search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    169 கடைகளுக்கு ரூ.10½ கோடி வாடகை பாக்கி - மாநகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகள் தீவிரம்
    X
    வாடகை பாக்கியுள்ள ஒரு கடைக்கு அதிகாரி 'சீல்' வைத்த காட்சி.

    169 கடைகளுக்கு ரூ.10½ கோடி வாடகை பாக்கி - மாநகராட்சி கடைகளுக்கு 'சீல்' வைக்கும் பணிகள் தீவிரம்

    • 438 கடைகள் மாநகராட்சி மூலமாக வாடகையினங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • தெரிவித்தனர். வாடகை பாக்கியை விரைந்து கடைக்காரர்கள் செலுத்தி சீல் வைப்பு நடவடிக்கையை தவிர்க்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகள் ஏலம் விடப்பட்டு கடைக்காரர்கள் வாடகை செலுத்தி வருகிறார்கள். 438 கடைகள் மாநகராட்சி மூலமாக வாடகையினங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வாடகையினங்கள் ஆண்டுக்கணக்கில் செலுத்தாமல் உள்ளவர்கள் நிலுவைத்தொகையை செலுத்த மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியது.

    மேலும் நிலுவை வாடகைத்தொகையை விரைந்து செலுத்துமாறு கடைக்காரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்து அவகாசம் வழங்கியது. அதன்பிறகும் அவர்கள் வாடகையினங்களை செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து அதிகப்படியான வாடகை தொகை செலுத்தாத கடைகளை பூட்டி 'சீல்' வைக்க மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் உத்தரவிட்டனர்.

    அதன்படி துணை ஆணையாளர் பாலசுப்பிரம ணியம், உதவி ஆணையாளர் தங்கவேல்ராஜன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை முதல்கட்டமாக திருப்பூர் அவினாசி ரோடு பாரதியார் வணிக வளாகத்தில் உள்ள 22 கடைகளை பூட்டி 'சீல்' வைத்தனர். அந்த கடைகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சம் வாடகை பாக்கி இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.

    மாநகரில் மொத்தம் 169 கடைகளுக்கு வாடகை பாக்கியாக ரூ.10½ கோடி நிலுவை உள்ளது. அந்த கடைகளை பூட்டி சீல் வைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். வாடகை பாக்கியை விரைந்து கடைக்காரர்கள் செலுத்தி சீல் வைப்பு நடவடிக்கையை தவிர்க்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×