மளிகை கடையில் ரூ.20 ஆயிரம் கொள்ளை

சி.சி.டி.வி. காமிராவில் 2 கொள்ளையர்கள் உருவம் சிக்கியதுதனிப்படை போலீசார் விசாரணை
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் ஜான் செல்வன் (வயது 58).

இவர், பார்வதிபுரம் சாரதா நகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலையில் கடைக்கு வந்தபோது கடையின் பின்பக்க சுவர் துளையிடப்பட்டு இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் மளிகை பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பக்கத்தில் உள்ள வெல்டிங் ஒர்க் ஷாப்பிலும் மர்ம நபர்கள் திருடி இருப்பது தெரிய வந்தது.

சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை யர்கள் உருவம் சிக்கியது. இரண்டு கொள்ளையர்கள் மளிகை கடையில் உள்ள பொருட்களை 2 சாக்கு பைகளில் எடுத்து செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கடையில் இருந்த கைரேகைகளையும் பதிவு செய்துள்ளனர். சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற் கொண்டு உள்ளனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள வாலிபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com