search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தர்"

    • மயிலாடுதுறையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது.
    • இதே போன்று ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம் ஒன்று சென்னையிலும் இருக்கிறது.

    சென்னையில் சித்தர்காடு இந்த ஊர் பெயரைக் கேட்டதும் பெரும்பாலானவர்களுக்கு, மயிலாடுதுறை மேற்கே காவிரி தென் கீழ்க்கரையின் ஓரம் அமையப் பெற்றுள்ள சித்தர்காடு எனும் ஊர்தான் நினைவுக்கு வரும்.

    மயிலாடுதுறையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது.

    இந்த ஊரில் சிற்றம்பல நாடிகள் என்பவர் தம் சீடர்களுடன் தங்கி இருந்தார்.

    அவர் சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று தமது 62 சித்தர்களுடன் ஒரே இடத்தில் ஜீவ சமாதி அடைந்தார்.

    அந்த இடத்தில் "ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் கோவில்" கட்டப்பட்டுள்ளது.

    63 சித்தர்களும் ஒரே இடத்தில் ஐக்கியமானதைக் குறிக்கும் வகையில் கருவறை சுற்றுச்சுவரில் 63 லிங்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    இதே போன்று ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம் ஒன்று சென்னையிலும் இருக்கிறது.

    இந்த இடத்தையும் சித்தர்காடு என்றே அழைக்கின்றனர்.

    பூந்தமல்லி - பட்டாபிராம் இடையில் பைபாஸ் சாலையையொட்டிய பகுதியில் இந்த புண்ணிய தலம் அமைந்துள்ளது.

    தற்போது இந்த ஊர் சித்துக்காடு என்றும் திருமணம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த ஊரில் அடங்கியுள்ள சித்தர்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி இருப்பதால் சமீப ஆண்டுகளாக இந்த ஊர், பக்தர்கள் தேடி வரும் தலமாக மாறியுள்ளது.

    • எந்த நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டு என்று அதிகாரப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
    • தமிழ் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக முன் வைத்து உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம் தேரூர் குறண்டியில் கோரக்கர் சித்தர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பிரதோஷ விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று கோரக்கர் சித்தரை வழிபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த கோவிலின் தெற்கு பகுதியில் பழங்கால தமிழ் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது, இதனைகன்னியா குமரி அருகே உள்ள கொட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சுந்தர்என்பவர் இந்த கோவிலுக்கு சென்று இருந்தபோது இந்தகல்வெட்டை கண்டுபிடித்து உள்ளார்.

    மேலும் இந்த கல் வெட்டை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து கள ஆய்வு செய்து, எந்த நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டு என்று அதிகாரப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்ட தொல்லியல்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் குறண்டி கோரக்கர் சித்தர் கோவிலை புனரமைக்க இது வழிவகுக்கும் என்றும் பக்தர்கள் கோவிலின் தொன்மையை தெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் தமிழ் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக முன் வைத்து உள்ளனர்.

    • பழனி மலை 450 அடி உயரம் கொண்டது. இதன் மீது ஏறிச் சென்றிட 697 படிகள் உள்ளன.
    • மலை மீது உட்பிரகாரத்தில் மேற்கு மூலையில் போகர் சன்னதி உள்ளது.

    இத்தலத்தின் மலை மீதிருக்கும் திருக்கோயிலில் உள்ள மூலவர் தண்டாயுதபாணியின் திருமேனி நவபாஷாணங்களை கொண்டு போகரால் உருவாக்கப்பட்டதாகும்.

    பழனி மலை 450 அடி உயரம் கொண்டது. இதன் மீது ஏறிச் சென்றிட 697 படிகள் உள்ளன.

    மலை மீதிருக்கும் தண்டாயுதபாணியை வழிபடும் முன்பாக மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் பாத விநாயகரை வணங்கிய பின் அடுத்து கிரிவலம் வரவேண்டும்.

    கிரிவல சுற்று சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவுடையது. இதன் இருபுறமும் கடம்ப மரங்களும், பிற மரங்களும் உள்ளன.

    மலை மீது உட்பிரகாரத்தில் மேற்கு மூலையில் போகர் சன்னதி உள்ளது.

    இங்குதான் போகர் சமாதி நிலையில் இருந்தாராம்.

    இங்கிருந்து முருகப் பெருமானின் சன்னதிக்கு சுரங்கப்பாதை ஒன்று உள்ளது.

    இறுதியாக இதனுள் சென்ற போகர் மீண்டு வரவேயில்லை. .

    இப்போதும்அவர் அச்சுரங்கப் பாதையினுள் தான் உள்ளார்.

    அவர் பூஜித்து வந்த புவனேஸ்வரியம்மன் சிலை இன்னும் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

    • முருகப் பெருமானின் அருளால் அவை இரண்டும் அவ்விடங்களியே பொருந்தியது.
    • குமரக்கடவுளுக்கும் அசுரனுக்கும் கடும்போர் நடந்தது.

    ஒரு சமயம் கைலாயத்தில் பழனி மலையும், இடும்பன் மலையும் சிவகிரி, சத்திகிரி என்ற இரு பிரிவுகளாக இருந்தவனாம்.

    இறைவன் இவ்விரு மலைகளையும் அகத்தியருக்குத் தந்தருளினார்.

    தனக்களித்த இருமலைகளையும் பொதிகைக்குக் கொண்டு வருமாறு அகத்தியர் பெருமான் இடும்பாகரனுக்குக் கட்டளையிட அவற்றை இடும்பன் கொண்டு சென்றான்.

    இவ்வாறு சிவகிரியையும், சக்திரியையும் அவன் தூக்கிச் செல்லும்போது களைத்து இப்போது பழனி மலையும், இடும்பன் மலையும் இருந்திடும் இடங்களில் அவற்றை வைத்தான்.

    முருகப் பெருமானின் அருளால் அவை இரண்டும் அவ்விடங்களியே பொருந்தியது.

    மீண்டும் அவற்றை தூக்க முற்பட்டபோது இடும்பனால் அவற்றை தூக்கவோ நகர்த்தவோ இயலாமல் போனது.

    இந்நிலையில் குமரப் பெருமான் அம்மையப்பன் தனக்கு ஞானப்பழத்தைத் தராமையால் சினங்கொண்டு சிவகிரி மலை மீது எழுந்தருளினார்.

    பாலகனான குமரன் குராமரத்தினடியில் தோன்றினான்.

    இதுகண்ட இடும்பாசுரன் தன்னால் மலைகளை மீண்டும் தூக்கிட இயலாமல் போனதற்குக் குமரனே காரணம் என்று எண்ணி கடும் கோபம் கொண்டவனாய் அவரை எதிர்த்துப் போரிடத் துவங்கினான்.

    குமரக்கடவுளுக்கும் அசுரனுக்கும் கடும்போர் நடந்தது.

    முடிவில் அசுரன் குமரனால் வதைப்பட்டான்.

    தன் கணவன் உயிர் நீத்ததைக் கண்டு வருந்திய இடும்பன் மனைவியான இடும்பி குமரக்கடவுளிடம் தன் கணவனை மீண்டும் உயிர்ப்பித்துத் தருமாறு வேண்ட, அவரும் அவ்வாறே செய்தருளினார்.

    உயிர் பிழைத்தெழுந்த இடும்பன் குமரப் பெருமானிடம் இரு வரங்களைக் கேட்டான்.

    அவை முருகப் பெருமானின் சன்னதியில் காவலிருக்கத் தனக்கு ஓர் இடம் வேண்டுமென்பதும், தான் இரு மலைகளையும் தூக்கி வந்தது போன்ற இத்தலத்திற்கு பக்தர்கள் இரு காவடிகளுடன் வரும்போது அவர் தம் பிரார்த்தனை நிறைவேறிட வேண்டும் என்பதாகும்.

    இடும்பனின் வேண்டுதல்படியே குமரப் பெருமானும் வரங்களைத் தந்தருளினார்.

    • பழனி மலையை சிவகிரி என்றும் இடும்பன் மலையை சக்தி கிரி என்றும் அழைப்பர்.
    • இதன் காரணமாக சினம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விட்டார்.

    சுமார் 450 அடி உயரம் கொண்ட பழனிமலை மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பிரிவுகளான வராகமலை, கொடைக்கானல் போன்ற மலைகள் சூழப்பட்ட செழிப்புடன் திகழ்ந்திடும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

    இயற்கை அழகுபட விளங்கும் இம்மலைக்கு எதிரே சற்று தொலைவில் இடும்பன் மலை உள்ளது.

    பழனி மலையை சிவகிரி என்றும் இடும்பன் மலையை சக்தி கிரி என்றும் அழைப்பர்.

    தமிழகத்தில் உள்ள முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக உள்ள ஆவினன்குடி பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

    இத்தலத்தைச் சுற்றிலும் உள்ள நகரப் பகுதியே ஆவினன்குடி என்றும், மலை பழனிமலை என்றும் அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது நகரம் மற்றும் மலை ஆகியவற்றைச் சேர்த்துப் பழனி என்று வழங்கப்படுகிறது.

    "பழனி" என்பது "பழம் நீ" என்பதன் திரிப்பு என்று தலபுராணம் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

    ஒரு சமயம் நாரத முனிவர் தன்னிடம் வழங்கிய ஞானப்பழத்தை அம்மையப்பர் தன் இளைய புதல்வனான முருகனுக்குத் தராமல் மூத்த புதல்வன் விநாயகருக்கு அளித்து விட்டார்.

    இதன் காரணமாக சினம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விட்டார்.

    அம்மையப்பர் இம்மலையில் எழுந்தருளி சினம் கொண்டிருந்த தம் புதல்வனிடம் "முருகா! பழம் நீ! பழமாக நீயே இருக்கும் போது உனக்கு எதற்கு வேறு பழம்?"

    என்று ஆறுதல் கூறியதாகவும் அம்மையப்பரால் அருளப்பட்ட "பழம் நீ" என்னும் சொற்றொடரே இத்தலத்தின் பெயராக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.

    • சுந்தரானந்த சித்தர் அவதார தின திருவிழா நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தமிழக சட்டமன்றத்தில் 2022-23ம் ஆண்டுக்கான நிதி நிலை தாக்கல் செய்தபோது இந்து சமய அறநிலையத்துறைக்கான மானிய கோரிக்கையில் தமிழகத்தில் உள்ள பதினெண் சித்தர்களோடு தொடர்புடைய கோவில் களில் ஆண்டுதோறும் சித்தர்களுக்கு விழா எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    முதற்கட்டமாக திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் கமலமுனி சித்தருக்கும், சங்கரன்கோவில் உள்ள சங்கர நாராயணன் சுவாமி கோவிலில் பாம்பாட்டி சித்தருக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரானந்தா சித்தருக்கும் கோவில்கள் சார்பில் விழா எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 3-ந்தேதி(ஞாயிற்றுக் கிழமை) கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரானந்த சித்தர் அவதார தின பெருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு மங்கள இசையும், 8 மணிக்கு திருமுறை பாராயணமும், 10 மணிக்கு புஷ்பாஞ்சலியும் நடக்கிறது. 11 மணிக்கு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், சமய சான்றோா ர்கள் முன்னிலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து "சித்தர்களின் பெருமை" என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சிவபெருமானாலேயே பெயர் சூட்டப்பட்ட சித்தர், மச்சேந்திர நாதர்.
    • கோரக்கர் வரலாறு விரிவானது

    சிவபெருமானாலேயே பெயர் சூட்டப்பட்ட சித்தர், மச்சேந்திர நாதர். அந்த சித்தர் ஒரு வீட்டு வாசலில் நின்று, உணவு கேட்டார். உணவு கொண்டு வந்த பெண், சித்தரை வணங்கி, "சுவாமி! எனக்குப் பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டும். ஆசி கூறுங்கள்!" என வேண்டி, பிட்சை இட்டாள். "உன் ஆசை நிறைவேறும்" என்ற சித்தர், விபூதியை மந்திரித்துப் பிரசாதமாக அளித்தார். "இதைச் சாப்பிடம்மா! உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்" எனக்கூறிச் சென்றார்.

    அதைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரி, "இந்த மாதிரி ஆளுங்க, மயக்கி இழுத்துக்கிட்டுப் போயிடுவாங்க. பேசாம அந்த விபூதிய அடுப்புல போட்டுடு!" என்றாள். அதை நம்பிய பெண், சித்தர் மந்திரித்துத் தந்த விபூதியை அடுப்புச் சாம்பலுடன் கலந்து, கொல்லைப்பக்கம் குப்பை மேட்டில் கொட்டி விட்டாள்.

    ஒன்பது வருடங்கள் ஆயின. சித்தர் மறுபடியும் வந்தார். தான் ஏற்கனவே விபூதி தந்த பெண் வீட்டிற்குப் சென்று, "பெண்ணே! எங்கே உன் மகன்? நான் அவனைப் பார்க்க வேண்டும்" என்றார்.

    அவர் காலில் விழுந்து வணங்கிய பெண், "சுவாமி! மன்னியுங்கள்! பக்கத்து வீட்டுக்காரியின் பேச்சைக் கேட்டு, தாங்கள் தந்த விபூதிப் பிரசாதத்தைக் குப்பைமேட்டில் போட்டு விட்டேன்" என்றாள்.

    "சரிம்மா! அந்தக் குப்பைமேடு எங்கே இருக்கிறது?" எனக் கேட்டார் சித்தர். அவரை அழைத்துப்போய் குப்பை மேட்டைக் காட்டினாள் அந்தப் பெண். அங்கு போன சித்தர், "கோரக்கா!" என்றார்.

    "என்ன?" எனக்குரல் வந்தது, குப்பை மேட்டில் இருந்து. சித்தர் உத்தரவின் பேரில் குப்பை மேட்டை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றினார்கள். அங்கே குப்பை மேட்டின் அடியில், ஒன்பது வயதான ஆண் குழந்தை ஒன்று, தவம் செய்யும் நிலையில் இருந்தது.

    அந்தக் குழந்தைதான், கோரக்கர். இந்தக் கோரக்கரால் உருவானது தான் `கோரக்கர் மூலிகை'. இதன் மகிமையை 'அருளைக் கலம்பகம்' எனும் பழைமையான தமிழ்நூல் கூறுகிறது. கோரக்கர் வரலாறு விரிவானது.

    • மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி எற்பாட்டினை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
    • கும்பகோணத்தை சேர்ந்த சிவாச்சாரியார் ரமேஷ், தமிழ் முறைப்படி வேள்வி செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் குயவர் மேட்டு தெருவில் உள்ள காங்கேயர் மடத்தில் உள்ள காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் ஆடி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. தமிழ் புலவர் காங்கேய சித்தருக்கு கும்பகோணத்தை சேர்ந்த சிவாச்சாரியார் ரமேஷ் தமிழ் முறைப்படி வேள்விசெய்தார்.

    தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. உபயத்தை பெருங்கடம்பனூரை சேர்ந்த நித்தியானந்தம், ஜெயகுமார் குடும்பத்தினர் செய்தனர்.

    மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி எற்பாட்டினை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    சித்தர் அடிமை கோணி பாபா நேற்று (செவ்வாய்க் கிழமை) மதியம் 12 மணியளவில் முக்தி அடைந்தார்.

    காஞ்சிபுரம்:

    சித்தர் அடிமை கோணி பாபா நேற்று (செவ்வாய்க் கிழமை) மதியம் 12 மணியளவில் முக்தி அடைந்தார். அவரது உடல் இன்று காலை 9 மணியளவில் பூந்தமல்லியில் உள்ள சித்தர் அடிமை கோணி பாபாவின் உலக மகா ஜோதி தவப்பீடமான அவரது ஆன்மீக தலத்தில் இருந்து புறப்பட்டு அவரது சொந்த ஊரான சுங்குவார்சத்திரம் அடுத்த கீரநல்லூரில் சமாதி செய்யப்பட்டு யோக நிறைவு விழா நடைபெறும்.

    • ஒரு மண்டலம் அதாவது 48 நாள் உரு ஜெபிப்பவர்களுக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்கும்.
    • தாங்கள் விரும்பிய சித்தர்களின் தரிசனம் பெறுவதற்கான உச்சாடன வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.

    சித்தர்கள் நமக்கு தந்த அற்புதமான பாடல்கள், மந்திரங்கள் போன்றவை அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத பரிபாசை பாடல்களாகவே இருக்கின்றன. சித்தர்கள் மீது தணியாத ஆர்வமும், அவர்களின் தரிசனம் பெறவும் பக்தர்கள் பலவாறான ஆன்மீக வழிகளில் முயற்சிகளை மேற்கொள்கிறார். சித்தர்களின் தரிசனம் மட்டும் கிடைத்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்கின்ற மனோபாவம் கொண்ட உயரிய மனிதர்களும் நமது நாட்டில் இருக்கவே செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தாங்கள் விரும்பிய சித்தர்களின் தரிசனம் பெறுவதற்கான ஒரு மந்திரம் உச்சாடன வழிமுறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    உதாரணமாக நீங்கள் தரிசிக்க விரும்புகின்ற சித்தர் அகத்திய சித்தர் என்றால் "ஓம் சிங் ரங் அங் சிங் அகத்தியர் மசி வசி" என்கின்ற மந்திரத்தை தினமும் அதிகாலை வேளையில் 108 முறை உரு ஜெபித்தல் வேண்டும் இப்படி மேற்கண்ட மந்திரத்தில், நீங்கள் காண விரும்பும் என்ற சித்தர்களின் பெயரை சேர்த்து உச்சாடனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறாக ஒரு மண்டலம் அதாவது 48 நாள் உரு ஜெபிப்பவர்களுக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்கும். இந்த 48 நாட்களும் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் தூய்மை கடைபிடித்து, திரிகரண சுத்தியோடு இந்த மந்திர உச்சாடனம் செய்தல் வேண்டும். புலால் உணவு, போதைப் பொருட்கள் உபயோகிப்பு, காம சிந்தனை மற்றும் செயல்கள் போன்றவற்றை அறவே நீக்கியவர்களுக்கு 48 நாட்களுக்கு முன்பாகவே சித்தர்களின் தரிசனம் பெறும் பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் சித்தர்களின் தரிசனம் கிடைக்க பெற்றவர்கள், அந்த சித்தர்களிடமே தீட்சை பெறும் பாக்கியமும், மெய்ஞானம் அடைவதற்கான வழியும் கிடைக்க பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

    • சித்தர்களில், 18 பேர் முக்கியமானவர்கள்.
    • அவர்கள் வாழ்ந்த கால அளவைப் பற்றி இங்கே அறியலாம்.

    அகத்தியர் - 5 யுகம் 7 நாட்கள்

    பதஞ்சலி -4 யுகம் 48 நாட்கள்

    கமலமுனி - 4 ஆயிரம் வருடம் 48 நாட்கள்

    திருமூலர் - 3 ஆயிரம் வருடம் 13 நாட்கள்

    குதம்பை முனிவர் - 1,800 வருடம் 16 நாட்கள்

    கோரக்கர் - 880 வருடம் 11 நாட்கள்

    தன்வந்திரி - 800 வருடம் 32 நாட்கள்

    சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாட்கள்

    கொங்கணர் - 800 வருடம் 16 நாட்கள்

    சட்டமுனி - 800 வருடம் 14 நாட்கள்

    வான்மீகர் - 700 வருடம் 32 நாட்கள்

    ராமதேவர் -700 வருடம் 6 நாட்கள்

    நந்தீஸ்வரர் -700 வருடம் 3 நாட்கள்

    இடைக்காடர் - 600 வருடம் 18 நாட்கள்

    மச்சமுனி - 300 வருடம் 62 நாட்கள்

    கருவூரார் - 300 வருடம் 42 நாட்கள்

    போகர் - 300 வருடம் 18 நாட்கள்

    பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாட்கள்

    வேட்டையன்பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது.
    சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று 16 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் முருகப்பெருமான் அவதாரத்தில் சித்தர் மலர் மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதேபோல் வேட்டையன்பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர் மாலையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
    ×