நாகர்கோவிலில் துணிகரமாக கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள்- பணம் கொள்ளை

கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளை நடந்த கடையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார்.
கொள்ளை நடந்த கடையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார்.
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் கேப் ரோட்டை சேர்ந்தவர் நிஷார் (வயது 34).

இவர் நாகர்கோவில் அலெக் சாண்டரா பிரஸ் ரோட்டில் செல்போன், கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் கடை வைத்து உள்ளார். தினமும் காலை யில் கடையை திறந்து விட்டு இரவு பூட்டுவது வழக்கம்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிஷார் வேலை விஷயமாக கோவைக்கு சென்றார்.இதனால் கடையை அவரது உறவினர் கவனித்து வந்தார். நேற்று இரவு அவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இன்று காலை கடைக்கு வந்த போது ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது அங்கு இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் லேப்-டாப் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மேலும் மேஜையில் இருந்த ரூ.30 ஆயிரமும் மாயமாகி இருந்தது. இது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் கடையில் பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. தொடர்ந்து தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதி யில் கொள்ளையர்கள் கை வரிசை காட்டி இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com