search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி முருகன்"

    • பழனி மலை 450 அடி உயரம் கொண்டது. இதன் மீது ஏறிச் சென்றிட 697 படிகள் உள்ளன.
    • மலை மீது உட்பிரகாரத்தில் மேற்கு மூலையில் போகர் சன்னதி உள்ளது.

    இத்தலத்தின் மலை மீதிருக்கும் திருக்கோயிலில் உள்ள மூலவர் தண்டாயுதபாணியின் திருமேனி நவபாஷாணங்களை கொண்டு போகரால் உருவாக்கப்பட்டதாகும்.

    பழனி மலை 450 அடி உயரம் கொண்டது. இதன் மீது ஏறிச் சென்றிட 697 படிகள் உள்ளன.

    மலை மீதிருக்கும் தண்டாயுதபாணியை வழிபடும் முன்பாக மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் பாத விநாயகரை வணங்கிய பின் அடுத்து கிரிவலம் வரவேண்டும்.

    கிரிவல சுற்று சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவுடையது. இதன் இருபுறமும் கடம்ப மரங்களும், பிற மரங்களும் உள்ளன.

    மலை மீது உட்பிரகாரத்தில் மேற்கு மூலையில் போகர் சன்னதி உள்ளது.

    இங்குதான் போகர் சமாதி நிலையில் இருந்தாராம்.

    இங்கிருந்து முருகப் பெருமானின் சன்னதிக்கு சுரங்கப்பாதை ஒன்று உள்ளது.

    இறுதியாக இதனுள் சென்ற போகர் மீண்டு வரவேயில்லை. .

    இப்போதும்அவர் அச்சுரங்கப் பாதையினுள் தான் உள்ளார்.

    அவர் பூஜித்து வந்த புவனேஸ்வரியம்மன் சிலை இன்னும் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

    • முருகப் பெருமானின் அருளால் அவை இரண்டும் அவ்விடங்களியே பொருந்தியது.
    • குமரக்கடவுளுக்கும் அசுரனுக்கும் கடும்போர் நடந்தது.

    ஒரு சமயம் கைலாயத்தில் பழனி மலையும், இடும்பன் மலையும் சிவகிரி, சத்திகிரி என்ற இரு பிரிவுகளாக இருந்தவனாம்.

    இறைவன் இவ்விரு மலைகளையும் அகத்தியருக்குத் தந்தருளினார்.

    தனக்களித்த இருமலைகளையும் பொதிகைக்குக் கொண்டு வருமாறு அகத்தியர் பெருமான் இடும்பாகரனுக்குக் கட்டளையிட அவற்றை இடும்பன் கொண்டு சென்றான்.

    இவ்வாறு சிவகிரியையும், சக்திரியையும் அவன் தூக்கிச் செல்லும்போது களைத்து இப்போது பழனி மலையும், இடும்பன் மலையும் இருந்திடும் இடங்களில் அவற்றை வைத்தான்.

    முருகப் பெருமானின் அருளால் அவை இரண்டும் அவ்விடங்களியே பொருந்தியது.

    மீண்டும் அவற்றை தூக்க முற்பட்டபோது இடும்பனால் அவற்றை தூக்கவோ நகர்த்தவோ இயலாமல் போனது.

    இந்நிலையில் குமரப் பெருமான் அம்மையப்பன் தனக்கு ஞானப்பழத்தைத் தராமையால் சினங்கொண்டு சிவகிரி மலை மீது எழுந்தருளினார்.

    பாலகனான குமரன் குராமரத்தினடியில் தோன்றினான்.

    இதுகண்ட இடும்பாசுரன் தன்னால் மலைகளை மீண்டும் தூக்கிட இயலாமல் போனதற்குக் குமரனே காரணம் என்று எண்ணி கடும் கோபம் கொண்டவனாய் அவரை எதிர்த்துப் போரிடத் துவங்கினான்.

    குமரக்கடவுளுக்கும் அசுரனுக்கும் கடும்போர் நடந்தது.

    முடிவில் அசுரன் குமரனால் வதைப்பட்டான்.

    தன் கணவன் உயிர் நீத்ததைக் கண்டு வருந்திய இடும்பன் மனைவியான இடும்பி குமரக்கடவுளிடம் தன் கணவனை மீண்டும் உயிர்ப்பித்துத் தருமாறு வேண்ட, அவரும் அவ்வாறே செய்தருளினார்.

    உயிர் பிழைத்தெழுந்த இடும்பன் குமரப் பெருமானிடம் இரு வரங்களைக் கேட்டான்.

    அவை முருகப் பெருமானின் சன்னதியில் காவலிருக்கத் தனக்கு ஓர் இடம் வேண்டுமென்பதும், தான் இரு மலைகளையும் தூக்கி வந்தது போன்ற இத்தலத்திற்கு பக்தர்கள் இரு காவடிகளுடன் வரும்போது அவர் தம் பிரார்த்தனை நிறைவேறிட வேண்டும் என்பதாகும்.

    இடும்பனின் வேண்டுதல்படியே குமரப் பெருமானும் வரங்களைத் தந்தருளினார்.

    • பழனி மலையை சிவகிரி என்றும் இடும்பன் மலையை சக்தி கிரி என்றும் அழைப்பர்.
    • இதன் காரணமாக சினம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விட்டார்.

    சுமார் 450 அடி உயரம் கொண்ட பழனிமலை மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பிரிவுகளான வராகமலை, கொடைக்கானல் போன்ற மலைகள் சூழப்பட்ட செழிப்புடன் திகழ்ந்திடும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

    இயற்கை அழகுபட விளங்கும் இம்மலைக்கு எதிரே சற்று தொலைவில் இடும்பன் மலை உள்ளது.

    பழனி மலையை சிவகிரி என்றும் இடும்பன் மலையை சக்தி கிரி என்றும் அழைப்பர்.

    தமிழகத்தில் உள்ள முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக உள்ள ஆவினன்குடி பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

    இத்தலத்தைச் சுற்றிலும் உள்ள நகரப் பகுதியே ஆவினன்குடி என்றும், மலை பழனிமலை என்றும் அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது நகரம் மற்றும் மலை ஆகியவற்றைச் சேர்த்துப் பழனி என்று வழங்கப்படுகிறது.

    "பழனி" என்பது "பழம் நீ" என்பதன் திரிப்பு என்று தலபுராணம் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

    ஒரு சமயம் நாரத முனிவர் தன்னிடம் வழங்கிய ஞானப்பழத்தை அம்மையப்பர் தன் இளைய புதல்வனான முருகனுக்குத் தராமல் மூத்த புதல்வன் விநாயகருக்கு அளித்து விட்டார்.

    இதன் காரணமாக சினம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விட்டார்.

    அம்மையப்பர் இம்மலையில் எழுந்தருளி சினம் கொண்டிருந்த தம் புதல்வனிடம் "முருகா! பழம் நீ! பழமாக நீயே இருக்கும் போது உனக்கு எதற்கு வேறு பழம்?"

    என்று ஆறுதல் கூறியதாகவும் அம்மையப்பரால் அருளப்பட்ட "பழம் நீ" என்னும் சொற்றொடரே இத்தலத்தின் பெயராக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.

    • அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் பல சித்தர்கள் மற்றும் ரிஷிகள் வாழும் மலையாக கருதப்படுகிறது.
    • பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந்தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    பா.ஜ.க.,ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் நாச்சியப்பன், மாநில துணை தலைவர் கண்ணபரமாத்மா, நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சுபாஷ் ஆகியோர் இந்து சமய அறநிலைய துறை ஆணையர் குமரகு ருபரனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் பல சித்தர்கள் மற்றும் ரிஷிகள் வாழும் மலையாக கருதப்படுகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும்,மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

    பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந்தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் 16 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கும்பாபி ஷேகம் நடத்தபடவில்லை.

    தமிழகத்திலேயே உண்டியல் வசூலில் முதலிடத்தில் இருக்கும் பழனி கோவில் கடந்த மார்ச் மாதம் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா உண்டியல் வருமானம், ரொக்கமாக ரூ.2.8 கோடி, தங்க ஆபரணங்கள் - 907 கிராம், வெள்ளி - 11,690 கிராம் மற்றும் வெளிநாட்டு பணங்களும் வந்தது. இந்துக்களின் நியாயமான கோரிக்கைகளும் செய ல்படுத்தப்படும் என தி.மு.க., அரசு உறுதியளித்தது.

    ஆனால் பல முறை பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று கூறி இதுவரை கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு இணை யாக பழனி கோவிலும் கொண்டுவரப்படும் என அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார். கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி "பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலையில் நடக்கும்" என அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு உறுதியளித்தார். ஆனால் அதற்கான எந்தவொரு ஏற்பாடுகளும் நடைபெறவில்லை.

    தமிழக அரசின் கீழ் செயல்படும், இந்து அறநி லைய துறைக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் ஏன் இந்துக்களும் முருக பக்தர்களும் மனம் புண்படும் வகையிலும் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளி க்காமலும், கும்பாபிஷேகம் நடத்தாமல் ஏன் காலம் தாழ்த்த வேண்டும்?

    இதை உடனடியாக பரிசீ லனை செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்துமாறு வலியுறுத்துகிறோம். மேலும் காலதாமத்திற்கான காரணத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிடவும் வலியுறுத்துகிறோம். இதற்கான தீர்வு எட்டப்ப டாத நிலையில் இதை பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் போராட்டமாக முன்னெடுக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×