search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பழனி முருகன்
    X

    பழனி முருகன்

    • பழனி மலையை சிவகிரி என்றும் இடும்பன் மலையை சக்தி கிரி என்றும் அழைப்பர்.
    • இதன் காரணமாக சினம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விட்டார்.

    சுமார் 450 அடி உயரம் கொண்ட பழனிமலை மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பிரிவுகளான வராகமலை, கொடைக்கானல் போன்ற மலைகள் சூழப்பட்ட செழிப்புடன் திகழ்ந்திடும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

    இயற்கை அழகுபட விளங்கும் இம்மலைக்கு எதிரே சற்று தொலைவில் இடும்பன் மலை உள்ளது.

    பழனி மலையை சிவகிரி என்றும் இடும்பன் மலையை சக்தி கிரி என்றும் அழைப்பர்.

    தமிழகத்தில் உள்ள முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக உள்ள ஆவினன்குடி பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

    இத்தலத்தைச் சுற்றிலும் உள்ள நகரப் பகுதியே ஆவினன்குடி என்றும், மலை பழனிமலை என்றும் அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது நகரம் மற்றும் மலை ஆகியவற்றைச் சேர்த்துப் பழனி என்று வழங்கப்படுகிறது.

    "பழனி" என்பது "பழம் நீ" என்பதன் திரிப்பு என்று தலபுராணம் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

    ஒரு சமயம் நாரத முனிவர் தன்னிடம் வழங்கிய ஞானப்பழத்தை அம்மையப்பர் தன் இளைய புதல்வனான முருகனுக்குத் தராமல் மூத்த புதல்வன் விநாயகருக்கு அளித்து விட்டார்.

    இதன் காரணமாக சினம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விட்டார்.

    அம்மையப்பர் இம்மலையில் எழுந்தருளி சினம் கொண்டிருந்த தம் புதல்வனிடம் "முருகா! பழம் நீ! பழமாக நீயே இருக்கும் போது உனக்கு எதற்கு வேறு பழம்?"

    என்று ஆறுதல் கூறியதாகவும் அம்மையப்பரால் அருளப்பட்ட "பழம் நீ" என்னும் சொற்றொடரே இத்தலத்தின் பெயராக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.

    Next Story
    ×