search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attempted Robbery"

    • யாராவது குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டனரா? என போலீசார் விசாரணை.
    • இந்த சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு தினந்தோறும் பல்வேறு குறைகளை தெரிவிப்பதற்காக பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    பொதுமக்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் வசதிக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே இந்தியன் வங்கி, எஸ்.பி.ஐ, சிட்டி யூனியன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். சென்டர்கள் உள்ளது.

    இந்த ஏ.டி.எம்.களில் பொதுமக்களும், ஊழியர்களும் பணம் எடுத்து சென்று வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல பொதுமக்கள் சிலர் இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றனர். அப்போது, ஏ.டி.எம். மையத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து கிடந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அருகே இருந்த சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து காணப்பட்டது.

    இதையடுத்து போலீசார், அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிரா மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள காமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடுத்தடுத்து 2 ஏ.டி.எம்.களில் கற்களை கொண்டு வீசி கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. யாராவது குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டனரா? அல்லது கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கண்ணாடி உடைக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில், ஏ.டி.எம் எந்திரம் பாதுகாப்பாக உள்ளது. அங்கு பணம் கொள்ளை போகவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

    கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 பேரை தாக்கி கும்பல் தப்பி ஓட்டம்
    • கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டது

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி வடிவுக்கரசி. மகன் வேல்முருகன் உள்ளிட்ட 5 பேர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி நேற்று இரவு தூங்கி கொண்டிருந்தனர்.

    கொள்ளை கும்பல்

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து ரமேஷ் வீட்டினுள் கொள்ளையடிக்க புகுந்தனர்.

    வீட்டில் சத்தம் கேட்ட வேல்முருகன் எழுந்து பார்த்தார். அப்போது பீரோவின் அருகே மர்ம கும்பல் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கும்பலை மடக்கி பிடிக்க வேல்முருகன் முயன்றார். மர்ம கும்பல் கட்டையால் வேல்முருகனின் தலையில் அடித்தனர்.

    இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டார். அப்போது எதிர் வீட்டை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் முகமூடி கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். அவரையும் மர்மகும்பல் தாக்கி விட்டு தப்பிசென்றனர்.

    இதில் ரங்கநாதனுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    படுகாயம் அடைந்த வேல்முருகன் மற்றும் ரங்கநாதனை அருகே இருந்தவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். திருவண்ணாமலை கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் சென்று யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பொதுமக்களை தாக்கி விட்டு தப்பி சென்ற கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    • கேமராக்கள்- கார் கண்ணாடிகள் உடைப்பு
    • உண்டியலை உடைக்க முடியவில்லை

    வேலூர்:

    வேலூர் அண்ணா சாலையில் மகளிர் போலீஸ் நிலையம் எதிரே புகழ்பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் உடல் நலம் சரியில்லாத குழந்தைகளுக்கு பரிகாரம் செய்தல் கயிறு கட்டுதல் உள்ளிட்டவை செய்யப்படுகின்றன.

    தினமும் இரவு 9.30 மணிக்கு தர்கா மூடப்படுகிறது. இங்கு பணி செய்யும் 2 பேர் தினமும் தர்காவில் தங்குகின்றனர். அவர்கள் இருவரும் ஊருக்கு சென்று விட்டதால் நேற்று தர்காவில் யாரும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று இரவு தர்காவிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தர்காவிற்கு வெளியே பொருத்தப்ப ட்டிருந்த 4 கண்காணிப்பு கேமரா வாசலில் பொருத்தப்ப ட்டிருந்த ஒரு கேமராவை உடைத்தனர். அவற்றை புதரில் தூக்கி வீசினர். அருகில் உள்ள முற்பதில் வீசி உள்ளனர். பின்னர் தர்காவிற்குள் உள்ள உண்டியல்களை உடைக்க முயற்சி செய்தனர். உண்டியலை உடைக்க முடியவில்லை.

    ஆத்திரத்தில் தர்கா வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி மற்றும் மின் விளக்குகளை உடைத்து விட்டு சென்று விட்டனர்.

    இன்று காலை வழக்கம் போல் தர்காவை திறக்க வந்த நிர்வாகிகள் கேமரா க்கள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையம் எதிரிலேயே உள்ள தர்காவில் கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2 பேர் கைது
    • கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கைவரிசை

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள கிடங்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன்( வயது 67). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நடராஜன் தனது மனைவி ஜெயக்குமாரி(59) மற்றும் ஜெயக்குமாரியின் சகோதரி காஞ்சனா(50) ஆகிய 3 பேரும், கடந்த 19-ந்தேதி வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது, வீட்டுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், நடராஜன், ஜெயக்குமாரி மற்றும் காஞ்சனா ஆகியோரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் சொத்து பத்திரங்களை கேட்டு மிரட்டினர். அப்போது பயந்துபோன 3 பேரும் கூச்சலிட்டனர்.

    அலறல் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் ஓடி வந்தனர். அப்போது, பின் வாசல் வழியாக மர்ம கும்பல் தப்பிச்சென்றனர். இந்த நிலையில் மர்ம கும்பலின் பைக், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. இது குறித்து புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் சுந்தர், விக்னேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    கோவிலூர் கிராமம், களத்து மேட்டு தெருவில் வசிக்கும் சந்தானம் மகன் சுந்தர்(38) மற்றும் செய்யாறு நகரம் கொடநகர் சமாதியான் தெருவில் வசிக்கும் ரங்கநாதன் மகன் விக்னேஷ்(32) ஆகியோர் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர்.

    இவர்கள் 2 பேரும் சேர்ந்து, சென்னை குரோம்பேட்டையில் வசிக்கும் உதயா, கரியன் மற்றும் பேபி ஆகிய 3 பேர் கொண்ட கூலிப்படையினர் மூலம் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நடராஜனிடம் சுந்தர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

    கடன் தொகைக்கான வட்டி பணத்தை சரியான நேரத்தில் செலுத்தவில்லை. இதனால் வட்டியுடன் அசல் தொகையை சேர்த்து ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என நடராஜன் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து ரூ.4 லட்சத்தை சுந்தர் கொடுத்துள்ளார்.

    மேலும் நடராஜன் மீதமுள்ள ரூ.6 லட்சம் கொடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சுந்தர், தனது நண்பர் விக்னேஷ் உதவியுடன் சென்னை குரோம் பேட்டை கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் மூலம் நடராஜன் வீட்டில் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. 2 பேரை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள சென்னை கூலிப்படையைச் சேர்ந்த உதயா, கரியன், பேபி ஆகியோரை தேடி வருகிறோம். இவ்வாறு கூறினர்.

    • அரசு விடுதி பெண் காப்பாளரிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
    • சந்தேகத்தின் பேரில் இரு வரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள மண்டபசாலை புதூர் பகு தியை சுப்புலட்சுமி (வயது 58). இவரது கணவர் சின் னத்தம்பி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் சுப்புலட்சுமி கோவிலாங்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள் ளியின் மாணவிகள் விடுதி யில் இரவு காவலராக பணி புரிந்து வருகிறார்.

    இதற்கிடையே சுப்புலட் சுமி தனது ஊரான எம்.புதூரில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில் சுப்புலட்சுமி வழக்கம்போல் விடுதிக்கு இரவு காப்பாளர் வேலைக்கு சென்று விட்டு நேற்று காலை தனது சொந்த ஊரான எம்.புதூர் கிராமத் திற்கு செல்வதற்காக பேருந் தில் வந்தார்.

    ஒத்தக்கடை பஜார் பகு தியில் இறங்கிய அவர் அங்குள்ள காய்கறிக்கடை யில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு எம்.புதூருக்கு குறுக்கு வழியில் செல்ல எண்ணி நடந்து சென்று கொண்டிருந்தார். அப் போது அவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

    மேலும் எப்பொழுதும் ஆள் நடமாட்டம் அதிக முள்ள பஜார் பகுதியில் நேற் க்கு ஆள் நடமாட்ட மில்லாத நேரத்தை தங்க ளுக்கு சாதகமாக பயன்ப டுத்திகொண்ட அந்த வாலி பர்கள் சுப்புலட்சுமி யிடம் நகை பறிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் சுதாரித்துக் கொண்ட சுப்புலட்சுமி நகை பறி கொடுக்காமல் தப்பி னார். இதுகுறித்து எம்.ரெட்டியாபட்டி போலீஸ் நிலையத்தில் சுப்புலட்சுமி புகார் அளித்தார். இதனை யடுத்து சம்பவம் நடந்த பகுதியான ஒத்தக்கடை பஜார் பகுதியில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிப்பதிவுகளை அடிப்படையாக வைத்து நகை பறிப்பு முயற்சியில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவந்தனர்.

    மேலும் இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரு வரை பிடித்து போலீ சார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • உடனடியாக இதுகுறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
    • மர்ம நபர்கள் சுவரில் துளையிட முயன்ற பகுதி நேரடியாக வங்கியின் லாக்கர் அறைக்கு செல்கிறது.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது.

    நேற்று காலை 11 மணியளவில் இந்த வங்கியின் பின்பக்க சுவரை உடைத்து மர்ம நபர்கள் சிலர் துளையிட்டு கொண்டிருந்தனர்.

    இதனை அந்த வழியாக வந்த வங்கியின் மேலாளர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறத்து கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருப்பூர் போலீசார் வங்கியின் சுவரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதில் மர்ம நபர்கள் சுவரில் துளையிட முயன்ற பகுதி நேரடியாக வங்கியின் லாக்கர் அறைக்கு செல்கிறது.

    எனவே மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் சுவரை துளையிட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம்நபர்களை தேடி வருகின்றனர்.

    • லாக்கரை உடைக்க முடியாததால் விபூதி குங்குமம் தூவி சென்றனர்
    • கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் அம்பாபுரம் ஜிபிஎம் தெருவில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு சென்றனர். நள்ளிரவில் நோட்டமிட்ட மர்ம நபர்கள் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்குள்ள ஒரு பீரோவை உடைத்து அதனை திறந்தனர்.

    அதில் நகை பணம் எதுவும் இல்லை. மற்றொரு அறைக்கு சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்தனர். நீண்ட நேரம் போராடியும் அவர்களால் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும் தங்களுடைய கைரேகை பதிவு ஆகாமல் இருக்க தாங்கள் கொண்டு வந்த விபூதி குங்குமம் ஆகியவற்றை அலுவலகம் முழுவதும் தூவி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலையில் நிதி நிறுவனத்தை திறக்க வந்த ஊழியர்கள் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து நிறுவன உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நிதி நிறுவனத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவு ஆகியிரு ப்பதாக கூறப்படுகிறது. இதனை வைத்து கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையடிக்க வந்த இடத்தில் விபூதி குங்குமத்தை வீசி சென்ற சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சம்பவத்தன்று பராமரிப்பாளர் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு திறந்தநிலையில் இருந்தது.
    • ஆனால் பொரு ட்கள் எதுவும் திருடப்பட வில்லை. கதவுகள் மட்டும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி பிரீத்தா (31). இவர் தற்போது அன்னஞ்சி விலக்கில் குடியிருந்து வருகிறார். வாரம் ஒருமுறை தாமரைக்குளத்தில் உள்ள வீட்டை பார்த்து செல்வார். மேலும் மரியபாக்கியம் என்பவரை பராமரிப்பி ற்காக நியமித்துள்ளார்.

    சம்பவத்தன்று மரிய பாக்கியம் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு திறந்தநிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். ஆனால் பொரு ட்கள் எதுவும் திருடப்பட வில்லை. கதவுகள் மட்டும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதுகுறித்து பிரீத்தாவுக்கு தகவல் தெரிவித்து, பெரியகுளம் தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகி ன்றனர்.

    • வீட்டின் கதவை திறக்கும் சத்தம் கேட்டு ராஜ்குமார் திடுக்கிட்டு எழுந்தார்.
    • இருவரும் திருடுவதற்காக வீட்டின் கதவை திறக்க முயன்றபோது சிக்கியதும் தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த பாவந்தூர் தக்காவை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் ராஜ்குமார்(37). இவர் சம்பவத்தன்றுஇரவு வீட்டின் முன்புறம்தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறக்கும் சத்தம் கேட்டு ராஜ்குமார் திடுக்கிட்டு எழுந்தார். அப்போது 2 மர்ம நபர்கள் வீ்ட்டின் கதவை திறந்து திருட முயற்சித்துக்கொண்டி ருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் 2 மர்ம நபர்களையும் துரத்தி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னா த்தூர் மெயின்ரோட்டை சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேஷ்(36), ஆறுமுகம் மகன் விஜய்(30) என்பதும் இருவரும் திருடுவதற்காக வீட்டின் கதவை திறக்க முயன்றபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேஷ், விஜய் இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • வீட்டில் எந்த பொருளும் திருடுபோகவில்லை. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் நகை, பணம் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே வடபுதுப்பட்டியை சேர்ந்தவர் காசிராஜ்(67). இவருக்கு குபேரன்நகரில் சொந்தவீடு உள்ளது. அந்த வீட்டின் கீழ்தளத்தில் சிவகாசி வடமலாபுரம் பகுதிைய சேர்ந்த நாச்சியார்கண்ணன் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.

    மேல்தளத்தில் காசிராஜ் அவ்வப்போது தங்குவதற்காக சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டுக்கு சென்ற போது வீட்டின் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கதவும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.

    மேல்தளத்திலும் இதேபோல் பொருட்கள் சிதறிகிடந்தன. ஆனால் வீட்டில் எந்த பொருளும் திருடுபோகவில்லை. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் நகை, பணம் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் துணிக்கடை, மளிகை கடை உள்ளிட்டவை உள்ளன.
    • கடைகளில் நேற்று நள்ளிரவில் 5 இடங்களில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர்.

    காகாபாளையம்:

    சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையான காக்காபாளையம் பகுதியில் மளிகை கடை, பேன்சி ஸ்டோர், டீக்கடை மற்றும் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் துணிக்கடை, மளிகை கடை உள்ளிட்டவை உள்ளன. இந்த கடைகளில் நேற்று நள்ளிரவில் 5 இடங்களில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர்.

    இது மட்டும் அல்லாமல் இப்பகுதியில் தொடர் திருட்டு மர்மமாகவே நடைபெற்று வருகிறது .இதனால் போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .கடந்த வாரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் இரண்டு முறை திருட முயற்சி நடந்துள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வீடு, கடைகளில் அடிக்கடி திருட்டு நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். அதுவும் போலீஸ் நிலையம் மிக அருகாமையில் இருந்தும் திருடர்களின் துணிச்சலால் பொதுமக்கள் பயந்து போய் உள்ளனர். இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து திருட்டு மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • இக்கோவிலில் வழக்கம் போல் பூஜை செய்வதற்கு அர்ச்சகர் பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார்.
    • அப்போது எந்த பொருட்களும் திருடு போகவில்லை.

    கடலூர்:

    கடலூர் அருகே குமராபுரத்தில் பிரசித்தி பெற்ற 41 அடி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழக்கம் போல் பூஜை செய்வதற்கு அர்ச்சகர் பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் கேட்டில் இருந்த பூட்டு உடைந்து கீழே கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த அர்ச்சகர் பார்த்தசாரதி கோவில் வளாகத்தில் பார்த்த போது பொருட்கள் மற்றும் சாமி சிலைகள் இருக்கும் அறையின் பூட்டையும் உடைக்க முயற்சி செய்தது தெரியவந்தது. மேலும் பொதுமக்கள் , ஏதேனும் சாமி சிலை மற்றும் பொருட்கள் திருடு சென்று உள்ளதா? என்பதை பார்வை யிட்டனர் அப்போது எந்த பொருட்களும் திருடு போகவில்லை.

    இந்த நிலையில் கோவிலில் 3-வது முறையாக மர்ம நபர்கள் திருட முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சில மாதங்களுக்கு முன்பு ஆஞ்சநேயர் சிலையில் அணிந்திருந்த வெள்ளி பூணூலை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த முறை மீண்டும் பூட்டை உடைத்து திருட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×