என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
வருகிற 30-ந்தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் வணிக கட்டிடங்களுக்கு சீல்
- வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.
- காங்கயம் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காங்கயம் :
வருகிற 30 ந் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் வணிகக் கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என காங்கயம் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கயம் நகராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 33 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்பு கடந்த ஒரு வாரத்தில் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும் சொத்துவரி செலுத்துவதற்கு இம்மாதம் 30 ந் தேதி கடைசி நாளாகும். அதற்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால், எந்தவித முன்னறிவிப்புமின்றி குடிநீா் இணைப்பு துண்டிப்பு மற்றும் வணிக கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும். தவிர, வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.எனவே மேற்கண்ட நடவடிக்கைகளை தவிா்ப்பதற்கு காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.






