search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை   விரைந்து நடத்தக்கோரி பா.ஜ.க.வினர் மனு
    X

    பா.ஜ.க.,ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டுப் பிரிவு சார்பில் இந்து அறநிலையத்துறை அதிகாரியிடம் மனு கொடுத்த போது எடுத்த படம்.

    பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்தக்கோரி பா.ஜ.க.வினர் மனு

    • அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் பல சித்தர்கள் மற்றும் ரிஷிகள் வாழும் மலையாக கருதப்படுகிறது.
    • பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந்தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    பா.ஜ.க.,ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் நாச்சியப்பன், மாநில துணை தலைவர் கண்ணபரமாத்மா, நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சுபாஷ் ஆகியோர் இந்து சமய அறநிலைய துறை ஆணையர் குமரகு ருபரனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் பல சித்தர்கள் மற்றும் ரிஷிகள் வாழும் மலையாக கருதப்படுகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும்,மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

    பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந்தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் 16 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கும்பாபி ஷேகம் நடத்தபடவில்லை.

    தமிழகத்திலேயே உண்டியல் வசூலில் முதலிடத்தில் இருக்கும் பழனி கோவில் கடந்த மார்ச் மாதம் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா உண்டியல் வருமானம், ரொக்கமாக ரூ.2.8 கோடி, தங்க ஆபரணங்கள் - 907 கிராம், வெள்ளி - 11,690 கிராம் மற்றும் வெளிநாட்டு பணங்களும் வந்தது. இந்துக்களின் நியாயமான கோரிக்கைகளும் செய ல்படுத்தப்படும் என தி.மு.க., அரசு உறுதியளித்தது.

    ஆனால் பல முறை பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று கூறி இதுவரை கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு இணை யாக பழனி கோவிலும் கொண்டுவரப்படும் என அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார். கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி "பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலையில் நடக்கும்" என அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு உறுதியளித்தார். ஆனால் அதற்கான எந்தவொரு ஏற்பாடுகளும் நடைபெறவில்லை.

    தமிழக அரசின் கீழ் செயல்படும், இந்து அறநி லைய துறைக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் ஏன் இந்துக்களும் முருக பக்தர்களும் மனம் புண்படும் வகையிலும் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளி க்காமலும், கும்பாபிஷேகம் நடத்தாமல் ஏன் காலம் தாழ்த்த வேண்டும்?

    இதை உடனடியாக பரிசீ லனை செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்துமாறு வலியுறுத்துகிறோம். மேலும் காலதாமத்திற்கான காரணத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிடவும் வலியுறுத்துகிறோம். இதற்கான தீர்வு எட்டப்ப டாத நிலையில் இதை பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் போராட்டமாக முன்னெடுக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×