search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீல்"

    • மாநகராட்சி மூலம் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • 6 கடைகள் மாநகராட்சி மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    ஓசூர்:

    ஓசூர் மாநகர ஆணையாளர் சினேகா உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் பிரபாகரன், உதவி ஆணையாளர் டிட்டோ ஆகியோர் தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஓசூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் 20 நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தினர்.

    மேலும் மாநகராட்சி கடைகளில் கடை நடத்தும் 42 கடைக்காரர்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வெளிப்புறத்தில் கடைகள் வைத்திருந்தது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எல்லை, பெயிண்ட் மூலம் வரையப்பட்டு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே கடைகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே கடைகள் வைக்கப்பட்டால், அவை மாநகராட்சி மூலம் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    மேலும் மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெறாமல் ஓசூர் எம்.ஜி. ரோடில் இயங்கி வந்த 6 கடைகள் மாநகராட்சி மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    • புகையிலைப் விற்பனை செய்யப்படு வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதுவரை 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த காட் டேரி பகுதியில் உள்ள சகுந்தலா என்பவருக்கு சொந்தமான பெட்டிக்க டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொ ருள் விற்பனை செய்யப்படு வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவின் பேரில், மாவட்ட கலெக்டர் சரயுவின் அறிவு றுத்தலின் படி கிருஷ்ணகிரி மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நாகேஸ்வரன் போலீஸ் பாது காப்புடன் கடைக்கு சீல் வைத்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய் யப்பட்ட குட்கா புகை யிலைப் பொருள் விற்றால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 ன் படி நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என தெரிவித்தார்.

    • பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 22 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
    • 700 கிராம் குட்காவை பறிமுதல் செய்த அதிகாரி கடை உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடைக்கு சீல் வைத்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அருகே உள்ள பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 22 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் குப்பாண்டபாளையம் பகுதியில் பள்ளிக்கு அருகே இருந்த பெட்டிக்கடையில் ஆய்வு செய்ததில் போதை பொருளான குட்கா உள்ளிட்டவை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 700 கிராம் குட்காவை பறிமுதல் செய்த அதிகாரி கடை உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடைக்கு சீல் வைத்தார்.

    அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் உடனிருந்தார். இது குறித்து உணவுப்பொருள் அலுவலர் ரங்கநாதன் கூறுகையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • 32 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 15.4 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது
    • உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி மறு அறிவிப்பு வரும்வரை மூடி சீல் வைக்கப்பட்டது

    ஜெயங்கொண்டம்

    தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில், அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது.

    இந்தவகையில் உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து தா.பழூர் பகுதி மற்றும் சிலால் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 32 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 15.4 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    கலியமூர்த்தி, மகேஷ்குமார் என்பவர்களுக்கு சொந்தமான 2 கடைகள் தொடர் குற்றம் புரிந்தமைக்காக உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி மறு அறிவிப்பு வரும்வரை மூடி சீல் வைக்கப்பட்டது. 3 கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதமாக என ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இது போன்று தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்காணித்திட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, உணவு பாதுகாப்பு அலுவலர் ரத்தினம் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், துணை காவல் ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் ஈடுபட்டனர்.

    • தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    முத்தூ:

    முத்தூர் பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கு சுத்தமான பலகாரங்களை விற்பனை செய்யாத கடைகள் சீல் வைக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    வெள்ளகோவில், முத்தூர் பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் முத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்யும் பலகார கடைகள், உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள், தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் தயார் செய்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அனைவரும் தவறாமல் உணவு பாதுகாப்பு துறை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    காலாவதியாக உள்ள இனிப்பு, கார உணவு பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்வதை தவிர்த்தல் வேண்டும். நல்ல சுத்தமான உணவு பொருட்கள், சுத்தமான எண்ணெய் ஆகிவற்றை பயன்படுத்தி சுகாதாரமான முறையில் புதிதாக தயார் செய்யப்பட்ட பலகாரத்தை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே முத்தூர் நகர, கிராம பகுதி தீபாவளி பண்டிகை இனிப்பு காரம் தயார் செய்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அனைவரும் இனிப்புகள், காரங்கள், காலாவதியான உணவுப் பொருட்கள் ஆகியவற்றினை விற்பனை செய்ய வேண்டாம்.

    கெட்டுப்போன இனிப்பு கார வகைகள், காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் மீது உணவு பாதுகாப்பு துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதையும் மீறி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதித்தல், சீல் வைத்தல், கடை உரிமம் ரத்து செய்தல் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாக மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சோதனை செய்த போது கடையில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.
    • பட்டாசுகளை வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஹாஸ்பிடல் ரோடு பகுதியில் தங்கதுரைக்கு சொந்தமான கடையில் அனுமதி இன்றி பட்டாசு பெட்டி வைத்திருப்பதாக திண்டிவனம் டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சோதனை செய்த போது கடையில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதை யடுத்து திண்டிவனம் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் பட்டாசு கடைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். மேலும் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ, பட்டாசுகளை எந்த முறையில் அனுமதி இல்லாமல் விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டிவனம் டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் தெரிவித்தார்.மேலும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • அரியலூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு சீல்வைக்கப்பட்டது
    • பட்டாசு குடோன் உரிமையாளர் கைது செ்யயப்பட்டு உள்ளார்

    அரியலூர்,

    திருமானூரில்  சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.7 லட்சத்து 55 ஆயி–ரம் மதிப்பிலான 88 மூட்டை நாட்டு வெடிகள், 63 அட்டைபெட்டிகளில் சிவ–காசி பட்டாசுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து குகன் பட்டாசு கடை உரிமையாளர் ராஜேஷ்குமார்(37) மற்றும் கடையின் மேலாளர் சத்தியமூர்த்தி(31) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சத்தியமூர்த்தியை கைது செய்து, நீதிமன்றத்–தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான ராஜேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் க.பழூர் பகுதியில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த பட்டாசு குடோனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த குடோன் அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த குடோனுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சீல்வைத்தனர். குடோன் உரிமையாளர் தஞ்சையை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • பழனி கடையில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது.
    • ரூ.2,200 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    வடலூர் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடலூர் -நெய்வேலி மெயின் ரோட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் பழனி (வயது 40), அவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது.

    இதேபோல் ஆர்.சி. தெற்கு தெருவில் கடை வைத்திருந்த ஆலிஸ்மேரி (41) என்பவரும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வந்தார். இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.2,200 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், மண்டல துணை தாசில்தார் துரைராஜ், சம்பவ இடத்திற்கு வந்து கடைகளுக்கு சீல் வைத்தார்.

    • பேக்கரி கடை ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட முட்டை பப்ஸ் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • உடனடியாக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் இடங்கண சாலையை அடுத்த மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (38), இவர் தனது குழந்தைகளான யாசினி (9), யாசித்(8), சபரீஷ் (3) ஆகிய 3 பேருடன் கொங்கணாபுரம் அடுத்த ஆலங்காடு பகுதியில் உள்ள தனது குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார்.

    அங்கு வழிபாடு செய்தவர் தனது குழந்தைகளுடன் மீண்டும் வீடு திரும்பிய நிலையில், கொங்கணாபுரம் பகுதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட முட்டை பப்ஸ் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து முட்டை பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகள் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில், திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்த எடப்பாடி தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர் குமரகுரு தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கொங்கணாபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த தின்பண்டங்களின் மாதிரிகளை சேகரித்ததுடன், சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

    • செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
    • ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    தாம்பரம்:

    சென்னை கன்டோன் மென்ட் பல்லாவரம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த பல ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து அதில் வீடுகள் கட்டி வசித்து வந்தனர்.

    இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. கலெக்டரின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக அகற்றி, அரசு நிலத்தை மீட்க கலெக்டர் ராகுல்நாத் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.

    இதையடுத்து இன்று காலை பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் அரசு நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், வீடுகளை பூட்டி சீல் வைத்தனர்.

    வீடுகளை பூட்டி சீல் வைப்பதற்கு முன்பு அதில் இருந்த பொருட்களை வெளியே எடுத்துச் செல்ல அங்குவசித்து வந்தவர்களுக்கு அனுமதி அளித்தனர். பொருட்கள் அனைத்தும் எடுக்கப்பட்டதும் அதிகாரிகள் உடனடியாக வீட்டினை பூட்டி சீல் வைத்தனர். மேலும் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் முழுவதையும் மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.200 கோடி ஆகும். பின்னர் அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இதையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • கடைகளை காலி செய்யக் கோரி அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கினர்.
    • முன்னதாக அனைத்து கடைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர், கத்திப்பாரா ஜி.எஸ்.டி. சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.

    இது கடந்த 1967-ம் ஆண்டு தனியார் ஒருவருக்கு 40 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. இங்கு மது பார், ஒட்டல், டீக்கடை என 17 கடைகள் கட்டப்பட்டு வணிக வளாகமாக செயல்பட்டது. குத்தகை முடிந்த பின்னரும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தொடர்ந்து ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு செயல்பட்டு வந்தன.

    இதைத்தொடர்ந்து கடைகளை காலி செய்யக் கோரி அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கினர். ஆனால் கடைகள் தொடர்ந்து செயல்பட்டன.

    இந்நிலையில் பல்லாவரம் தாசில்தார் முன்னிலையில் இன்று காலை வருவாய்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.

    முன்னதாக அனைத்து கடைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் கடைகளில் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் ரூ. 150 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இது தொடர்பான பெரிய பேனரையும் அங்கு வைத்தனர்.

    • அரியலூரில் 70 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • பிரபல அசைவ உணவகத்துக்கு சீல் வைப்பு

    திருச்சி,

    நாமக்கல்லில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவர்மா சாப்பிட்ட இளம் பெண் பலியானார். மேலும் 10க்கும் மேற்பட்ட மாண வர்கள் மயக்கம் அடை ந்தனர்.இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதை த்தொடர்ந்து ஹோட்ட ல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகி ன்றனர்.

    அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அரியலூர் நகரில் உள்ள பல்வேறு உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர்.இதில் காலாவதியான கெட்டுப்போன சிக்கன், மட்டன், காடை போன்ற 70 கிலோ இறைச்சியினை பறி முதல் செய்தனர்.மேலும் அரியலூர் கலெ க்டர் அலுவலக சாலையில் உள்ள பிரபல அசைவ உணவகத்திற்கு அதிரடியாக சீல் வைத்தனர்.மேலும் 3 கடைகளுக்கு அபராதம் விதித்து குறைகள் இருந்த 3 உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர்.இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கள் கூறும் போது, இறைச்சி பாக்கெட்டுகளை ஓபன் செய்தால் உடனடியாக பயன்படுத்த வேண்டும் இறைச்சிகளை அதற்குரிய வெப்ப நிலையில் சரிவர பராமரிக்க வேண்டும் சைவ, அசைவ பொருட்களை தனித்தனியாக குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். சமையலறையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

    ×