search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் பஸ் நிலையம் கட்டுவதற்கு கடைகள்  இடித்து அகற்றும் பணி தொடங்கியது
    X

    பஸ் நிலைய வேலைகள் தொடங்க கடைகள் இடித்து அகற்றும் பணி நடந்த காட்சி.

    திருவட்டார் பஸ் நிலையம் கட்டுவதற்கு கடைகள் இடித்து அகற்றும் பணி தொடங்கியது

    • திருவட்டார் பஸ் நிலையத்தின் முன்புற பகுதி மிகவும் நெருக்கடியான பகுதி ஆகும்.
    • நேரக் குறிப்பாளர் அலுவலகம் திருவட்டார் மீன் சந்தை அருகில் மாற்றப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் முக்கிய மானது திருவட்டார் ஆதிகே சவன் பெருமாள் கோவில். கடந்த ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினமும் ஏராளமானோர் ஆதிகேசவன் கோவிலுக்கு வருகை தருகின்றனர். வெளியூர் வாகனங்கள், பஸ்கள் அதிகம் வரு கின்றன. திருவட்டார் பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லை.

    இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா ஆபிஸ், பத்திர பதிவு அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு அலுவல கங்கள் உள்ளன. இதற்காக தினமும் ஏராளமானோர் இந்த பகுதிக்கு வருகை தருகின்றனர்.

    திருவட்டார் பஸ் நிலை யத்தில் உள்ள கட்டிடங் கள் இடிந்து விழும் நிலை யில் இருந்தது. மேலும் கட்டிடங்களை இடித்து மாற்றி விட்டு பஸ் நிலையத்தை நவீன முறையில் கட்டவேண்டும் என திருவட்டார் பேரூ ராட்சியில் தீர்மானம் நிறை வேற்றபட்டது.

    தற்போது பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2.55 கோடி செலவில் புதியதாக பஸ் நிலையம் மற்றும் கடைகள் கட்டப்படுகிறது. இதற்காக இங்கிருந்த கடைகள் காலி செய்யப்பட்டது. நேற்று பொக்லைன் இயந்திரம் மூலமாக கடைகள் இடித்து அகற்றும் பணி துவங்கியது.

    இதனால் தற்போது பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த பஸ்கள் பஸ் நிலையத்தின் வெளியில் நிறுத்தி ஆட்களை ஏற்றி, இறக்கி செல்கிறது. கடை கள் முழுமையாக இடித்து மாற்றிய பின்னர் பஸ் நிலைய வேலைகள் தொடங்கும் என திருவட்டார் பேரூராட்சி செயல் ஆலுவலர் கூறினார்.

    மேலும் திருவட்டார் பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட பஸ்களுக்காக திருவட்டார் பஸ் நிலை யத்தில் செயல்பட்ட நேரக் குறிப்பாளர் அலுவலகம், சற்று தொலைவில் திருவட் டார் மீன் சந்தை அருகில் மாற்றப்பட்டுள்ளது. இங்கு சென்று பஸ்கள் வரும் நேரத்தை பயணிகள் அறிந்து கொள்ளலாம்.

    மேலும் அப்பகுதியில் தற்காலிக பயணிகள் நிழற் குடை அமைக்கும் பணி யும் தொடங்கி உள்ளது. தற்போது பஸ்கள் நின்று செல்லும் திருவட்டார் பஸ் நிலையத்தின் முன்புற பகுதி மிகவும் நெருக்கடியான பகுதி ஆகும்.

    எனவே வாகன போக்கு வரத்து முன்பு இருந்ததை விட அதிக நெருக்கடிக்கு ஆளாக வாய்ப்புள்ளது. விரைவில் பஸ் நிலைய வேலைகள் தொடங்கி முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×