என் மலர்
உள்ளூர் செய்திகள்

அத்தனூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க மக்கள் எதிர்ப்பு-முற்றுகை
- புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் பார் நடத்த தேவையான இடத்தை, மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
- டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைத்தால் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மன் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் பார் நடத்த தேவையான இடத்தை, மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடை அமைக்க பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், அம்மன் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைத்தால் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் டாஸ்மாக் கடை அமைக்க பூமி பூஜை போட வந்தவர்களையும், பொக்லைன் எந்திரத்தையும் முற்றுகையிட்டனர். இதையடுத்து, பூமி பூஜை போடும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.






