இரணியல் அருகே கடனை திருப்பி கேட்ட ஜவுளி கடை அதிபருக்கு அடி உதை

இரணியல் போலீசார் 4 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணைராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

இரணியல் அருகே உள்ள பேயன்குழி அடுத்த கல்லுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கசுவாமி (வயது 53). இவர் பேயன்குழி சந்திப்பில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 8 மாதங்களுக்கு முன்பு பேயன்குழியைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து ரூ.2900-க்கு ஜவுளிகள் வாங்கியதாக தெரிகிறது. பின்னர் ரூ.200 கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை மறுநாள் ஏ.டி.எம்.மில் எடுத்து தருவதாக கூறிச் சென்றுள்ளனர். ஆனால் கடந்த 8 மாதங்களாக கடனை திருப்பிக் கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை தங்கசுவாமி கடனை திருப்பி கேட்க பேயன்குழி சென்றுள்ளார். அப்போது மோகன்ராஜ் மகன் நிகேஷ், அவரது நண்பர்கள் 3 பேர்கள் என 4 பேர் சேர்ந்து தங்கசுவாமியை தடுத்து நிறுத்தி அவதூறாக பேசி கம்பு மற்றும் கல்லால் தாக்கி உள்ளனர். மேலும் அவரது செல்போனை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் தங்கசுவாமிக்கு கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயமும், கல்லால் தாக்கியதில் மேல் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

தங்கசுவாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தங்கசுவாமி இரணியல் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நிகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் என 4 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை திருப்பி கேட்ட ஜவுளிக்கடை உரிமையாளரை 4 பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com