கன்னியாகுமரியில் ஒரே நாளில் ஒட்டல்-கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

25 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக எச்சரிக்கை நோட்டீசும் கொடுக்க நடவடிக்கை
அதிகாரிகள் சோதனை நடத்தியபோது எடுத்த படம்.
அதிகாரிகள் சோதனை நடத்தியபோது எடுத்த படம்.
Published on

கன்னியாகுமரி:

தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டிய ராஜன் தலைமையில் உதவி மேலாளர்நாகராஜன், உதவிசுற்றுச் சூழல் பொறி யாளர் கலைவாணி, உதவி பொறியாளர் ஜெனிஷா, கன்னியாகுமரி சிறப்பு நிலைபேரூராட்சி சுகாதார அதிகாரிமுருகன் சுகாதார மேற்பார்வையா ளர் பிரதீஷ் மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரைபகுதி, சன்னதி தெரு, ரத வீதிகள், மெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, கடற்கரை சாலை உள்பட பல்வேறு இடங்களில் 150-க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் கடைகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அப்போது ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி யது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தகடைகளில்இருந்து மொத்தம் 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும ஒரு சில கடைகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக எச்சரிக்கை நோட்டீசும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com