என் மலர்
உள்ளூர் செய்திகள்

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்திய போது எடுத்த படம்
கன்னியாகுமரியில் 50 கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை
- 18 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
- 11 கடைகளுக்கு அபராதம்
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலாத்த லமான கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. இந்த சீசனையொட்டி ஆங்காங்கே நடைபாதைகளில் ஏராள மான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கன்னியாகு மரியில் நேற்று குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கசிவம் நாகர்கோவில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் குமாரபாண்டியன், தக்கலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவின்ரகு ஆகியோர் கொண்ட குழுவினர் ஒரு குழுவாகவும் மேல்புறம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வின்சென்ட்கிளாட்சன், குளச்சல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி, திருவட்டார்வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்னொரு குழுவாகவும் தனித்தனியாக சென்று 50-க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரி கடற்கரை சாலை, மெயின்ரோடு, திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி உள்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதுகண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த கடைகளில் இருந்து 18 கிலோ 750 கிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






