search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடை"

    • 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பூக்கட்டி தான் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
    • பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதே மார்க்கெட்டில் கடை நடத்த அழைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    தஞ்சை பூச்சந்தை பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை பூக்கார தெருவில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான பூ மார்க்கெட் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. இந்த மார்க்கெட்டில் சுமார் 60 கடைகளும், மார்க்கெட்டின் வெளியே 70 மாலைக் கடைகளும் செயல்பாட்டில் உள்ளது.

    500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பூக்கட்டி தான் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சில வியாபாரிகள் சில காரணங்களால் வெளியே சென்று வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இவர்களை திரும்பவும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதே மார்க்கெட்டில் கடை நடத்த அழைக்க வேண்டும்.

    மேலும் வியாபாரிகளுக்குள் நல்ல இணக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும்.

    அதையும் மீறி வெளியில் சென்ற வியாபாரிகள் வராத பட்சத்தில் பூச்சந்தையை நம்பி உள்ள குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே பூச்சந்தையை நம்பி உள்ள குடும்பங்களை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில்வர் பட்டறை, சுவீட் கடை எரிந்து சேதமானது.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    செல்லூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் அகிம்சாபுரம் 4-வது தெருவில் சில்வர் பட்டறை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு அருகில் சுவீட் கடை உள்ளது.

    நேற்று இரவு இவர் பட்டறையை மூடிவிட்டு சென்றார். இன்று காலை பட்டறையில் இருந்து புகை வந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், செல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதற்குள் பட்டறைக்குள் தீ மளமளவென பற்றி எரிய ஆரம்பித்தது. தொடர்ந்து இனிப்பு கடைக்கும் தீ பரவியது. தல்லாகுளம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இரு கடைகளிலும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது. இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் சில்வர் பட்டறையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவசம்போர்டு நிர்வாகத்துடன் இணைந்து பேரூராட்சி நிர்வாகம் “திடீர்” நடவடிக்கை
    • இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் களைகட்டிஉள்ளது. இந்த சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறைகடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரைசாலை, மெயின் ரோடு, சன்னதி தெரு போன்ற பகுதிகளில் நடைபாதைகளைஆக்கிர மித்து தள்ளுவண்டிமற்றும் உருட்டு வண்டி கடைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    இதனால் இந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரைசாலை, காந்தி மண்டபம்பஜார், மெயின் ரோடு, பழையபஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு போன்ற பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிர மித்து வைக்கப்பட்டிருந்த 150- க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகளை பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக அகற்றினார்கள்.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலை மையில் அகஸ்தீஸ்வ ரம் தாசில்தார் ராஜேஷ் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த்ஆகியோர்முன்னிலையில்இந்தஆக்கிரமிப்புகடைகள் அகற்றும் பணி நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில்பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா உத்தரவின்பேரில் கன்னியாகுமரிபோலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் ஏராளமான போலீசார்பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். பலத்தபோலீஸ் பாது காப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

    • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
    • கன்னியாகுமரி டி.எஸ்.பி., திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டார்.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள சந்தையடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அகஸ்தீஸ்வரம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம் போல் செல்போன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த விலை உயர்ந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 10 செல்போன்கள் திருட்டுபோய் இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஒரு பெரிய கல்லை எடுத்து கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்று செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.

    செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் கன்னியாகுமரி டி.எஸ்.பி., திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டார். இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க அவர் உத்தரவிட்டார்.

    • கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 15.12.2022 முதல் 29.12.2022 வரை நடைபெறவுள்ளது.
    • மாற்றுத் திறனாளி உரிமை கோரலுக்கு ஆதாரமாக நேர்முகத் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கூட்டுறவுத் துறை ஆள் சேர்ப்பு நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:-

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சேலம் மாவட்டதில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 15.12.2022 முதல் 29.12.2022 வரை நடைபெறவுள்ளது.

    மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறையாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம், தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை மாற்றுத் திறனாளி உரிமை கோரலுக்கு ஆதாரமாக நேர்முகத் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முன்விரோதம் காரணமாக தாக்குதல்
    • பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்ட் லைப்ரரி தெருவை சேர்ந்தவர் ஐசக் ராஜன்.

    இவர் நெல்லை மாவட்டம் பணகுடி போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராகஉள்ளார். இவருக்கும் அதே தெருவை சேர்ந்த டேவிட் அய்யாப்பழம் என்பவ ருக்கும் இடையே முன்விரோ தம் உள்ளது.

    சம்பவத்தன்று ஐசக் ராஜன், தனது மனைவி ரெமிலா (வயது29) வுடன் பைக்கில் கடைக்கு புறப்பட்டார். அப்போது அங்கு டேவிட் அய்யா பழம் வந்தார்.

    அவர், ஐசக்ராஜனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதோடு அவரது கழுத்தில் கிடந்த நகையை பிடித்து இழுத்ததாகவும் இதை தட்டிக் கேட்ட ரெமிலாைவ கீழே தள்ளி தாக்கியதாகவும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது அதன் அடிப்படையில் போலீசார் டேவிட் அய்யாபழம் மீது பெண்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    • கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை
    • 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் .

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டை பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றும் முயற்சியாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் தாள்கள் ஆகியவற்றை பயன்படுத்த 01.01.2019 முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    அதன் தொடர்ச்சியாக மேற்குறிப்பிட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது கன்னி யாகுமரி மாவட் டத்தில் நன்கு குறைந்து வருகிறது. இருப்பினும், சில உணவகங்கள், டீ கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள், இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிக்கும் கடைகள் ஆகியவற்றில் அரசின் தடை ஆணையை மீறி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது தெரியவருகிறது.

    அனைத்து உணவகங்கள் டீ கடைகள் , மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், பேக்கரிகள், இனிப்பு மற்றும் காரவகைகள் முதலிய கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட ஒருமுறை பயன்ப டுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தக்கூடாது என இதன்மூலம் எச்ச ரிக்கப்படுகிறது. ஆய்வின் போது, தடையை மீறி அவ்வாறு உபயோகப்படுத்துவது கண்டறியப்பட்டால் முதல்முறை ரூ.2 ஆயிரமும், 2-வது முறை ரூ.5 ஆயிரமும், 3-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படுவதுடன் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும் என்பது இதன்மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    செய்தித்தாள் முதலிய அச்சிடப்பட்ட தாள்களில் உணவுப்பொருட்களை பாதுகாக்கவோ, பொட்டல மிடவோ பயன்படுத்தக்கூ டாது. சூடான வடை, சம்சா போன்ற தின்பண்டங்களை செய்திதாளில் வைத்து எண்ணெய்யை பிழிந்து சாப்பிடும் பொழுது செய்தித்தாளில் படிந்தி ருக்கும், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கார்பன், காட்மியம் . தாலேட் போன்ற கடின உலோகங்களும் சேர்ந்து உண்ணும்பொழுது உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது.

    அவை தொடர்ச்சியாக உடலில் சேரும்பொழுது ஜீரண மண்டலம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன .

    எனவே செய்தித்தாள் மற்றும் அச்சிடப்பட்ட தாள்களில் உணவுப்பொ ருள்களை சேமித்து வைப்பதோ , பொட்டலமிட்டு வழங்குவதோ மற்றும் உணவு பொருள்களை உண்ண வழங்குவதோ உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது .

    அவ்வாறு உபயோ கப்படுத்துவது கண்டறியப் பட்டால் அபராதம் விதிக்கப் படுவதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும்.

    டீ கடைகள், ஓட்டல்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை பயன்படுத்துவது, அச்சிடப் பட்ட தாள்களில் வடை, சம்சா கொடுப்பது போன்றவை தொடர்பாக பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க லாம் .

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 18 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
    • 11 கடைகளுக்கு அபராதம்

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலாத்த லமான கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. இந்த சீசனையொட்டி ஆங்காங்கே நடைபாதைகளில் ஏராள மான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கன்னியாகு மரியில் நேற்று குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கசிவம் நாகர்கோவில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் குமாரபாண்டியன், தக்கலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவின்ரகு ஆகியோர் கொண்ட குழுவினர் ஒரு குழுவாகவும் மேல்புறம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வின்சென்ட்கிளாட்சன், குளச்சல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி, திருவட்டார்வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்னொரு குழுவாகவும் தனித்தனியாக சென்று 50-க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    கன்னியாகுமரி கடற்கரை சாலை, மெயின்ரோடு, திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி உள்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதுகண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த கடைகளில் இருந்து 18 கிலோ 750 கிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு
    • பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு

    கன்னியாகுமரி:

    தென்தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட தென் தாமரை குளம், பூவியூர், முகிலன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், மருந்தகங்கள், ஓட்டல்கள், துணிக்கடைகள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த ஆய்வில் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள்,பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டு அதை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • சி.சி.டி.வி. காமிராவில் 2 கொள்ளையர்கள் உருவம் சிக்கியது
    • தனிப்படை போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் ஜான் செல்வன் (வயது 58).

    இவர், பார்வதிபுரம் சாரதா நகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலையில் கடைக்கு வந்தபோது கடையின் பின்பக்க சுவர் துளையிடப்பட்டு இருந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் மளிகை பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பக்கத்தில் உள்ள வெல்டிங் ஒர்க் ஷாப்பிலும் மர்ம நபர்கள் திருடி இருப்பது தெரிய வந்தது.

    சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை யர்கள் உருவம் சிக்கியது. இரண்டு கொள்ளையர்கள் மளிகை கடையில் உள்ள பொருட்களை 2 சாக்கு பைகளில் எடுத்து செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கடையில் இருந்த கைரேகைகளையும் பதிவு செய்துள்ளனர். சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற் கொண்டு உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள வாலிபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டத்தை அடுத்த முளங்குழி, முள்ளஞ்சேரியை சேர்ந்தவர் வினு (வயது 35). நகை கடை நடத்தி வருகிறார்.

    வினுவின் மனைவி அனுஷா (30). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு பொருள்கள் வாங்க சென்றார். அப்போது அங்கே மறைந்திருந்த வாலிபர் ஒருவர் திடீரென அனுஷா அருகே வந்தார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் அனுஷா கழுத்தில் கிடந்த 15 பவுன் தாலி செயினை பறித்தார்.

    அனுஷா திருடன்...திருடன் என சத்தம் போட்டார். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி யோடி தலைமறைவாகி விட்டார்.

    இதுபற்றி அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனுஷாவிடம் நகைபறித்த வாலிபரை தேடி வருகிறார்கள்.மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • பண்டிகைக்கு பொருட்களான புத்தாடைகள், இனிப்புகள், வகைகளில் தயாரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
    • தீபாவளிப் பண்டிகையை ஆண்டவர் கடை அசோகா, அல்வாவுடன் கொண்டாடுவதற்காக மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    திருவையாறு:

    வருகிற 24ந்தேதி தீபாவளிப் பண்டிகை பொதுமக்களால் கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு திருவையாறு வணிக நிறுவனங்களில் இப்பண்டிகையில் படைக்கும் பொருட்களான புத்தாடைகள், இனிப்புகள், கண்ணைக் கவரும் பல்வேறு வகைகளில் தயாரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

    திருவையாறில் பாரம்பரியமாக உள்ள ஆண்டவர் அல்வாக் கடையியில். உலக நாடுகள் வியந்து போற்றப்டும் பாசிப்பருப்பு அசோகாவும், கோதுமை அல்வாவும் தயாரிக்கப்பட்டு ஏழை மக்களும் வாங்கிப் பயனடையக் கூடிய குறைந்த விலை பாக்கெட்டுகளில் அடைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால், தீபாவளிப் பண்டிகையை ஆண்டவர் கடை அசோகா, அல்வாவுடன் கொண்டாடுவதற்காக மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    மேலும், இதர இனிப்பு மற்றும் கார வகைப் பட்சணங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் இனிப்புக் கடைகளில் லட்டு, ஜாங்கிரி, மைசூர் பாகு, பால்கோவா முதலிய கண்கவரும் வண்ணங்களிலும் நாவூறும் சுவைகளிலும் தீபாவளியை முன்னிட்டு பிரத்யேகமாக தயாரித்து மிகக் குறைந்த விலையிலான அளவுகளில் அட்டைப்பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.

    திருவையாறில் பாரம்பரி யமாக நடக்கும் மகாத்மா காந்தியின் அறக்கட்டளை நிறுவன மான சர்வோதய சங்கம் மற்றும் தனியார் ஜவுளி நிறுவனங்களில் தீபாவாளிக்காக சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான புத்தாடைகள் தருவிக்க ப்பட்டு விற்கப்படுகிறது.

    உள்ளூர் தயாரிப்பு பபட்டாசுளும் சிவகாசி முதலிய வெளியூர் தயாரிப்புப் பட்டாசுகளும் திருவையாறு கடைத்தெ ருவில் விற்பனை செய்ய ப்படுகிறது.

    ×