என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ் வீட்டில் கொள்ளை முயற்சி
- பூட்டை உடைத்து துணிகரம்
- பொருட்கள் இல்லாததால் ஜெர்கினை எடுத்துச் சென்ற கும்பல்
செங்கம்:
செங்கம் புதிய பஸ் நிலையம் பின்புறம் செந்தமிழ் நகர் போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளது. இந்தப் பகுதியில் அருணகிரி என்பவர் வசித்து வருகிறார்.
இவர் திருவண்ணாமலையில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலைக்கு பணிக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் அருணகிரி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து உள்ளனர். அதில் நகை பணம் பொருட்கள் இல்லை. ஆனால் ஜெர்கின் மட்டும் இருந்தது.
அதனை விட்டு வைக்காமல் கிடைத்த வரைக்கும் லாபம் என்று மர்மக்கொம்பன் அணிந்து வந்த பழைய ஜெர்கினை விட்டு விட்டு புதிய ஜெர்கினை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
Next Story






