search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Shop"

    • சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு .
    • தவறினால் மருந்தக உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

    சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று (05.03.2024) முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் -1940 மற்றும் 1945 அட்டவணை "X மற்றும் "H". "H1" Drugs குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் -1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் சிறார்களுக்கான அதிகளவு போதை மாத்திரை மற்றும் போதை டானிக் பயன்படுத்துவதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மதுரை மாவட்ட குழந்தைகள் நல வாரியம் சார்பில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் சிறார்கள் போதைக்கு அடிமையாகுவதை கட்டுப்படுத்த வேண்டும். போதை மாத்திரை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

    இந்நிலையில், மதுரையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • ராமச்சந்திரன் நடத்தி வரும் மருந்தகத்தில் அனுமதி இல்லாமல் சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது.
    • வீ.கே. புதூர் தாசில்தார் தெய்வசுந்தரி உள்ளிட்ட அதிகாரிகள் மருந்தகத்தில் ஆய்வு செய்தனர்.

    சுரண்டை:

    தமிழக அரசு உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போலி டாக்டர்களை கண்டுபிடிக்கும் பணியில் அரசு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், கீழப்பாவூர் வணிகர் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது42) என்பவர் சுரண்டை அருகே உள்ள இடையர்தவணையில் நடத்தி வரும் மருந்தகத்தில் பொதுமக்களுக்கு உரிய அனுமதி இல்லாமல் சிகிச்சை அளிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து வீ.கே. புதூர் தாசில்தார் தெய்வசுந்தரி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா, தேசிய சுகாதாரக் குழும ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் அறிவுடைய நம்பி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், ஆலங்குளம் சரக மருத்துவ ஆய்வாளர் பவித்ரா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீ மூல நாதர், வருவாய் ஆய்வாளர் கண்ணன், வி.ஏ.ஓ. உமா மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், சுதாகர் உள்ளிட்டோர் மருந்தகத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி மருந்தகத்துக்கு சீல் வைத்தனர்.

    • மாவட்ட சுகாதாரத்துறை குழுவினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
    • 18-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரம் உப்பிலிபாளையத்தில் மெடிக்கல்ஸ் என்ற பெயரில் இளையராஜா என்பவர் மெடிக்கல் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் மருந்துக்கடையில் தானே நோயாளிகளுக்கு ஊசி போடுவதாகவும், குளுக்கோஸ் போடுவதாகவும், காயங்களுக்கு மருந்து வைத்து கட்டுப்போடுவதாகவும் சுகாதாரத்துறைக்கு அதிகமான புகார்கள் வந்ததை அடுத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி உத்தரவின் பேரில் தேசிய சுகாதார திட்ட அலுவலர் அருண்பாபு கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் ஆகியோர் அடங்–கிய குழுவினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் இளையராஜா நோயாளிகளுக்கு வைத்தியம் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் மெடிக்–கல்ஸ் கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் விசாரணைக்காக நாளை 18-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    • உணவு சாப்பிட மருந்து கடை உரிமையாளர் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள முதலிபாளையம் பிரத்திவிகா நகர் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரது மகன் மதன் (வயது 29). இவர் நல்லிக்கவுண்டன் நகரில் மருந்து கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி வெளியூர் சென்ற நிலையில் நேற்று முன்தினம் மதியம் உணவு சாப்பிட மதன் வீட்டிற்கு வந்துள்ளார். சாப்பிட்ட பின்னர் வீட்டை பூட்டிவிட்டு மருந்து கடைக்கு சென்று உள்ளார்.

    பின்னர் இரவு வழக்கம்போல் மருந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை பார்த்த மதன் அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து மதன் ஊத்துக்குளி போலீசில் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.  

    • டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது.
    • கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தால் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் 5லட்சம் பேர் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் என 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    பெரும்பாலான தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களிலும் மற்ற தொழிலாளர்கள் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம், அவிநாசி உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பூர் வீரபாண்டி, பலவஞ்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தங்கியிருந்து பணிக்கு சென்று வரும் தமிழகம் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

    தொடர்ந்து பெண் தொழிலாளர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவே அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்தியதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தது தெரியவந்தது. தவறான உறவால் கர்ப்பமான இளம்பெண்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியாமல் இருக்க மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியுள்ளனர். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அதனை மீறி திருப்பூர் மாநகரில் உள்ள சில மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.1000, ரூ.1500 என கூடுதல் விலைக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்துள்ளது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி தலைமையிலான மருத்துவத்துறை அதிகாரிகள் திருப்பூர் வீரபாண்டி, பல்லடம் சாலை உள்பட மாநகர் பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சில மருந்துக்கடைகளில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் எச்சரிக்கையும் விடுத்தனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனகராணி கூறுகையில், டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது. மேலும் பெண்களும் அதனை பயன்படுத்தக்கூடாது. அதனை பயன்படுத்துவதால் உடல் உபாதைகள் ஏற்படும். எனவே விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தால் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவைபட்டால் காவல்துறை மூலமும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • பாளை சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 56).
    • இவர் சமாதானபுரத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார்.

    நெல்லை:

    பாளை சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 56). இவர் சமாதானபுரத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 10-ந்தேதி தனது குடும்பத்தினருடன் அவர் மதுரைக்கு புறப்பட்டார். தொடர்ந்து வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் சென்றுவிட்டனர். நேற்று மதியம் அவர்கள் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக அவர் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • போதைப்பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • விழிப்பு–ணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி கல்வி மற்றும் கல்லூரி கல்வித்துறைகள் நடத்திடவேண்டும்.

    கோவை

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதை தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

    போதைப்பொருட்கள் மற்றும் போதை பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பெற்றோர்களுடன் இணைந்து அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி கல்வி மற்றும் கல்லூரி கல்வித்துறைகள் நடத்திடவேண்டும்.

    இந்த நிகழ்ச்சிகளில் உடல்நிலை, சட்டம், உளவியல் நடவடிக்கைகள், உள்ளிட்டவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாடு இருக்கும் எனில் விடுதி காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக இது குறித்து போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பள்ளிகளுக்கு அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யாமல் இருப்பதை உறுதி செய்திடவேண்டும்.

    மருந்துகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கடைகளில் அடிக்கடி மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, போதைப்பொருட்கள் விற்பனை சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும், போதைமருந்து தடுப்பு பிரிவு தொடர்பு எண்களை அனைத்து மருந்து கடைகளிலும் வைக்க அறிவுறுத்த வேண்டும்.

    போதைப்பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த மையத்தில் மருத்துவர்கள், உளவியல் டாக்டர் உள்ளிட்டவர்களை கொண்டு போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.இந்தகுழு ஒருங்கிணைத்து செயல்பட்டு, போதைப் பொருள் பயன்பாட்டினை முழுமையாக ஒழித்திடதேவையான தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ், அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை டீன் நிர்மலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மசக்காளிபாளையம் ரோட்டில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • மருந்து கடையை உடைத்து ரூ.30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    கோவை 

    கோவை சவுரிபாளையம் அருகே உள்ள மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 48). இவர் லட்சுமிபுரம் மசக்காளிபாளையம் ரோட்டில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு கடையின் ஷட்டரை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் கல்லாவில் இருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.


    மறுநாள் கடையை திறக்க வந்த சகாயராஜ் கடையில் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மருந்து கடையை உடைத்து ரூ.30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.  

    ×