊர் தலைவர் அய்யப்பன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். ஆனால் மனு அளித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி கேட்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாகவும், இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் முறையிட உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

    • குடியிருப்பில் சுற்றிய கரடி தடுப்பு சுவரில் ஏறி நடந்து சென்றது
    • 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    அரவேணு

    கோத்தகிரி வனப் பகுதிகளில் கரடி, சிறு த்தை, மயில், மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் தற்போது உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் நுழைவது வாடிக்கை யாகி விட்டது. குறிப்பாக கோத்தகிரி நகரின் மையப்பகுதிகளான பஸ்நிலையம், கடைவீதி, காம்பாய் கடை, மாதா கோவில் சாலை, கார்சிலி, கன்னிகா தேவி காலனி உள்ளிட்ட பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.தொடர்ந்து வனவில ங்குகுள் ஊருக்குள் வருவ தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகே உள்ள புனித லூக்கா ஆலயம் அருகே 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அந்த பகுதியில் கரடி ஒன்று புகுந்தது. அந்த கரடி அந்த பகுதியிலேயே வெகுநேரமாக சுற்றி திரிந்து விட்டு, சர்வசாதாரணமாக அங்குள்ள சாலையில் நடந்து சென்றது.

    கரடி ஊருக்குள் புகுந்ததை அறிந்த நாய்கள் குரைத்து கொண்டே இருந்தன. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வந்து பார்த்தனர்.

    அப்போது வெளியே கரடி நடமாடி கொண்டி ருந்தது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடு களுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டனர்.

    சிறிது நேரம் அங்கு சுற்றி திரிந்த கரடி, குடியிருப்பையொட்டி இருந்த தடுப்புச் சுவர் மீது லாவகமாக ஏறி ஆலய வளாகத்திற்குள் புகுந்து மறைந்தது. கரடி சுற்றி திரிவதையும், தடுப்பு சுவரில் ஏறுவதையும் சிலர் வீடுகளுக்குள் இருந்தவாறே செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    அதனை சமூக வலைத ளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இதற்கிடையே குடியிரு ப்புக்குள் சுற்றும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    லாரியின் வலது பக்க பலகைகள் உடைந்ததால் மரங்கள் கீழே விழுந்தன.

    கோத்தகிரி,

    கோத்தகிரியை அடுத்த ஒன்னட்டி பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. லாரி ஒன்னட்டியை அடுத்த எஸ்.கைகாட்டி 2-வது வளைவில் திரும்ப முயன்ற போது அதிக பாரத்தின் காரணமாக லாரியின் வலது பக்க பலகைகள் உடைந்தன. இதனால் லாரியில் இருந்த மரங்கள் அனைத்தும் சாலையில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் வாகனங்கள் எதுவும் வராததால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. சாலையில் மரங்கள் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ×