search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்1 பி விசா"

    • 63 ஆயிரத்து 172 பேருக்கு முதல் தவணையும், ஐந்து லட்சத்து 60 ஆயிரத்து 603 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.
    • வெளிநாடு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை (12-ந் தேதி) மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. 2,681 இடங்களில், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில்12 - 14 வயதினர், 15-18 வயதினர், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 21 லட்சத்து, 83 ஆயிரத்து 700 பேர் உள்ளனர். இதுவரை 21 லட்சத்து 20 ஆயிரத்து 528 பேருக்கு முதல் தவணையும், 16 லட்சத்து, 20 ஆயிரத்து 103 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    மேலும் 63 ஆயிரத்து 172 பேருக்கு முதல் தவணையும், ஐந்து லட்சத்து 60 ஆயிரத்து 603 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. நாளை 12-ந் தேதி 30வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.மருத்துவ கல்லுாரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் 2,681 இடங்களில் முகாம் நடக்கிறது.

    ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் ஒரு நபர் கூட விடுபடாமல் கிராமங்களிலும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியில் தடுப்பூசி கிடைக்க, தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது.முகாமில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதம் அல்லது 39 வாரம் கடந்த சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.பல்வேறு துறைகளை சேர்ந்த 5,362 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். நல்வாய்ப்பினை இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    நாளை நடக்கும் முகாமில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் கடந்த வெளிநாடு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதுவரை முகாமில், 18 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று நடக்கும் முகாமில், 15 - 18 வயது பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.தடுப்பூசி முகாமில் மக்கள் பயன்பெற ஏதுவாக முகாம் நடக்கும் நேரம் இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை, 7 மணி முதல், இரவு 7 மணி வரை மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்.

    சுகாதாரத்துறை மூலம் வாராந்திர முகாம் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மாதாந்திர மெகா முகாம்கள் நடத்தப்படுகிறது. கடந்த, 8-ந் தேதிக்கு பின் ஐந்து வாரங்களாக முகாம் நடக்காத நிலையில், மாவட்ட சுகாதாரத்துறை வசம் 4.40 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்து கையிருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ரூ.1½ லட்சம் கடனுக்கு ரூ.3 லட்சம் கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொங்கு நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு( 40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு சம்பத் நகர் நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் முகமது ஷெரீப் (35) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருநாவுக்கரசிடம் வட்டிக்கு ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடன் தொகைக்கான தவணையை முறையாக செலுத்த முடியவில்லை. இதையடுத்து திருநாவுக்கரசு முகமது ஷெரீப்பிடம் வாங்கிய ரூ.1.50 லட்சத்திற்கு வட்டிக்கு வட்டி போட்டு ரூ.3 லட்சமாக கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். பணத்தை தர மறுத்தால் கொலை செய்வதாக திருநாவுக்கரசு மிரட்டியும் உள்ளார்.

    இதுகுறித்து முகமது ஷெரீப் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருநாவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கந்து வட்டி தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மறுநாளே ஈரோட்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த பைனான்ஸ் அதிபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை முறையில் மாற்றம் செய்ய தீர்மானித்துள்ள அதிபர் டிரம்ப் தகுதி, திறமையின் அடிப்படையில் 57 சதவீதம் வெளிநாட்டினருக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினருக்கு ஆண்டு தோறும் 11 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. நெருங்கிய குடும்ப உறவுகள் அடிப்படையில் 66 சதவீதம் பேருக்கும் திறமை அடிப்படையில் 12 சதவீதம் பேருக்கும் குடியுரிமை வழங்கப்படுகிறது.

    இந்த முறையில் மாற்றம் செய்து வேலை மற்றும் திறமை அடிப்படையில் 57சதவீதம் வெளிநாட்டினருக்கு கிரீன்கார்டுகளுக்கு பதிலாக ‘அமெரிக்காவை கட்டமைக்கும்’ (Build America visa) குடியுரிமைகளை வழங்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

    தற்போதைய குடியுரிமை சட்டங்கள் மேதாவிகள் மற்றும் புத்திசாலிகளை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளன. மிகவும் குறைந்த கூலி வாங்குபவர்கள்தான் வெளிநாடுகளில் இருந்து இங்கு அதிகமாக வருகின்றனர். இந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.

    நாம் உருவாக்க விரும்பும் அமெரிக்காவுக்காக வெளிநாட்டினருக்கு கதவுகளை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆனால், இவர்களில் பெரும்பகுதியினர் தகுதி மற்றும் திறமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

    இப்படிப்பட்டவர்களுக்கு தற்போது 12 சதவீதமாக வழங்கப்படும் குடியுரிமையை 57 சதவீதமாக உயர்த்தவும் தேவைப்பட்டால் அதற்கு மேல் அதிகரிக்கவும் வேண்டிய மிகப்பெரிய மாற்றத்தை நாம் செய்ய வேண்டியுள்ளது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


    இந்தமுறை அமல்படுத்தப்பட்டால் ‘எச்.1பி.’ விசாவில் அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பல இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே ‘எச்.1பி.’ விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலர், கடந்த பல ஆண்டுகளாக ‘கிரீன்கார்டு’ பெறுவதற்காக விண்ணப்பித்து காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த புதிய திட்டம் பெரிதும் பயனுள்ளதாக அமைய உள்ளது.

    டிரம்பின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் சம்மதம் தெரிவிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த திட்டம் குறித்து ஆளும் குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு டிரம்ப் விளக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இத்திட்டத்துக்கு ஜனநாயக கட்சியினர் ஒப்புக்கொண்டால் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், மறுத்துவிட்டால் இந்த விவகாரத்தை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பிரச்சனையாக எழுப்பவும் ஆளும் குடியரசுக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
    தஞ்சை மாவட்ட பிளஸ்-1 தேர்வு முடிவுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா வெளியிட்டார். தேர்ச்சி சதவீதம் 95.85 ஆகும். இது கடந்தை ஆண்டைவிட 4.82 சதவீதம் கூடுதலாகும். #Plus1Results
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பிளஸ் 2 , எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு போல் பிளஸ் 1 க்கும் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேர்வானது கடந்த ஆண்டு முதல் முறையாக நடைபெற்றது. அதன்படி பிளஸ் 1 பொது தேர்வுகள் கடந்த மார்ச் 6ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை‌, தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலும் மொத்தம் 27 ஆயிரத்து 386 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 12 ஆயிரத்து 98 பேரும், மாணவிகள் 15 ஆயிரத்து 288 பேரும் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மார்ச் இறுதியில் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையினர் அறிவித்தபடி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

    தஞ்சை மாவட்ட பிளஸ்-1 தேர்வு முடிவுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா வெளியிட்டார். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மாணவர்கள் 11 ஆயிரத்து 378 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 872 பேர் என மொத்தம் 26 ஆயிரத்து 250 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.85 ஆகும். இது கடந்தை ஆண்டைவிட 4.82 சதவீதம் கூடுதலாகும். அதேபோல் மாநில அளவில் தஞ்சை மாவட்டம் கடந்த ஆண்டு 21 வது இடத்தை பிடித்துருந்தது. ஆனால் இந்த ஆண்டு 4 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்துள்ளது.

    பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. மேலும் அரசு இணையதளத்திலும் முடிவு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவை காண மாணவர்கள் அந்தந்த பள்ளி முன்பு காலையில் இருந்தே திரண்டனர். அங்கு நோட்டீஸ் பலகையில் ஒட்டப்பட்ட மதிப்பெண் விவரங்களை பார்த்தனர். #Plus1Results
    தமிழகத்தில் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. #TNResults #11thResult #Plus1Result
    சென்னை:

    தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுள்ளது.

    www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


    11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.5 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 90.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 2636 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பிளஸ்1 தேர்வு எழுதிய 78 சிறைக் கைதிகளில் 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 98.08 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் 97.90 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், கோவை மாவட்டம் 97.60 சதவீத தேர்ச்சியுடன் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது. 89.29 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. #TNResults #11thResult #Plus1Result
    எச்-1 பி விசா பெற்று அமெரிக்காவில் வசிப்பவர்கள் வேறு வேலைக்கு மாறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #H1B #trump

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர்களுக்கு எச்-1 பி என்ற விசா வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் அவர்கள் அந்த நாட்டில் வேலை பார்க்க அனுமதி கிடைக்கிறது. குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் இந்த விசாவில் தங்கி இருந்து வேலை பார்க்கலாம்.

    பின்னர் நிரந்தரமாக வேலை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு கிரீன் கார்டு விண்ணப்பித்து பெற முடியும். நீண்ட காலம் இங்கு குடியிருந்தால் அமெரிக்க குடியுரிமையும் கிடைக்கும்.

    ஆனால், அதிபராக டிரம்ப் வந்த பிறகு வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணி புரிவதற்கு பல கட்டுப் பாடுகளை கொண்டு வந்துள்ளார்.

    இதன்படி எச்-1 பி விசா முறையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்காவில் இனி வேலை பெறுவது கடினமான ஒன்றாக மாறி இருக்கிறது.

    இதற்கு முன்பு எச்-1 பி விசா மூலம் வேலையில் இருப்பவர்கள் தேவைப்பட்டால் வேறு வேலைகளுக்கு மாறிக்கொள்ளலாம். ஆனால், இப்போதுள்ள விதிமுறைப்படி வேறு வேலைகளுக்கு மாற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


     

    முன்பு எல்லா விதமான வேலைகளுக்கும் எச்-1 பி விசா வழங்கப்பட்டது. இப்போது வேலைகளை உயர் தகுதி பட்டியல் என பிரித்து அந்த பட்டியலில் உள்ள வேலைகளுக்கு மட்டுமே எச்-1 பி விசா வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒரு நபர் குறிப்பிட்ட வேலையில் பணியாற்றி வரும் நிலையில் அதே மாதிரியான வேலையை இன்னொரு நிறுவனத்தில் செய்வதற்காக மாறி செல்ல முடியாது. அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் அந்த வேலையை உயர் தகுதி பட்டியலில் சேர்த்து அனுமதி பெற்று இருந்தால் மட்டுமே அதில் சேர முடியும்.

    இதற்காக அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட பணியாளருக்காக எச்-1 பி விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். உயர் தகுதி பட்டியலில் அந்த வேலை இருந்தால் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும்.

    சம்பந்தப்பட்டவர்களும் அந்த வேலையில் சேர முடியும். ஆனால், பெரும்பாலான வேலைகளை உயர் தகுதி பட்டியலில் சேர்க்கவில்லை.

    எனவே, குறிப்பிட்ட வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு மாற முடியாத நிலை எச்-1 பி விசாதாரர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

    அது மட்டும் அல்லாமல் அவர்கள் தங்கள் மனைவி- குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்து செல்வதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன.

    இந்தியாவில் இருந்து பல லட்சம் பேர் எச்-1 பி விசா பெற்று அமெரிக்காவில் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு இதன் மூலம் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #H1B #trump

    பார்முலா1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 06.350 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். #Formula1 #Hamilton
    ஷாங்காய்:

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 3-வது சுற்றான சீனா கிராண்ட்பிரி போட்டி ஷாங்காய் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 305.066 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் பங்கேற்ற 20 வீரர்களும் போட்டி தொடங்கியதும் காரில் சீறிப்பாய்ந்தனர். பரபரப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 06.350 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார்.

    பின்லாந்து வீரர் வால்ட்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 6.552 வினாடிகள் பின்தங்கி 2-வது இடத்தையும், ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரீ) 13.744 வினாடிகள் பின்தங்கி 3-வது இடத்தையும் பெற்றனர். இந்த ஆண்டில் லீவிஸ் ஹாமில்டன் 2-வது முறையாக முதலிடத்தை தனதாக்கி இருக்கிறார். இந்த போட்டி தொடரில் மெர்சிடஸ் அணியை சேர்ந்த லீவிஸ் ஹாமில்டன், வால்ட்டெரி போட்டாஸ் ஆகியோர் தொடர்ந்து 3-வது முறையாக முதல் 2 இடங்களுக்குள் வந்துள்ளனர்.

    3-வது சுற்று முடிவில் லீவிஸ் ஹாமில்டன் 68 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வால்ட்டெரி போட்டாஸ் 62 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 4-வது சுற்று போட்டி அஜர்பைஜானில் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
    சென்னையில் தேர்தலை பயன்படுத்தி பறக்கும் படை என்ற பெயரில் ரூ.1 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiRobbery
    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் இயங்கி வரும் ஒரு கட்டுமான நிறுவனத்தில் உதயகுமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் வேப்பேரியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் தொழில் ரீதியாக 1 கோடியே 7 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.

    பணத்துடன் அவர் காரில் சென்று கொண்டிருந்தார். காருக்குள் அவருடன் டிரைவர் மற்றும் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரும் இருந்தனர்.

    சைதாப்பேட்டை பஸ் நிலையம் அருகில் அவர்கள் கார் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் முன்னே சென்று மறித்து தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் தங்களை தேர்தல் அதிகாரி என்று கூறிக் கொண்டனர்.

    காரை சோதனையிட வேண்டும் என்று சொல்லி சோதனையிட்டனர்.

    அப்போது கட்டுமான நிறுவனத்துக்காக வாங்கியிருந்த ரூ.1 கோடி பணம் இருப்பதை கண்டு பிடித்தனர். அதை எடுத்துக் கொண்ட அந்த நபர்கள் இந்த பணத்துக்கு உரிய கணக்கை காட்டுங்கள் என்று கேட்டனர்.

    பிறகு அவர்கள் ரூ.1 கோடி பணத்தை எடுத்துக் கொண்டு உதயகுமாரை தங்களது காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பூந்தமல்லி அருகே சென்றபோது அவர்கள் உதயகுமாரை அடித்து உதைத்து காரில் இருந்து வெளியே தள்ளி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    அதன் பிறகே உதயகுமாருக்கு தேர்தல் பறக்கும் படை என்ற பெயரில் மர்ம நபர்கள் தன்னை ஏமாற்றி ரூ.1 கோடியை பறித்துச் சென்று இருப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி உதயகுமார் சைதாப்பேட்டை போலீசில் நேற்று இரவு புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உண்மையிலேயே பறக்கும் படை என்ற பெயரில் மர்ம நபர்கள் ரூ.1 கோடியுடன் தப்பி சென்றார்களா? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. #ChennaiRobbery
    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னாபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகள் அமுதா (வயது 7). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மகேஸ்வரி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த 2 மாதங்களாக தனது மகளுடன் வசித்து வந்தார்.

    இவர் நேற்று தனது மகள் அமுதாவை பள்ளியில் விட்டு விட்டு கட்டிட வேலைக்கு சென்றார். ஜாக்டோ- ஜியோ போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. எனவே பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

    இதனையடுத்து அமுதா வீட்டுக்கு திரும்பினார். பின்னர் வீட்டின் முன்புறம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் மீன்களை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீரென நிலை தடுமாறி 7 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய மகேஸ்வரி தனது மகளை அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது மகள் அமுதா தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

    இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசா பிராசசிங் நடைமுறை நாளை தொடங்கும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு அறிவித்து உள்ளது. #H1BVisa
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 3 ஆண்டு காலம் தங்கி இருந்து வேலை பார்ப்பதற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வழங்கப்படுகிற விசா ‘எச்-1 பி’ விசா ஆகும். இந்தியாவில் ஐ.டி. என்று அழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடம் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது. குறிப்பாக 70 சதவீதம் ‘எச்-1 பி’ விசாக்கள் இந்தியர்களுக்கே கிடைக்கிறது.

    அமெரிக்க நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்களை இந்த விசாவின் கீழ் பணி அமர்த்துவது வழக்கம். குறிப்பாக மைக்ரோசாப்ட், அமேசான், கூகுள் நிறுவனங்கள் இந்த விசாவின்கீழ்தான் வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது. அமெரிக்க அரசு, ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்குகிறது. இது தவிர்த்து அமெரிக்காவில் உயர்கல்வி பெற்றவர்கள் 20 ஆயிரம் பேருக்கு கூடுதலாக இந்த விசா வழங்கப்படும். இந்த விசாக்கள் வழங்குவதற்கான பிரிமியம் பிராசசிங் என்று அழைக்கப்படுகிற சிறப்பு பரிசீலனை நடைமுறையை அமெரிக்கா கடந்த ஆண்டு திடீரென நிறுத்தி வைத்தது.

    இந்த நிலையில் மறுபடியும் ‘எச்-1 பி’ விசா பிராசசிங் நடைமுறை நாளை (திங்கட்கிழமை) தொடங்கும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு அறிவித்து உள்ளது. ஒரு விண்ணப்பதாரர் தனது ‘எச்-1 பி’ விசா விண்ணப்பத்தை ‘பிரிமியம் பிராசசிங்’ நடைமுறையை பின்பற்றி பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டு, உரிய கட்டணத்தை செலுத்திவிட்டால், இதுபற்றி அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு 15 நாளில் பரிசீலித்து முடிவு எடுத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
    அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினர் திறமைசாலிகளாக இருந்தால் மட்டுமே இனி எச்1-பி விசா வழங்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். #HIBVisa #DonaldTrump #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் எச்-1 பி விசா மூலம் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு உள் நாட்டினருக்கு பணி வழங்குவதில் ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்டவை முன்னுரிமை வழங்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

    அதன் காரணமாக ‘எச்-1 பி’ விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிவது கனவாகி போனது. இந்த நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.


    அதில் ‘எச்-1 பி’ விசா வழக்குவதற்கான நடைமுறைகள் விரைவில் மாற்றப்படும். அது மிகவும் எளிமையாக இருக்கும். வெளிநாட்டினர் இங்கேயே தங்கியிருக்கலாம். குடியுரிமையும் பெறலாம்.

    ஆனால் அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினர் திறமைசாலிகளாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

    எனவே ‘எச்-1 பி’ விசாவுக்கான விண்ணப்பம் கடுமையாக ஆராயப்படும். அதன் பிறகே வெளிநாட்டினருக்கு அதற்கான விசா வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பின் கடந்த 2 ஆண்டுகளாக ‘எச்-1 பி’ விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் பணி நீட்டிப்பு கிடைப்பதில் சிக்கல் இருந்தது. அதன் காரணமாக அங்கு பணிபுரிந்து வரும் இந்தியர்களும், புதிதாக பணிக்கு அமெரிக்கா செல்ல தயாராக இருந்த இளைஞர்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

    தற்போது டிரம்பின் இந்த அறிவிப்பால் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கிறிஸ்ட்ஜென் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

    திறமையான வெளி நாட்டினர் மட்டுமே இங்கு தங்கி வேலை பார்க்க வேண்டும் என எம்.பி.க்கள் விரும்புகின்றனர். எனவே அவர்களுக்கே ‘எச்-1பி’ விசா வழங்கப்படும் என்று கூறினார். #HIBVisa #DonaldTrump #Trump
    சென்னை பெருங்குடியில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். மீன் வியாபாரி.

    அவர் மனைவி மற்றும் குடும்பத்துடன் 15 வருடங்களாக பெருங்குடி பகுதியில் வசித்து வந்தார்.

    கடந்த 3 வருடங்களாக தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் பெருங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 205 பேர் தீபாவளி சீட்டு போட்டு இருந்தனர்.

    அவர்களிடம் ரூ.1 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருந்தார். தீபாவளிக்கு முன்பு சீட்டுக்குரிய பொருட்கள் வாங்கி வருவதாக கூறி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.

    அதன் பின்னர் அவர் ஊர் திரும்பவில்லை. குடும்பத்துடன் தப்பி சென்று விட்டது தெரிய வந்தது. அதையடுத்து அவரிடம் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்துள்ளனர்.
    ×