search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai collector"

    • சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு .
    • தவறினால் மருந்தக உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

    சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று (05.03.2024) முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் -1940 மற்றும் 1945 அட்டவணை "X மற்றும் "H". "H1" Drugs குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் -1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சென்னை கலெக்டர் அருணா நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • சென்னை மாவட்டத்தின் புதிய கலெக்டராக ராஷ்மி சித்தார்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அருணா நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், கூட்டுறவுத் துறை கூடுதல் செயலாளர் ராஷ்மி சித்தார்த் சென்னை மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நில நிர்வாக இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • உடற்தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.50 சென்டிமீட்டர் ஆண்களும், 152 சென்டி மீட்டர் பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இந்திய விமானப் படையில் அக்னி வீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

    வயது வரம்பு 27.6.2003 முதல் 27.12.2006 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை, 10-ம் வகுப்பு, பிளஸ்-2வுக்கு சமமான தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ்) 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    உடற்தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.50 சென்டிமீட்டர் ஆண்களும், 152 சென்டி மீட்டர் பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

    இப்பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.30 ஆயிரம் மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வும் வழங்கப்படும். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணைய தளத்திலும் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

    மேலும் விவரங்களுக்கு 044-24615160 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், மிதிவண்டி, காலணி உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்.
    • தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புபவர்கள் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை அணுகி சேர்க்கை மேற்கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 31-ந்தேதி (திங்கட்கிழமை) வரை பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 8 தொழிற்பிரிவுகளில் நடைபெறுகிறது.

    இந்த பிரிவுகளில் 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து வயதினரும் சேர்க்கை பெறலாம். பயிற்சிக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ. 750, பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், மிதிவண்டி, காலணி உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்.

    பயிற்சியின்போது தொழிற்சாலைகள் மூலம் இன்டன்ஷிப் பயிற்சி மற்றும் இன்பிளான்ட் பயிற்சி அளிக்கப்படுவதுடன் பயிற்சி முடிந்தவுடன் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புபவர்கள் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை அணுகி சேர்க்கை மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள தொலைபேசி: 044-22510001, கைப்பேசி: 94990 மற்றும் 8248738413 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • புதிய ஆட்சியராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அருணா நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் அச்சு மற்றும் எழுதுபொருள் துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

    சென்னையில் உள்ள தனியார் பெண்கள் விடுதிகள் அனைத்தையும் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். #ChennaiCollector #ShanmugaSundaram
    சென்னை:

    பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் பணி காரணமாக விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் விடுதிகளும் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான கால அவகாசம் ஒரு மாதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பெற்று கொள்ளலாம் எனவும், பதிவு செய்யப்படாத தனியார் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். #ChennaiCollector #ShanmugaSundaram
    சென்னை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று கலெக்டர் அ.சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #GandhiJayanti
    சென்னை:

    சென்னை கலெக்டர் அ.சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 2-ந் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள், உரிமம் பெற்ற கிளப்புகள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.

    மீறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #GandhiJayanti
    ×