search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடை"

    • புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் பார் நடத்த தேவையான இடத்தை, மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
    • டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைத்தால் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மன் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் பார் நடத்த தேவையான இடத்தை, மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடை அமைக்க பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், அம்மன் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைத்தால் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் டாஸ்மாக் கடை அமைக்க பூமி பூஜை போட வந்தவர்களையும், பொக்லைன் எந்திரத்தையும் முற்றுகையிட்டனர். இதையடுத்து, பூமி பூஜை போடும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

    • காளிமுத்து தேவிபட்டணம் மந்தையில் பழக்கடை மற்றும் ஜுஸ் கடை நடத்தி வருகிறார்.
    • தங்க முனீஸ்வரன்,அய்யனார் ஆகியோர் தின்பண்டங்களையும் அள்ளி சென்றனர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தேவிபட்டணம் மந்தையில் காளிமுத்து என்பவர் பழக்கடை மற்றும் ஜுஸ் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு 10 மணியளவில் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். இரவு 11 மணி அளவில் அதே ஊரைச் சேர்ந்த தேவர் மணல் மேட்டுத் தெருவை சேர்ந்த தங்க முனீஸ்வரன் (வயது 26) மற்றும் அய்யனார் (வயது 20) ஆகிய இருவரும் கூட்டாக கடையில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே சென்று ரூ.10 ஆயிரம் மற்றும் தின்பண்டங்களையும் அள்ளிக்கொண்டு சென்றனர். அப்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதை பார்த்து சிவகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர்.

    • வழக்கம்போல் காலை கடை திறக்கும் போது பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது
    • கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடி சென்றது தெரிய வந்தது.

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரம் மேலசாலையை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் என்ற மணி (வயது 50). இவர் கீழசாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இவர் வழக்கம்போல் காலை கடை திறக்கும் போது பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது, உள்ளே சென்று பார்த்த போது கடையில் ஏதோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடி சென்றது தெரிய வந்தது. இதே போல் அதன் அருகில் உள்ள முருகானந்தம் என்ப வரின் பேன்சி ஸ்டோரிலும் பூட்டை உடைத்து டிராயரில் இருந்த ரூ. 6 ஆயிரத்தையும் திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து தென்தாமரைகுளம் போலீசில் ஜெயச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர் .

    • கடைகளின் டெண்டர் மார்ச் 10ஆம் தேதி விடப்படும் என அறிவிக்கபட்டிருந்தது.
    • டெண்டர் எடுத்தவரிடம் வியாபாரிகள் பழைய முறையிலேயே வாடகை களை வசூலிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா வருகின்ற வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெற உள்ளது.திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகளின் டெண்டர் மார்ச் 10ஆம் தேதி விடப்படும் என அறிவிக்கபட்டிருந்தது.குறிப்பிட்ட தொகை வராத காரணத்தினால் 10ம் தேதி நடக்க இருந்த டெண்டரை மீண்டும் 20 ஆம் தேதி மாற்றி வைத்தனர்.

    இந்த நிலையில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோவில் நிர்வாகமே கடைகளை வாடகைக்கு விட வேண்டும் .டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று மனு அளித்திருந்தனர்.நேற்றுகாலை 10 மணி அளவில் டெண்டர் நடைபெறும் என்று அறிவிக்க ப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மாலை 4 மணிக்கு மாற்றி வைக்கப்பட்டது. வியாபாரிகள் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து செயல் அலுவலக அலுவலர் அலுவலகம் முன்பு கூடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கோவில் தக்கார் பெரிய மருதுபாண்டி ஆய்வாளர் ஆதிரைகோவில் செயல் அலுவலர் காளிமுத்து ஆகியவர்கள் முன்னிலையில் டெண்டர் நடைபெற்றது. இந்த டெண்டரை ஈட்டு வீராம்பாளையம் ஊராட்சி சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் ரூ 7லட்சத்து பத்தாயிரத்திற்கு டென்டரை எடுத்தார்.மேலும் டெண்டர் எடுத்தவரிடம் வியாபாரிகள் பழைய முறையிலேயே வாடகை களை வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.

    • கட்டுபாட்டை இழந்த லாரி அருகிலிருந்த கடைமீது மோதி நின்றது.
    • சாலையில் வாகனங்கள் குறைவாக காணப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் பகுதியில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்துபுரத்திற்கு சிமென்ட் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது லாரியை அமரவிளை பகுதியை சேர்ந்த பெர்னார்டு ஜோசப் (வயது 60) ஓட்டினார்.

    இரவிபுதூர்கடை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்தபோது சாலையில் ஒருவர் குறுகே ஒடியுள்ளதாக தெரிகிறது. அவர் மீது லாரி மோதாமல் இருக்க டிரைவர் திடீரென திருப்பியுள்ளார். அப்போது கட்டுபாட்டை இழந்த லாரி அருகிலிருந்த கடைமீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிகாலையில் சாலையில் வாகனங்கள் குறைவாக காணப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. இந்த விபத்து குறித்து தக்கலை போக்குவரத்து துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

    • 6 கடைகளை கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது.
    • திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் மேற்கு பிரதான சாலையில் 6 கடைகளை கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் மளிகை கடை, துணிக்கடை, பேன்சி கடை, இ சேவை மையம் மற்றும் முடி திருத்தகம் என 5 கடைகள் செயல்பட்டு வருகிறது .ஒரு கடை காலியாக உள்ளது.

    இதே வீதியில் திருப்பூர் மத்திய காவல் நிலையம் சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 5 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர் .இதில் மளிகை கடையில் விலை உயர்ந்த சாக்லேட்டுகளை எடுத்து சாப்பிட்டு விட்டு குப்பைகளை அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளனர். மேலும் கடைகளில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர்.

    இன்று காலை கடையை திறக்க உரிமையாளர்கள் வந்த போது அனைத்து கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கொள்ளை போனது தெரியவந்தது .

    இதனையடுத்து கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மத்திய காவல் நிலையம் அமைந்துள்ள அதே வீதியில் சிறிது தூர இடைவெளியில் நடைபெற்றுள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • 25 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    • பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக எச்சரிக்கை நோட்டீசும் கொடுக்க நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டிய ராஜன் தலைமையில் உதவி மேலாளர்நாகராஜன், உதவிசுற்றுச் சூழல் பொறி யாளர் கலைவாணி, உதவி பொறியாளர் ஜெனிஷா, கன்னியாகுமரி சிறப்பு நிலைபேரூராட்சி சுகாதார அதிகாரிமுருகன் சுகாதார மேற்பார்வையா ளர் பிரதீஷ் மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

    கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரைபகுதி, சன்னதி தெரு, ரத வீதிகள், மெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, கடற்கரை சாலை உள்பட பல்வேறு இடங்களில் 150-க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் கடைகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி யது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்தகடைகளில்இருந்து மொத்தம் 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும ஒரு சில கடைகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக எச்சரிக்கை நோட்டீசும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • 17 கடை களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    • கடைகள் சீல் வைக்கப்பட்டதால் மீன் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு அருகே சரலூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஏராளமான கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் 17 கடை வியாபாரிகள் வாடகை பாக்கியை சரிவர கட்டாமல் இருந்தனர். ரூ. 8 லட்சத்து 47 ஆயிரத்து 86 வாடகை பாக்கி இருந்தது.

    இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லை.இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்க மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் உத்தரவிட்டார்.

    நிர்வாக அதிகாரி ராமமோகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் சுப்பையா, ஞானப்பா, ஆல்ரின், சேகர், இளநிலை உதவியாளர் சாகுல் உள்பட அதிகாரிகள் இன்று காலை சரலூர் மீன் சந்தைக்கு சென்றனர். அப்போது வாடகை பாக்கி கட்டாத கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து வாடகை பாக்கி கட்டாத கடைகள் சீல் வைக்கப்பட்டது. 17 கடை களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடைகள் சீல் வைக்கப்பட்டதால் மீன் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடைகள் சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து வியாபாரிகள் சிலர் வாடகை பாக்கியை கட்டுவதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற னர். வாடகைப் பாக்கி கட்டியதற்கான நகல் வாங்கியதும் சீல்கள் அகற்றப்பட்டு வியாபாரிகளிடம் மீண்டும் கடை திறந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.

    • இரணியல் போலீசார் 4 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை
    • ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள பேயன்குழி அடுத்த கல்லுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கசுவாமி (வயது 53). இவர் பேயன்குழி சந்திப்பில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 8 மாதங்களுக்கு முன்பு பேயன்குழியைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து ரூ.2900-க்கு ஜவுளிகள் வாங்கியதாக தெரிகிறது. பின்னர் ரூ.200 கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை மறுநாள் ஏ.டி.எம்.மில் எடுத்து தருவதாக கூறிச் சென்றுள்ளனர். ஆனால் கடந்த 8 மாதங்களாக கடனை திருப்பிக் கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை தங்கசுவாமி கடனை திருப்பி கேட்க பேயன்குழி சென்றுள்ளார். அப்போது மோகன்ராஜ் மகன் நிகேஷ், அவரது நண்பர்கள் 3 பேர்கள் என 4 பேர் சேர்ந்து தங்கசுவாமியை தடுத்து நிறுத்தி அவதூறாக பேசி கம்பு மற்றும் கல்லால் தாக்கி உள்ளனர். மேலும் அவரது செல்போனை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் தங்கசுவாமிக்கு கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயமும், கல்லால் தாக்கியதில் மேல் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

    தங்கசுவாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தங்கசுவாமி இரணியல் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நிகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் என 4 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை திருப்பி கேட்ட ஜவுளிக்கடை உரிமையாளரை 4 பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவட்டார் பஸ் நிலையத்தின் முன்புற பகுதி மிகவும் நெருக்கடியான பகுதி ஆகும்.
    • நேரக் குறிப்பாளர் அலுவலகம் திருவட்டார் மீன் சந்தை அருகில் மாற்றப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் முக்கிய மானது திருவட்டார் ஆதிகே சவன் பெருமாள் கோவில். கடந்த ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினமும் ஏராளமானோர் ஆதிகேசவன் கோவிலுக்கு வருகை தருகின்றனர். வெளியூர் வாகனங்கள், பஸ்கள் அதிகம் வரு கின்றன. திருவட்டார் பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லை.

    இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா ஆபிஸ், பத்திர பதிவு அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு அலுவல கங்கள் உள்ளன. இதற்காக தினமும் ஏராளமானோர் இந்த பகுதிக்கு வருகை தருகின்றனர்.

    திருவட்டார் பஸ் நிலை யத்தில் உள்ள கட்டிடங் கள் இடிந்து விழும் நிலை யில் இருந்தது. மேலும் கட்டிடங்களை இடித்து மாற்றி விட்டு பஸ் நிலையத்தை நவீன முறையில் கட்டவேண்டும் என திருவட்டார் பேரூ ராட்சியில் தீர்மானம் நிறை வேற்றபட்டது.

    தற்போது பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2.55 கோடி செலவில் புதியதாக பஸ் நிலையம் மற்றும் கடைகள் கட்டப்படுகிறது. இதற்காக இங்கிருந்த கடைகள் காலி செய்யப்பட்டது. நேற்று பொக்லைன் இயந்திரம் மூலமாக கடைகள் இடித்து அகற்றும் பணி துவங்கியது.

    இதனால் தற்போது பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த பஸ்கள் பஸ் நிலையத்தின் வெளியில் நிறுத்தி ஆட்களை ஏற்றி, இறக்கி செல்கிறது. கடை கள் முழுமையாக இடித்து மாற்றிய பின்னர் பஸ் நிலைய வேலைகள் தொடங்கும் என திருவட்டார் பேரூராட்சி செயல் ஆலுவலர் கூறினார்.

    மேலும் திருவட்டார் பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட பஸ்களுக்காக திருவட்டார் பஸ் நிலை யத்தில் செயல்பட்ட நேரக் குறிப்பாளர் அலுவலகம், சற்று தொலைவில் திருவட் டார் மீன் சந்தை அருகில் மாற்றப்பட்டுள்ளது. இங்கு சென்று பஸ்கள் வரும் நேரத்தை பயணிகள் அறிந்து கொள்ளலாம்.

    மேலும் அப்பகுதியில் தற்காலிக பயணிகள் நிழற் குடை அமைக்கும் பணி யும் தொடங்கி உள்ளது. தற்போது பஸ்கள் நின்று செல்லும் திருவட்டார் பஸ் நிலையத்தின் முன்புற பகுதி மிகவும் நெருக்கடியான பகுதி ஆகும்.

    எனவே வாகன போக்கு வரத்து முன்பு இருந்ததை விட அதிக நெருக்கடிக்கு ஆளாக வாய்ப்புள்ளது. விரைவில் பஸ் நிலைய வேலைகள் தொடங்கி முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கேப் ரோட்டை சேர்ந்தவர் நிஷார் (வயது 34).

    இவர் நாகர்கோவில் அலெக் சாண்டரா பிரஸ் ரோட்டில் செல்போன், கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் கடை வைத்து உள்ளார். தினமும் காலை யில் கடையை திறந்து விட்டு இரவு பூட்டுவது வழக்கம்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிஷார் வேலை விஷயமாக கோவைக்கு சென்றார்.இதனால் கடையை அவரது உறவினர் கவனித்து வந்தார். நேற்று இரவு அவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று காலை கடைக்கு வந்த போது ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது அங்கு இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் லேப்-டாப் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    மேலும் மேஜையில் இருந்த ரூ.30 ஆயிரமும் மாயமாகி இருந்தது. இது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் கடையில் பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. தொடர்ந்து தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதி யில் கொள்ளையர்கள் கை வரிசை காட்டி இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    • அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளனர்
    • இதுகுறித்த புகாரின்பேரில் மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள சந்தைப் பேட்டையில் கடைகள், வணிக நிறுவனங்கள் அதிக ளவில் உள்ளன. நேற்று நள்ளிரவு அந்த பகுதியில் உள்ள பிரபல எலக்ட ரானிக்கல் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியவில்லை.

    இதையடுத்து கொள்ளை யர்கள் அருகில் உள்ள ஜவுளிகடை, டீக்கடை, செல் போன்கடை, கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் அடுத்தடுத்து பூட்டு களை உடைத்து உள்ளே புகுந்தனர். மேற்கண்ட 4 கடைகளில் பணம் எதுவும் சிக்காததால் கொள்ளையர்களின் கடைகளில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றனர்.

    இன்று காலை கடைதிறக்க வந்த உரிமையாளர்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலூர் பகுதியில் கடை, வீடுகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளை யடிப்பது தொடர்கதையாகி விட்டது. எனவே காவல் துறையினர் இரவு நேரங்களில் முக்கிய வீதிகள் மற்றும் நகர் பகுதியில் முழுவதும் தீவிரரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×