என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்பாடியில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து கொள்ளை முயற்சி
- பொதுமக்கள் அச்சம்
- பணம், நகை இல்லாததால் ஏமாற்றுத்துடன் திரும்பிய கும்பல்
வேலூர்:
காட்பாடி தாராபட வீடு பாலாஜி நகர் பகுதியில் நேற்று மர்ம கும்பல் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுள்ளனர்.அங்குள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு பணம், நகை எதுவும் இல்லாததால் கும்பல் ஏமாற்றுத்துடன் திரும்பியதாக கூறப்படுகிறது. இன்று காலை வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததைக் கண்ட உரிமையாளர்கள் காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட முயற்சி நடந்துள்ளது. விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் வீடுகளைப் பூட்டி விட்டு வெளியே செல்லும்போது போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்
அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.






