search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணம்"

    • நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
    • இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

    நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இடாகி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக கருத்துகளை பேசி சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

    சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

    இந்நிலையில், நீண்ட நாட்களாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

    நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் இன்று தெலங்கானாவில் உள்ள வனபர்த்தியில் திருமணம் நடைபெற்றுள்ளது.

    இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹோலி பல வண்ணங்களால் ஆன பண்டிகை. ஆனால் நம் நாட்டில் சிலருக்கு சில நிறங்கள் பிடிக்கவில்லை
    • உத்தரபிரதேசத்தில் வினாத்தாள் கசிய விடாமல் அரசு தேர்வு நடப்பது இல்லை

    பாஜக இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால், இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் அவர்களுக்கு திருமணம் கூட நடக்காது" என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று தனது சொந்த கிராமமான சைஃபாயில் தனது கட்சியினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

    அப்போது பேசிய அவர், "ஹோலி பண்டிகை ஒருவரையொருவர் கொண்டாடுவதற்கும் அரவணைப்பதற்கும் வாய்ப்பளிக்கிறது. அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று நீங்களும் நானும் இந்த சமயத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

    ஹோலி பல வண்ணங்களால் ஆன பண்டிகை. ஆனால் நம் நாட்டில் சிலருக்கு சில நிறங்கள் பிடிக்கவில்லை, அவர்களுக்கு ஒரே ஒரு நிறம் மட்டும் தான் பிடிக்கும். ஆனால், இந்தியா பலதரப்பட்ட மக்களின் பல்வேறு சித்தாந்தங்களையும், மாறுபட்ட சிந்தனைகளையும் கொண்டிருக்கும் ஒரு ஜனநாயக நாடு என்பதே உண்மை.

    உத்தரபிரதேசத்தில் வினாத்தாள் கசிய விடாமல் அரசு தேர்வு நடப்பது இல்லை. வேலை கொடுக்க வேண்டும் என்றால், இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். ஆனால் உயர்சாதியினருக்கு மட்டுமே அரசு வேலை கொடுக்க விரும்பும் பாஜக அரசு, வேண்டுமென்றே வினாத்தாள்களை கசியவிடுகிறது.

    கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இதுவரை ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு எப்படி வளர்ந்த நாடாக மாற முடியும்?

    தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த கட்சிக்கு அதிக பணம் சென்றது என்பது அனைவருக்கும் தெரியும். நன்கொடைகள் என்பது தானாக முன்வந்து அல்லது மக்களுக்கு உதவுவதற்காக வழங்கப்படுகின்றன. ஆனால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவற்றின் மூலம் அழுத்தம் கொடுத்து பணத்தை பெறுவது என்பது வழிப்பறியாகவே கருதப்படும். தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக செய்தது வழிப்பறி தான்.

    பாஜகவுக்கு யாராவது பணம் கொடுத்தால் அது நன்கொடை, வேறு யாருக்காவது கொடுத்தால் அது கருப்பு பணம் என்று மோடி, அமித் ஷா நினைக்கின்றனர். வரும் தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும்" என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

    • பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த திருமண விழா நடை பெற்றது.
    • மணமகனும், மணமகளும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து கோவிலுக்கு வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெங்கனூரில் பவுர்ண மிகாவு பாலா திரிபுரசுந்தரி தேவி கோவில் உள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 216 பேருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்த திருமணம் நடைபெற்றது. பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த திருமண விழா நடை பெற்றது.

    இதில் அட்டபாடியை சேர்ந்த 72 பேரும், இடுக்கி யில் உள்ள கோவில்மாலா பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த 52 பேரும், மகராஷ்டிராவில் உள்ள 8 பழங்குடியினர் என 216 பேர் கலந்து கொண்டனர். மணமகனும், மணமகளும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து கோவிலுக்கு வந்தனர். அவர்கள் வழிபாடு செய்த பிறகு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வு ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது.

    • ஆலயங்களில் திருமண வைபவம் நடைபெறும் போது அதில் கலந்து கொண்டால் மங்களகரமான மணவாழ்வு பெறலாம்.
    • திருமண வைபத்தில் கன்னிகா தானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது.

    திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளையார்பட்டி, திருவீழிமிழலை,

    திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம்,

    கேரளத்தின் திருமணஞ்சேரி, ஆரியங்காவு மற்றும் மண முடிச்சநல்லூர், திருப்பாச்சேத்தி, திருவெணங்காடு,

    திருவேள்விக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், திருநல்லூர், திருமழப்பாடி,

    திருப்பாலைத் துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில்,

    திருநாகேஸ்வரம், பூவாளூர், சக்தி கோவில் திருமணமங்கலம், விசாலேஸ்வரன் கோவில் தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி

    ஆகிய தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டி கொண்டு வரலாம்.

    வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.

    திருமால் கன்னிகா தானம் செய்து வைக்க பிரம்மன் வேள்வி நடத்த சொக்கநாதரான சிவன் மீனாட்சியம்மையை பங்குனி உத்தரத்தில் மணக்கிறார்.

    திருமண வைபத்தில் கன்னிகா தானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது.

    இக்கோல சுதைச் சிற்பம்தான் எல்லா திருமண மண்டபங்களிலும் மணமேடையின் பின்புற சுவரில் இடம் பெற்றுள்ளது.

    அவ்வளவு அழகிய அற்புதமான காட்சி இது.

    சிவ பார்வதி திருமணக் கோலங்களில் ஏதேனும் ஒன்றை தரிசித்தாலும், ஆலயங்களில் திருமண வைபவம் நடைபெறும் போது

    அதில் கலந்து கொண்டாலும் மங்களகரமான மண வாழ்வு பெற்று மகிழ்வுடன் வாழலாம்.

    கன்னிகள் விரதமிருந்து இப்படி தரிசித்தால் விரைவில் திருமணம் கூடுவதுடன் நல்ல கணவன் கிடைத்து இனிமையான வாழ்வும் அமையும்.

    • படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
    • திருமணம் பற்றி கங்கனா ரனாவத் கருத்து.

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். திரையுலகம் தவிர்த்து இவர் கூறும் பல்வேறு கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமையும். தமிழில் இவர் சந்திரமுகி 2 படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

    சமீபத்தில் அம்பானி இல்ல திருமணத்தில் நடனம் ஆடுவது பற்றி இவர் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. அந்த வரிசையில், குடும்ப உறவு மற்றும் திருமணம் பற்றி கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.

    "ஒவ்வொரு பெண்ணும் தனது திருமணம் மற்றும் குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு கொண்டுள்ளனர். அப்படி தான் நானும் ஆசைப்படுகிறேன். நான் எப்போதும் குடும்பத்துடன் தான் இருப்பேன். எனது குடும்பம் எனக்கு முக்கியம். ஐந்து ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அது காதல் திருமணமாக இருந்தால் நல்லது," என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இருவருக்கு ஒரே மாதிரியான கிரக சாரத்தை ஏற்படுத்தும்.
    • ஒருவர் கஷ்டப்பட்டாலும் இன்னொருவர் குடும்பத்தை நடத்துவார்.

    பொதுவாக ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்வதை அனைவரும் தவிர்ப்பது நல்லது. ஒரே ராசி - ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்யும் போது கோச்சார நிலைப்படி இருவருக்கு ஒரே மாதிரியான கிரக சாரத்தை ஏற்படுத்தும்.

    பையனுக்கு, அஷ்டமத்தில் குரு வந்தால் பெண்ணிற்கும் அந்த நேரத்தில் குரு அஷ்டமத்தில் வரும் (காரணம் இருவரும் ஒரே ராசி அல்லது நக்ஷத்திரம் என்பதால்) அதே போல ஏழரைச் சனியும் இருவருக்கும் வந்தால் சேர்ந்தே வரும். இதனால் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும். திக்கு முக்காடி போய்விடுவார்கள். ஏனெனில் கணவருக்கு மோசமான கோச்சார கிரக நிலை இருந்தால் மனைவிக்கு அந்த சமயத்தில் சுபமான அல்லது மிதமான கோச்சார பலன் இருத்தல் அவசியம்.

    அப்போது தான் கொஞ்சமாவது சிரமப்படாமல் ஒருவர் கஷ்டப்பட்டாலும் இன்னொருவர் குடும்பத்தை நடத்துவார். இதனால் தான் ஒரே ராசியிலோ ஒரே நட்சத்திரத்திலோ திருமணம் செய்யக் கூடாது என்கின்றனர் பெரியவர்கள்.

    • நான்கு பொருத்தத்திற்கு கீழ் போனால் திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம்.
    • தோஷம் உள்ளவர்களுக்கு திருமண வாழ்க்கை நினைத்தபடி இருக்காது.

    சிலர் ஜோதிடரை சந்தித்து 10 -ல் எது முக்கிய பொருத்தம் என்று கேட்பது உண்டு. ஆனால், ராமர் சீதைக்கு கூட எனது கணக்கில் எட்டு பொருத்தம் தான் காட்டுகிறது. ஆக நாம் யாருக்குமே பத்து பொருத்தம் என்பது அதிர்ஷ்டம்தான். ஆனால் குறைந்தது நான்கு பொருத்தமாவது இருத்தல் அவசியமாம். நான்கு பொருத்தத்திற்கு கீழ் போனால் திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம். பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம்.

    எனினும் ஏன் பல திருமணங்கள் வெற்றி அடைவது இல்லை?

    அனைத்து பொருத்தங்களும் பார்த்து தான் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எனினும் திருமணம் நிலைக்காமல் போக பல காரணங்கள் உண்டு. நிறைய பேர் என்ன செய்கிறார்கள் என்றால், ஒரு ஜோதிடரை அணுகி நட்சத்திர அடிப்படையில் பொருத்தம் உள்ளதா என்று மட்டும் பார்த்து விட்டு அவசர கதியில் திருமணத்தை முடித்து விடுகிறார்கள். ஆனால் ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தை ஆராய மறந்து விடுகிறார்கள்.

    ஒரு ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் லக்கனம் மற்றும் இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அந்த வரனை எடுப்பதை விட எடுக்காமல் இருப்பது நல்லது. காரணம் அது ராகு-கேது தோஷம். இந்த மாதிரி தோஷம் உள்ளவர்களுக்கு திருமண வாழ்க்கை நினைத்தபடி இருக்காது. திருமண வாழ்க்கை அதிக சோதனை நிறைந்து இருக்கும். அதே போல ஏழாம் இடத்தில் சனி, செவ்வாய் இருத்தல் நல்லது அல்ல. ஆக இவை எல்லாம் ஒரு காரணம்.

    இன்னொரு காரணம் திருமணம் செய்ய தேர்ந்தெடுத்த நாளில் சந்திராஷ்டமம் இருத்தல் கூடாது. அதே போல ஒரு குறிப்பிட்ட சுப லக்கினத்தில் (நல்ல நேரத்தில்) திருமணம் செய்வார்கள். இந்நிலையில் அந்த நேரத்திற்கு உரிய லக்கினத்திற்கு அதிபதி நீச்சம் அல்லது லக்னத்திற்கு 6,8,12 இல் மறைந்தோ அல்லது வக்கிரம் அடைந்தோ இருக்கக் கூடாது. இது ரொம்ப முக்கியம்.

    இதேபோல ராகு தசையில் திருமணம் செய்வது, முடிந்தவரை ஆண், பெண் இருவரில் யாருக்கு ராகு தசை இருந்தாலும் அல்லது நடந்தாலும் சம்மந்தியாக வரும் நபரை பற்றி நன்கு விசாரித்து பின் திருமணம் செய்யவும். ஆக, இனி பெற்றோர்கள் மேற்படி இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் பிள்ளைகளின் இல்லறம் என்றும் இனிக்கும்.

    • கணப் பொருத்தம் - மங்களம் உண்டு.
    • மகேந்திரப் பொருத்தம் - செல்வம் விருத்தியாகும்.

    திருமணப் பொருத்தம் என்பது ஆண், பெண் என இரு பாலரின் நட்சத்திரங்களை எடுத்துக் கொண்டு அவை இரண்டிற்கும் எந்த அளவிற்கு ஒத்துப்போகும் என்பதை கணக்கிடுவதே ஆகும்.

    ஒரு காலத்தில் 22 பொருத்தங்கள் பார்க்கப்பட்டது பிறகு காலத்தின் மாற்றதால் 22 என்ற இந்த எண்ணிக்கை மெல்லக் குறைந்து 12 பொருத்தம் பார்த்தால் போதும் என்ற நிலை வந்தது இன்றைய காலத்தில் 10 பொருத்தங்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளது.

    பத்து பொருத்தங்கள்

    1. தினப் பொருத்தம் - ஆயுள், ஆரோக்கியம் மேம்படும்.

    2. கணப் பொருத்தம் - மங்களம் உண்டு.

    3. மகேந்திரப் பொருத்தம் - செல்வம் விருத்தியாகும்.

    4. ஸ்த்ரீ தீர்க்கம் - செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும்.

    5. யோனி கூடம் - கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும்.

    6. ராசிப் பொருத்தம் - வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும்.

    7. ராசி அதிபதி பொருத்தம் - கரு சீக்கிரத்தில் உண்டாகும்.

    8. வசியப் பொருத்தம் - கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள்.

    9. ரஜ்ஜுப் பொருத்தம் - கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள்.

    10. வேதை பொருத்தம் - தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2 தாதாக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
    • ஆயுதம் ஏந்திய 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் என்ற காலா ஜதேயிதி. பிரபல தாதாவான இவர் மீது 76-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவரது தலைக்கு அரியானா போலீசார் ரூ.7 லட்சம் பரிசு அறிவித்த நிலையில், 2021-ம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்தவர் பெண் தாதாவான அனுராதா சவுத்ரி. இவரை அப்பகுதியில் மேடம் மின்ஸ் ரிவால்வர் ராணி என்றே அழைத்து வந்தனர். இவர் மீதும் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டு நிச்சயமும் நடந்தது. அதன்படி கோர்ட்டில் பரோல் கேட்டு விண்ணப்பித்தனர். திருமணத்திற்காக இருவருக்கும் பரோல் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டெல்லி துவாரகா செக்டார் 3-ல் சந்தோஷ் கார்டன் என்ற மகாலில் தாதா தம்பதியான காலா ஜதேயிதி-அனுராதா சவுத்ரியின் திருமணம் நடைபெற்றது.


    இதில் 2 தாதாக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தாதாக்களின் எதிரிகளால் அசம்பாவிதம் நடைபெறக்கூடும் என கருதப்பட்டதால் திருமணம் நடைபெற்ற மண்டபத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆயுதம் ஏந்திய 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து தாதா தம்பதியினர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

    • 25 வயது வித்தியாசம் உள்ள போதிலும் திருமணம் கலிபோர்னியாவில் அவரது பங்களாவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது
    • ரூபர்ட் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 16 ஆயிரம் கோடி

    அமெரிக்காவின் பிரபல 'நியூஸ் வேர்ல்ட் மீடியா' அதிபர் ரூபர்ட் முர்டோக் (வயது 92). தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளர். ரூபர்ட் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 16 ஆயிரம் கோடி. அவருக்கு மகன், மகள்கள் என 6 பேர் உள்ளனர்.

    இவர் தனது பத்திரிகை  நிறுவனங்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகன்களிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், ஏற்கனவே 4 திருமணங்கள் செய்திருந்த முர்டோ, தன் நீண்ட நாள் காதலியான எலெனா ஜோகோவாவை (67) திருமணம் செய்ய உள்ளார்.

    ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தரான எலெனா ஜோகோவா ஓய்வுபெற்ற மூலக்கூறு உயிரியலாளர். இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

    25 வயது வித்தியாசம் உள்ள போதிலும் இவர்களது திருமணம் கலிபோர்னியாவில் அவரது பங்களாவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இதையொட்டி இணையதளத்தில் இந்த ஜோடிகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

    • முதற்கட்ட விசாரணையில், கவுரவ் சிங்கால் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை.
    • தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    தெற்கு டெல்லியில் உள்ள டெவ்லி எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் கவுரவ் சிங்கால் (வயது29). உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அவரது வீட்டில் இருந்து திருமண ஊர்வலம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கவுரவ் சிங்காலுக்கும் அவரது தந்தைக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தந்தை, கூர்மையான ஆயுதத்தால் கவுரவ் சிங்காலுவை தாக்கி கொலை செய்தார். இதையடுத்து அவரது தந்தையை போலீசார் கைது செய்தார்.

    முதற்கட்ட விசாரணையில், கவுரவ் சிங்கால் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. அவர் வேறொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதை குடும்பத்தினர் ஏற்கவில்லை. இது தொடர்பாக தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இப்பிரச்சினையில் கவுரவ் சிங்கால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    • தனபால் தனது காதலி பவானியுடன் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
    • போலீஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் கரூர் கவுன்சிலர் வசுமதி பிரபு மற்றும் உறவினர்கள் தலைமையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், சோமூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் அரசு தேர்வுகளுக்கு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் பவானி (வயது 19). இவர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

    பவானியின் தாய், தந்தையர் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். இதனால் பவானி பெரியப்பா, பெரியசாமி மற்றும் உறவினர்கள் ஆதரவில் இருக்கிறார்.

    இந்த நிலையில் பவானி மற்றும் தனபால் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இந்த விவரம் தனபால் வீட்டுக்கு தெரிந்து, அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தனபால் தனது காதலி பவானியுடன் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

    ஆதரவற்ற பெண்ணை தனபால் கரம்பிடிப்பதை அறிந்த அவரது நண்பர்கள் அங்கு வந்தனர். இதை தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் கரூர் கவுன்சிலர் வசுமதி பிரபு மற்றும் உறவினர்கள் தலைமையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு அந்த பகுதியில் நின்ற அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தாய், தந்தையை இழந்து உறவினர்கள் ஆதரவில் வளர்ந்து வந்த பவானிக்கு கவுன்சிலர் வசுமதி பிரபு படிப்பு உதவி அளித்து வந்த நிலையில். தற்போது திருமணத்திற்கு தேவையான மாங்கல்யம் உள்ளிட்ட செலவுகளையும் ஏற்று உதவி செய்தார் .

    ×