search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூச்சந்தை வியாபாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மனு
    X

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பூச்சந்தை வியாபாரிகள்.

    பூச்சந்தை வியாபாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மனு

    • 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பூக்கட்டி தான் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
    • பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதே மார்க்கெட்டில் கடை நடத்த அழைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    தஞ்சை பூச்சந்தை பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை பூக்கார தெருவில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான பூ மார்க்கெட் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. இந்த மார்க்கெட்டில் சுமார் 60 கடைகளும், மார்க்கெட்டின் வெளியே 70 மாலைக் கடைகளும் செயல்பாட்டில் உள்ளது.

    500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பூக்கட்டி தான் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சில வியாபாரிகள் சில காரணங்களால் வெளியே சென்று வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இவர்களை திரும்பவும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதே மார்க்கெட்டில் கடை நடத்த அழைக்க வேண்டும்.

    மேலும் வியாபாரிகளுக்குள் நல்ல இணக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும்.

    அதையும் மீறி வெளியில் சென்ற வியாபாரிகள் வராத பட்சத்தில் பூச்சந்தையை நம்பி உள்ள குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே பூச்சந்தையை நம்பி உள்ள குடும்பங்களை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×