என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தபோது எடுத்த படம்.
கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 150 நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் அகற்றம்
- தேவசம்போர்டு நிர்வாகத்துடன் இணைந்து பேரூராட்சி நிர்வாகம் “திடீர்” நடவடிக்கை
- இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் களைகட்டிஉள்ளது. இந்த சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறைகடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரைசாலை, மெயின் ரோடு, சன்னதி தெரு போன்ற பகுதிகளில் நடைபாதைகளைஆக்கிர மித்து தள்ளுவண்டிமற்றும் உருட்டு வண்டி கடைகள் வைக்கப்பட்டு உள்ளன.
இதனால் இந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரைசாலை, காந்தி மண்டபம்பஜார், மெயின் ரோடு, பழையபஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு போன்ற பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிர மித்து வைக்கப்பட்டிருந்த 150- க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகளை பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக அகற்றினார்கள்.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலை மையில் அகஸ்தீஸ்வ ரம் தாசில்தார் ராஜேஷ் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த்ஆகியோர்முன்னிலையில்இந்தஆக்கிரமிப்புகடைகள் அகற்றும் பணி நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில்பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா உத்தரவின்பேரில் கன்னியாகுமரிபோலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் ஏராளமான போலீசார்பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். பலத்தபோலீஸ் பாது காப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.






