என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Lord Muruga"
ஓம் அழகா போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அயன்மால் மருகா போற்றி
ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
ஓம் பன்னிருகை வேலவா போற்றி
ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி
ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடர் களைவோனே போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஓம்கார சொருபனே போற்றி
ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி
ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி
ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி
ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி
ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி
ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி
ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
ஓம் அறுபடை விடுடையவா போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி
ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் மகா சேனனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி
ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி
ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி
ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி
ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி
ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
ஓம் சரவணபவ சண்முகா போற்றி
ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி
ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி
ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி
ஓம் யோக சித்தியே அழகே போற்றி
ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி
ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி
ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி
ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி
ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி
ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி
ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி
ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி
ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி
ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி
ஓம் ஒளவையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி
ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி
ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி
ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி
ஓம் போற்றி... போற்றி... ஜெய ஜெய வேலவா போற்றி
- யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.
- மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்கு சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.
1. முருகனைக் குறித்துக் "குமார சம்பவம்" என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர்.
2. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.
3. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழிபட்டனர்.
4. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள்
தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர்.
இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.
5. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.
6. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.
7. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும்.
பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.
8. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம்,
குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.
9. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.
10. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.
11. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.
12. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.
13. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்கு சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.
14. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு.
விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.
15. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு.
இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.
16. பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.
17. பல்லவ மன்னர்கள் முருகனைப் பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன்,
பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் என்று செப்பேடுகள் கூறுகின்றன.
18. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே
துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோவிலின் திருக்குளம் குறித்துத் தணிகையாற்றுப் படை கூறுகின்றது.
19. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா,
மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.
20. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.
- கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான “திருப்புகழ்” நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.
- வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.
1. முருகனின் திருவுருவங்கள்: 1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர்,
6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர்,
13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்ச பேதனர், 16. சிகிவாகனர் எனப்படும்.
2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.
3. முருகனைப் பூஜிப்பதில் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி.
இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது.
(குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.
4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.
1. சூரபத்மனை வதம் செய் தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,
3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.
5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது.
சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப் பள்ளம் ஏற்பட்டது.
6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும்.
இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம்,
அங்குசம், அம்பு, வேல்என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில்
வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.
8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது.
அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார்.
வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.
9. முருகன் இறைபணி செல்வர்கள்: 1. அகத்தியர், 2. அருணகிரி நாதர், 3. ஒளவையார், 4. பாம்பன் சுவாமிகள்,
5. அப்பர் அடிகளார்,6. நக்கீரர், 7. முசுகுந்தர், 8. சிகண்டி முனிவர், 9. குணசீலர், 10. முருகம்மையார்,
11. திருமுருக கிருபானந்த வாரியார், 12. வள்ளிமலைச் சுவாமிகள், 13. குன்றக்குடி அடிகளார் ஆகியோர் ஆவார்கள்.
10. திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது.
இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.
11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தளும்
முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.
12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.
13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.
14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான்.
சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான்.
கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் "கார்த்திகேயன்" என்றும்
சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.
15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.
16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி,
கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி,
பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன்,
குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.
17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான "திருப்புகழ்" நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.
18. "முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்" என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.
19. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.
20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.
- அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- குறிப்பாக திருத்தணியில் தெப்ப உற்சவம் ஆடிக்கிருத்திகையன்று ஆரம்பிக்கிறது.
ஆடிக் கிருத்திகை முருகனுக்கு உகந்த நன்னாள்.
இந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்து தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கயிலை நாதனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த ஆறு பொறிகள் சரவணப் பொய்கையில்
ஆறு குழந்தைகளாக மாற அந்தக் குழந்தைகளை கார்த்திகை பெண்கள் எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தார்கள்.
உலக மக்களின் நன்மைக்காக உதித்த அந்த சரவணனை வளர்த்த கார்த்திகைப் பெண்களையும் சேர்த்து
நினைவு கூறும் வகையில் ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.
குறிப்பாக திருத்தணியில் தெப்ப உற்சவம் ஆடிக்கிருத்திகையன்று ஆரம்பிக்கிறது.
அரக்கர்களின் செருக்கழித்து முருகன் ஓய்வெடுத்த திருத்தலம் திருத்தணி ஆகும்.
அந்த தினத்தில் இங்கு அரக்கர்கள் வீழ்ச்சிக்கும் மக்கள் மகிழ்ச்சிக்கும் வழிவகுத்துக் கொடுத்த
இறைவனை நினைத்து பல்வேறு வழிபாடுகளை செய்வது பக்தர்களின் வழக்கம்.
- கையில் கரும்பேந்திய கந்தனை திருச்சிக்கு அருகே உள்ள செட்டிகுளத்தில் காணலாம்.
- அருணகிரிநாதருக்கு அருளிய முருகனை திருச்சி, வயலூரில் காணலாம்.
1. சென்னை திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தின் பிரகாரத்தில் சிங்காரவேலவனாக மயில் மீதமர்ந்த முருகனை தனித்தனியே யானைகள் மீது அமர்ந்த தேவியருடன் தரிசிக்கலாம்.
2.கையில் கரும்பேந்திய கந்தனை திருச்சிக்கு அருகே உள்ள செட்டிகுளத்தில் காணலாம்.
3. அருணகிரிநாதருக்கு அருளிய முருகனை திருச்சி, வயலூரில் காணலாம்.
4. கோவை கிணத்துக்கடவு எனும் கனககிரியில் உள்ள பொன்மலையில் தரிசனம் தரும் முருகனை,
பார்வை இழந்த அடியவர் ஒருவர் வழிக்குத்துணை உன் மென்மலர்ப் பாதங்கள் என திடமாக நம்ப,
அதிசயமாக அந்த அடியவர்க்கு பார்வையை மீட்டுத்தந்தவர் இந்த முருகன்.
5. பன்னிரண்டு கரங்களோடு போர்த்தளபதி கோலத்தில், தம்பதி சமேதராகவும்,
முருகனை பல்லடம் உடுமலைப்பேட்டை பாதையில் உள்ள தென்சேரிகிரி தலத்தில் தரிசிக்கலாம்.
6. நாகை, தில்லையடிக்கருகில் உள்ள திருவிடைக்கழி தலத்தில் குரு சண்டிகேஸ்வரரோடு அருள்கிறார் முருகப்பொருமான்.
7. சென்னை பாரிமுனையில் கந்த கோட்டத்தில் செல்வமுத்துக்குமார சுவாமியாக முருகன் தரிசனம் தருகிறார்.
8. கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில் வழக்கத்துக்கு மாறாக
இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது முருகன் அமர்ந்துள்ளார்.
9. திருவாரூரிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள எண்கண் தலத்தில் எட்டுக்குடி மற்றும் சிக்கல் தலங்களில் உள்ள அதே தோற்றத்தில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.
10. தென்காசிக்கு 6 கி.மீ தொலைவில் உள்ள ஆய்க்குடியில் மழலைவரம் வேண்டுவோர்க்கு
படிப்பாயசம் பிரார்த்தனை மூலம் அருளும் குழந்தை வடிவ பாலமுருகனை காணலாம்.
11. கல்லால் செதுக்கப்பட்ட வேலை தன் கரத்தில் ஏந்தி செங்கோடன், செங்கோட்டையன் எனும் பெயர்களில்
முருகப்பெருமான் திருச்செங்கோடு தலத்தில் காட்சி தருகிறார்.
12. பிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த ஐந்துமுக முருகனை ஓதிமலையில் தரிசிக்கலாம்.
கோலை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள இத்தலத்தில் நான்முகன் அடைப்பட்ட இரும்பு சிறையும் உள்ளது.
13. கோவைக்கு அருகில் உள்ள அனுவாவியில் சஞ்சீவி மலையைத் தூக்கிச் சென்ற அனுமனின் தாகத்தை தீர்த்த அழகு முருகனை தரிசிக்கலாம்.
14. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தானே மும்மூர்த்திகளாக செயல்படுவதை உணர்த்திய முருகனை
வரதராஜப்பெருமாள் என்ற பெயரில் நெல்லை மாவட்டம் இலஞ்சியில் தரிசிக்கலாம்.
15. காஞ்சிபுரத்தில் குமரக்கோட்டம் ஆலயத்தில் கச்சியப்பருக்கு கந்தபுராணத்தை இயற்ற திகடச் சக்கர எனும் முதல் அடி எடுத்து கொடுத்த வேலவனை தரிசிக்கலாம்.
16. விராலிமலையில் ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து இருபுறமும் வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள்கிறார்.
17. குமரி மாவட்டம் தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள குமார கோவிலில் வள்ளியுடன் முருகன் கருவறையில் வீற்றிருக்கிறார்.
18. பக்தர்கள் கனவில் வந்து தன் ஆலயத்திலுள்ள கண்ணாடிப் பெட்டியில் ஏதேனும் பொருளை வைக்க சொல்லி
உத்தரவிடும் முருகனை காங்கேயத்தில் தரிசிக்கலாம்.
அந்தப்பொருள் சம்பந்தமாகவே அவ்வருட நிகழ்வுகள் நடப்பது அற்புதம்.
19. தென்காசி, திருமலைக்கேணி குமாரசுவாமி ஆலயத்தில் வஜ்ராயுதம் ஏந்திய முருகனை 645 படிக்கட்டுகள் கொண்ட மலையில் ஏரி தரிசிக்கலாம்.
20. மாமல்லபுரம் கல்பாக்கம் பாதையில், திருப்போரூரில் பனைமரத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக முருகனை தரிசிக்கலாம்.
சிதம்பரசுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரம் இத்தலத்தில் முருகனுக்கு சமமாக போற்றப்படுகிறது.
- பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும்.
- கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும்.
ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி பூரண கும்பத்தில் நீர் நிரப்பி மாவிலை வைத்து தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும் அட்சதையும் வைத்து முருகனை ஆவாகனஞ் செய்து அர்ச்சித்து வழிபட வேண்டும்.
பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும்.
கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும். தியானம், ஜெபம் செய்தல் வேண்டும்.
இவ்வாறு மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகும்.
எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெறுவர்.
- கார்த்திகைப் பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள்.
- கந்தனை வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார்.
கார்த்திகைப் பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள்.
அவ்வாறு கந்தனை சீராட்டி பாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார்.
'கார்த்திகை பெண்களே, நீவிர் எம் குமாரனை இனிது வளர்த்த காரணத்தால்
உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று, விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள்
செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர்'
என்று அருள் புரிந்தார்.
கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று இரவில் உண்ணாதிருந்து கார்த்திகையன்று அதிகாலை நீராடி
முருகனை வழிபாடு செய்ய வேண்டும்.
அன்று பகலில் உறங்குதல் கூடாது.
விநாயகரின் கட்டளைப்படி நாரதமுனிவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்து
கந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார்.
- கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன்.
- செவ்வாய்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் நல்ல பலன்களை தரும்.
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன்.
செவ்வாய்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும்.
மேலும் செவ்வாய்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும்.
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், செவ்வாய்கிழமை விரதத்தை மிகவும் வலியுறுத்தி கூறியுள்ளார்கள்.
அவர், திருத்தணிகை முருகனையும், கந்தக்கோட்ட முருகனையும் முதல்நிலை கடவுளாகக் கொண்டிருந்தார்.
செவ்வாய்க்கிழமை விரதத்தை கடைபிடித்து வாழ்வில் அமைதி பெறுவோமாக!
- ஆன்ம ஒளியை அகத்தில் கண்டு தரிசிப்பதே விரதத்தின் நோக்கமாகும்.
- தீயதை நீக்கி நல்லவற்றை உண்பதும், மனம் அடங்கக் கற்பதுமே விரதத்தின் முதற்படியாகும்.
விரதம் என்பதற்று 'ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல்' என்று பொருள்.
வுஜீரத காலங்களில் சாப்பிடாமல்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.
மிதமாக உண்பதும், தீயதை நீக்கி நல்லவற்றை உண்பதும், மனம் அடங்கக் கற்பதுமே விரதத்தின் முதற்படியாகும்.
மனம் ஒடுங்க புலன் ஒடுங்கும், புலன் ஒடுங்க அகம் ஒடுங்கும், அகம் ஒடுங்க ஆன்ம ஒளி பிரகாசிக்கும்.
ஆன்ம ஒளியை அகத்தில் கண்டு தரிசிப்பதே விரதத்தின் நோக்கமாகும்.
மனதை அடக்கி இறைவன் திருவடிகளில் நிலைத்திருக்க செய்யும் தொடர் பயிற்சியின் மூலம் ஆன்ம ஒளியை தரிசிக்க முடியும்.
முருகனுக்குரிய விரதங்கள் மூன்று:
வார விரதம் : செவ்வாய்கிழமை விரதம்
நட்சத்திர விரதம் : கார்த்திகை விரதம்
திதி விரதம் : சஷ்டி விரதம்
- முருகப் பெருமான் நடனப் பிரியன். அவனே நடன சிகாமணி.
- முருகன் குடையுடன் கூத்தாடி அசுரர்களை வென்றார்.
ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான 6 மாதங்கள் சூரியன் கிழக்கில் இருந்து தென்பக்கமாக உதிக்கும் காலம்.
இக்காலத்தை தட்சிணாயன புண்ணிய காலம் என்பர்.
தை முதல் ஆனி வரையான 6 மாத காலம் சூரியன் கிழக்கில் இருந்து வடக்குப் பக்கமாக உதிக்கும்.
இதை உத்திராயண புண்ணிய காலம் என்பர்.
வடதிசை இறைவனுக்குரிய திசை.
இறைவன் வடதிசையில் வீற்றிருக்கிறான்.
தை முதல் ஆனி வரை தேவர்களுக்கு ஒரு பகல் பொழுது, ஆடி முதல் மார்கழி வரை ஒரு இரவு.
இந்த இரண்டும் சேர்ந்த பகலிரவு அவர்களுக்கு ஒரு நாள் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.
இவ் வகையில் மார்கழி வைகறைப் பொழுதாகவும், தை மாதம் இளங்காலைப் பொழுதாகவும் கொள்ளப்படுகிறது.
இறைவனைத் தொழ அவனுடைய அருளைப் பெற மிகச் சிறப்பான நேரம் வைகறைப் பொழுதும் இளங்காலைப் பொழுதுமாகும்.
சூரியன் மகர ராசியில் பிரவேசித்து உதிக்கும் நாளன்று நாம் மகர சங்கராந்தி என்று தைப் பொங்கல் நாளாகக் கொண்டாடுகிறோம்.
இந்த பிரபஞ்சத்தையும், உயிர்களையும் படைத்த இறைவன், தன் கருணையினால்,
கருவறையில் அசைவற்றுக் கிடந்த உயிர்களுக்கு, உடல் கொடுத்து, அவன் படைத்த இந்த உலகத்தையும்
அதன் பொருட்டான இயற்கையையும் நாம் அனுபவிக்கச் செய்து,
இந்த பிரபஞ்சத்தை இடையறாது இயக்கி வரும் பொருட்டு,
திருநடனம் புரிந்த தினமாகத் தைப்பூச நன்னாளை ஆன்றோர் வகுத்துள்ளனர்.
இறைவன் உயிர்கள் பொருட்டு நடனம் புரிந்த தினம் தைப்பூச தினம்.
இந்த பிரபஞ்சம் முழுவதும் அவன் திருநடனத்தால் தான் இயங்குகின்றன.
எனவே இறைவன் ஆனந்த நடனம் புரிந்த நாளாகத் தைப்பூச நன்னாளைக் கொண்டாடி வருகிறோம்.
முருகப் பெருமான் நடனப் பிரியன்.
அவனே நடன சிகாமணி.
முருகன் "குடை", "துடை", "பவுரி" என் னும் பலவகைக் கூத்துக்களை ஆடினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முருகன் குடையுடன் கூத்தாடி அசுரர்களை வென்றார்.
அதனால் அவருக்கு "சத்ரநடன மூர்த்தி" என்று பெயர்.
சிலப்பதிகாரம் முருகப் பெருமானின் கூத்தை விளக்குகிறது.
சிதம்பரத்தில் எல்லாவித இசைக் கருவிகளும் ஒலிக்க முருகன் நடனமாடினான் என்பார்கள்.
பல கோவில் சிற்பங்களில் முருகப்பெருமான் நடனம் புரியும் சிற்பங்கள் உள்ளன.
முருகப் பெருமான் நடனமூர்த்தி என்பதற்கு இவைகள் சிறந்த எடுத்து காட்டாக விளங்குகின்றன.