search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பழனி மலை பற்றிய புராண வரலாறு
    X

    பழனி மலை பற்றிய புராண வரலாறு

    • முருகப் பெருமானின் அருளால் அவை இரண்டும் அவ்விடங்களியே பொருந்தியது.
    • குமரக்கடவுளுக்கும் அசுரனுக்கும் கடும்போர் நடந்தது.

    ஒரு சமயம் கைலாயத்தில் பழனி மலையும், இடும்பன் மலையும் சிவகிரி, சத்திகிரி என்ற இரு பிரிவுகளாக இருந்தவனாம்.

    இறைவன் இவ்விரு மலைகளையும் அகத்தியருக்குத் தந்தருளினார்.

    தனக்களித்த இருமலைகளையும் பொதிகைக்குக் கொண்டு வருமாறு அகத்தியர் பெருமான் இடும்பாகரனுக்குக் கட்டளையிட அவற்றை இடும்பன் கொண்டு சென்றான்.

    இவ்வாறு சிவகிரியையும், சக்திரியையும் அவன் தூக்கிச் செல்லும்போது களைத்து இப்போது பழனி மலையும், இடும்பன் மலையும் இருந்திடும் இடங்களில் அவற்றை வைத்தான்.

    முருகப் பெருமானின் அருளால் அவை இரண்டும் அவ்விடங்களியே பொருந்தியது.

    மீண்டும் அவற்றை தூக்க முற்பட்டபோது இடும்பனால் அவற்றை தூக்கவோ நகர்த்தவோ இயலாமல் போனது.

    இந்நிலையில் குமரப் பெருமான் அம்மையப்பன் தனக்கு ஞானப்பழத்தைத் தராமையால் சினங்கொண்டு சிவகிரி மலை மீது எழுந்தருளினார்.

    பாலகனான குமரன் குராமரத்தினடியில் தோன்றினான்.

    இதுகண்ட இடும்பாசுரன் தன்னால் மலைகளை மீண்டும் தூக்கிட இயலாமல் போனதற்குக் குமரனே காரணம் என்று எண்ணி கடும் கோபம் கொண்டவனாய் அவரை எதிர்த்துப் போரிடத் துவங்கினான்.

    குமரக்கடவுளுக்கும் அசுரனுக்கும் கடும்போர் நடந்தது.

    முடிவில் அசுரன் குமரனால் வதைப்பட்டான்.

    தன் கணவன் உயிர் நீத்ததைக் கண்டு வருந்திய இடும்பன் மனைவியான இடும்பி குமரக்கடவுளிடம் தன் கணவனை மீண்டும் உயிர்ப்பித்துத் தருமாறு வேண்ட, அவரும் அவ்வாறே செய்தருளினார்.

    உயிர் பிழைத்தெழுந்த இடும்பன் குமரப் பெருமானிடம் இரு வரங்களைக் கேட்டான்.

    அவை முருகப் பெருமானின் சன்னதியில் காவலிருக்கத் தனக்கு ஓர் இடம் வேண்டுமென்பதும், தான் இரு மலைகளையும் தூக்கி வந்தது போன்ற இத்தலத்திற்கு பக்தர்கள் இரு காவடிகளுடன் வரும்போது அவர் தம் பிரார்த்தனை நிறைவேறிட வேண்டும் என்பதாகும்.

    இடும்பனின் வேண்டுதல்படியே குமரப் பெருமானும் வரங்களைத் தந்தருளினார்.

    Next Story
    ×