search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருள்புரம் உப்பிலிபாளையத்தில் விதிமுறை மீறி செயல்பட்ட மருந்து கடைக்கு சீல்
    X

    கோப்புபடம்.

    அருள்புரம் உப்பிலிபாளையத்தில் விதிமுறை மீறி செயல்பட்ட மருந்து கடைக்கு 'சீல்'

    • மாவட்ட சுகாதாரத்துறை குழுவினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
    • 18-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரம் உப்பிலிபாளையத்தில் மெடிக்கல்ஸ் என்ற பெயரில் இளையராஜா என்பவர் மெடிக்கல் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் மருந்துக்கடையில் தானே நோயாளிகளுக்கு ஊசி போடுவதாகவும், குளுக்கோஸ் போடுவதாகவும், காயங்களுக்கு மருந்து வைத்து கட்டுப்போடுவதாகவும் சுகாதாரத்துறைக்கு அதிகமான புகார்கள் வந்ததை அடுத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி உத்தரவின் பேரில் தேசிய சுகாதார திட்ட அலுவலர் அருண்பாபு கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் ஆகியோர் அடங்–கிய குழுவினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் இளையராஜா நோயாளிகளுக்கு வைத்தியம் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் மெடிக்–கல்ஸ் கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் விசாரணைக்காக நாளை 18-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×