search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாக்கி"

    • சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர்
    • ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம் நத்தியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன்கள் சதீஷ்குமார் (27), மோகன்குமார் (24). இருவரும் தறிதொழில் செய்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு துட்டம்பட்டி பைபாஸ் அருவங்காடு பகுதியை சேர்ந்த மார்க்கண்டன் மகன் விக்னேஷ் (24) என்பவருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு சேலை கொடுத்துள்ளனர். அதில் ரூ.8 ஆயிரத்து 500-ஐ பெற்றுக்கொண்டு ரூ.1500 பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார். இதை மோகன்குமார் தடுக்க முயன்றபோது அவரையும் கத்தியால் தலை மற்றும் கை பகுதியில் வெட்டி காயப்படுத்தினார்.

    இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • 438 கடைகள் மாநகராட்சி மூலமாக வாடகையினங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • தெரிவித்தனர். வாடகை பாக்கியை விரைந்து கடைக்காரர்கள் செலுத்தி சீல் வைப்பு நடவடிக்கையை தவிர்க்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகள் ஏலம் விடப்பட்டு கடைக்காரர்கள் வாடகை செலுத்தி வருகிறார்கள். 438 கடைகள் மாநகராட்சி மூலமாக வாடகையினங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வாடகையினங்கள் ஆண்டுக்கணக்கில் செலுத்தாமல் உள்ளவர்கள் நிலுவைத்தொகையை செலுத்த மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியது.

    மேலும் நிலுவை வாடகைத்தொகையை விரைந்து செலுத்துமாறு கடைக்காரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்து அவகாசம் வழங்கியது. அதன்பிறகும் அவர்கள் வாடகையினங்களை செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து அதிகப்படியான வாடகை தொகை செலுத்தாத கடைகளை பூட்டி 'சீல்' வைக்க மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் உத்தரவிட்டனர்.

    அதன்படி துணை ஆணையாளர் பாலசுப்பிரம ணியம், உதவி ஆணையாளர் தங்கவேல்ராஜன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை முதல்கட்டமாக திருப்பூர் அவினாசி ரோடு பாரதியார் வணிக வளாகத்தில் உள்ள 22 கடைகளை பூட்டி 'சீல்' வைத்தனர். அந்த கடைகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சம் வாடகை பாக்கி இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.

    மாநகரில் மொத்தம் 169 கடைகளுக்கு வாடகை பாக்கியாக ரூ.10½ கோடி நிலுவை உள்ளது. அந்த கடைகளை பூட்டி சீல் வைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். வாடகை பாக்கியை விரைந்து கடைக்காரர்கள் செலுத்தி சீல் வைப்பு நடவடிக்கையை தவிர்க்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 17 கடை களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    • கடைகள் சீல் வைக்கப்பட்டதால் மீன் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு அருகே சரலூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஏராளமான கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் 17 கடை வியாபாரிகள் வாடகை பாக்கியை சரிவர கட்டாமல் இருந்தனர். ரூ. 8 லட்சத்து 47 ஆயிரத்து 86 வாடகை பாக்கி இருந்தது.

    இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லை.இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்க மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் உத்தரவிட்டார்.

    நிர்வாக அதிகாரி ராமமோகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் சுப்பையா, ஞானப்பா, ஆல்ரின், சேகர், இளநிலை உதவியாளர் சாகுல் உள்பட அதிகாரிகள் இன்று காலை சரலூர் மீன் சந்தைக்கு சென்றனர். அப்போது வாடகை பாக்கி கட்டாத கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து வாடகை பாக்கி கட்டாத கடைகள் சீல் வைக்கப்பட்டது. 17 கடை களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடைகள் சீல் வைக்கப்பட்டதால் மீன் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடைகள் சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து வியாபாரிகள் சிலர் வாடகை பாக்கியை கட்டுவதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற னர். வாடகைப் பாக்கி கட்டியதற்கான நகல் வாங்கியதும் சீல்கள் அகற்றப்பட்டு வியாபாரிகளிடம் மீண்டும் கடை திறந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.

    • நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக உடனே நிலவையில் உள்ள வரித்தொகையினை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
    • கடை வாடகை தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி பொதுமக்கள் ஜப்தி நடவடிக்கைகளில் இருந்து மீளுவதற்கு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.

    வேதாரண்யம் நகராட்சியில் 2022-2023 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி தொழில்வரி குடிநீர் கட்டணம் கடை வாடகை மற்றும் தொழில் உரிமை கட்டணம் ஆகியவற்றை உடனடியாக நகராட்சியில் இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. அதில் சுமார் 40,000 பொதுமக்கள் வசித்து வருகின்றனர் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி தெரு விளக்கு பொது சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக உடனே நிலவையில் உள்ள வரித்தொகையினை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்

    வரிகளை செலுத்தவில்லை என்றால் பாக்கி வைத்துள்ளவரின் பெயர்கள் பொது இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். எனவே உடனே வரி செலுத்தவும். வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும்.

    மேலும் ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை நகராட்சி நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும். நகராட்சி மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை கருத்தில் கொண்டு நகராட்சி செலுத்த வேண்டிய சொத்து வரி குடிநீர் கட்டணம் தொழில்வரி கடை வாடகை தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா கேட்டுக் கொண்டுள்ளார்.

    • வாரிசுதாரர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது.
    • கோவில் நிலத்தில் வசித்தவர்கள் குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தவில்லை.

    கடையநல்லூர்:

    சிவகிரி அருகே சுப்பிரமணியபுரம் சுந்தர விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் 53 சென்ட் நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்தவரின் மறைவுக்கு பின்னர் அவரது வாரிசுதாரர்கள் அந்த நிலத்தில் வீடு கட்டி வசித்தும், விவசாயம் செய்தும் வந்தனர்.

    அவர்கள் நீண்ட காலம் குத்தகை பணம் செலுத்தாததால், கோவிலுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 15 இருந்தது. இதுதொடர்பாக வாரிசுதாரர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது.

    எனினும் கோவில் நிலத்தில் வசித்தவர்கள் குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அந்த நிலத்தில் உள்ள வீட்டில் இருந்த பீரோ, பித்தளை பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்தனர்.

    ×