search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடியூரப்பா"

    • கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு தோல்வி கொடுக்க வேண்டும்.
    • மே 13-ந்தேதியுடன் பா.ஜனதாவுக்கு இறுதிச்சடங்கு நடக்கும்.

    மைசூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல்கட்சி தலைவர்கள் சவால் விடுவதும், குற்றச்சாட்டுகளை கூறும் சம்பவங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் உப்பள்ளியில் நடந்த வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், சிலர் பா.ஜனதாவில் அனைத்து பதவிகளையும், அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டு வேறு கட்சிக்கு சென்றுள்ளனர். பா.ஜனதாவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற ஜெகதீஷ் ஷெட்டரை வெற்றி பெற விடக்கூடாது. அவருக்கு நாம் யார் என்று பாடம் புகட்ட வேண்டும். இனி அவரது பெயரை நான் குறிப்பிட மாட்டேன். துரோகி என கூறுவேன். கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு தோல்வி கொடுக்க வேண்டும். நான் எனது ரத்தத்தில் எழுதி தருகிறேன், கர்நாடகத்தில் இந்த முறை பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வரும் என்று பேசினார்.

    இந்த நிலையில் நேற்று காலை மைசூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் எடியூரப்பாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து கூறியதாவது:-

    எடியூரப்பா இந்த முறை பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் ரத்ததால் எழுதி தருவதாக கூறியுள்ளார். அந்த கட்சி 40 சதவீத கமிஷன் பெற்றுள்ளது. இதனால் 40 சதவீத கமிஷன் போல் 40 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். கர்நாடகத்தில் இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என நான் எனது ரத்தத்தில் எழுதி கொடுக்கிறேன்.

    இரட்டை என்ஜின் அரசு இட ஒதுக்கீடு விவகாரத்தில் மோசடி நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. பா.ஜனதா ஒரு துரோக கட்சி என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியும். தேர்தல் நேரத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் தேன் கூட்டில் கைவைத்து பா.ஜனதாவினர் ஏமாற்றியுள்ளனர்.

    அமித்ஷாவும், நீங்களும் இடஒதுக்கீடு விவகாரத்தில் உறுதியாக இருக்கிறீர்களா? அல்லது பொய் சொல்லி ஏமாற்றுகிறீர்களா?. லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் பிச்சைக்காரர்களா?. அந்த சமுதாயத்தினருக்கு தலா 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக நீங்கள் நாடகமாடுகிறீர்கள்.

    வருகிற மே 13-ந்தேதியுடன் பா.ஜனதாவுக்கு இறுதிச்சடங்கு நடக்கும். அனைவருக்கும் சம பங்கீடு கொடுப்போம். இதையே நாங்கள் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் களத்தில் இருப்பதால் 3 முனை போட்டி நிலவுகிறது.
    • 170 முதல் 180 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலில் வெளியிடப்படும்.

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் களத்தில் இருப்பதால் 3 முனை போட்டி நிலவுகிறது.

    காங்கிரஸ் கட்சி முதல்கட்டமாக 124 தொகுதிக்கும், 2-வது கட்டமாக 41 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. மதசார்பற்ற ஜனதாதளம் 93 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. பா.ஜனதா இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

    இந்நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என்று முன்னாள் முதல்-மந்திரியான எடியூரப்பா தெரிவித்துள்ளார். 170 முதல் 180 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலில் வெளியிடப்படும் என்று அவர் டெல்லியில் இன்று காலை நிருபர்களிடம் கூறினார்.

    பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

    • கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும்.
    • இந்த தேர்தலில் பா.ஜ.க. 100 சதவீதம் வெற்றி பெறும் என எடியூரப்பா தெரிவித்தார்.

    பெங்களூரு:

    முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதி முடிவடைகிறது.

    மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.

    இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.

    ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடியின் தலைமையில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். காங்கிரஸ் கட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. அதனால்தான் அவர்கள் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். பா.ஜ.க.வில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் உள்ளனர். அவர்களை கர்நாடக மக்கள் வரவேற்கிறார்கள். எனவே கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. 100 சதவீதம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கூறினார்.

    • தங்கள் சமூகத்தினருக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக பஞ்சாரா சமூகத்தினர் கூறி உள்ளனர்.
    • கர்நாடக மக்கள்தொகையில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் சேர்ந்து 24 சதவீதம் உள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் பட்டியலின சமூகத்திற்கான இடஒதுக்கீடு தொடர்பாக, பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு சமீபத்தில் புதிய முடிவை எடுத்தது. கல்வி மற்றும் வேலைகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை மாற்றியமைத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து பஞ்சாரா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இடஒதுக்கீட்டு சதவீதத்தை பிரித்ததால் தங்கள் சமூகத்தினருக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக பஞ்சாரா சமூகத்தினர் கூறி உள்ளனர்.

    இன்று ஷிமோகா மாவட்டத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். பேரிகார்டுகளை தள்ளிவிட்டு முன்னேற முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இடஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவால் தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், மத்திய அரசின் பரிந்துரையை மாநில அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் பஞ்சாரா சமூகத் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    பஞ்சாரா சமூகம் மாநிலத்தில் ஒரு பட்டியலின சமூகத்தின் துணை சாதியாகும். கர்நாடக மக்கள்தொகையில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் சேர்ந்து 24 சதவீதம் உள்ளனர்.

    முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் 2பி பிரிவில் இருந்து முஸ்லிம்களை நீக்கவும் மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, முஸ்லிம் தலைவர்களும் பாஜக அரசை விமர்சித்துள்ளனர்.

    வொக்கலிகர்கள் மற்றும் வீரசைவ-லிங்காயத்துகளுக்கு அந்த 4 சதவீதத்தை பிரித்து கொடுக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
    • எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.

    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஜனதாதளம் (எஸ்) கட்சி ஏற்கனவே 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. மூன்று கட்சிகளும் பல்வேறு பெயர்களில் யாத்திரைகள் மூலம் பொதுக்கூட்டங்களை நடத்தி பலத்தை காட்டி வருகின்றன.

    கா்நாடக தேர்தல் களத்தில் வழக்கமாக பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தான் போட்டியில் இருக்கும். இந்த முறை புதிய வரவாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் களத்தில் குதிக்கின்றன. 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. இந்த முறை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆளும் பா.ஜனதாவுக்கு எதிரான தனது அரசியலை மிக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

    தேர்தலை சந்திக்கும் விதமாக பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே பா.ஜ.க.வில் உள்கட்சி மோதல் வலுத்து வருகிறது. கர்நாடகாவில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, தன் மகனை தனது பாரம்பரிய சிக்காரிபுரா தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்தார். ஆனால் கட்சி தலைமை ஒப்புதல் வழங்காத நிலையில் எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக எடியூரப்பா சென்றார்.

    விஜய் சங்கல்ப யாத்திரைக்கு தலைமை தாங்க சென்ற அவரது காரை சி.டி.ரவியின் ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டனர். இதனால் எடியூரப்பா தனது பிரசார பயணத்தை ரத்து செய்து, திரும்பிச் சென்றார். இதன்மூலம் பா.ஜ.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதில், விஜய் சங்கல்ப் யாத்திரையில் கலந்து கொள்ளாமல் எடியூரப்பா அந்த இடத்தை விட்டு வெளியேறியதையும், அந்த இடத்தில் இருந்த சி.டி.ரவி தனது ஆதரவாளர்களுடன் வேறு திசையில் நடந்து செல்வதையும் காண முடிகிறது.

    எடியூரப்பாவுக்கு எதிராக கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி நேரடியாக போர்க்கொடி தூக்கியிருப்பது, பா.ஜ.க.வில் இருக்கும் உட்கட்சி பூசலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கும், வீட்டு வசதி மந்திரி சோமண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    யாரும் யாரையும் புறக்கணிக்க முடியாது. எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனது மகன் விஜயேந்திரா கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது தான் எங்களின் ஒரே நோக்கம். மற்ற விஷயங்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தல் நேரத்தில் அதிருப்தியை வெளிப்படுத்துவதால் கட்சிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். அதிருப்தியை சரிசெய்யும் பணியை கட்சி மேலிட தலைவர்கள் செய்கிறார்கள்.

    அனைத்து சமூகங்களையும் சமமாக பார்க்க வேண்டும். லிங்காயத்து சமுதாய ஓட்டு தேவை இல்லை என்று சி.டி.ரவி கருத்து கூறி இருந்தால் அது தவறு. இதுபற்றி அவருடன் பேசுகிறேன்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    இந்த சூழலில் விஜய சங்கல்ப யாத்திரையில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணிக்கு கர்நாடகம் வருகிறார். தனி விமானம் மூலம் சித்ரதுர்கா மாவட்டம் தோரனகல்லில் உள்ள விமான நிலையத்திற்கு வருகிறார். அவர் அங்கிருந்து கார் மூலம் செல்லகெரேவுக்கு வந்து பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    • சிக்கமகளூரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக எடியூரப்பா இன்று சென்றார்.
    • சி.டி.ரவியின் ஆதரவாளர்கள் எடியூரப்பாவின் காரை சூழ்ந்துகொண்டு கெரோ செய்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தில் பாஜக-வில் உள்கட்சி மோதல் வலுத்து வருகிறது. கர்நாடகாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் மகனை தனது பாரம்பரிய சிக்காரிபுரா தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்தார். ஆனால் கட்சி தலைமை ஒப்புதல் வழங்காத நிலையில் எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே உரசல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக எடியூரப்பா இன்று சென்றார்.  விஜய் சங்கல்ப யாத்திரைக்கு தலைமை தாங்க சென்ற அவரது காரை சி.டி.ரவியின் ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு கெரோ செய்தனர். இதனால் அப்செட் ஆன எடியூரப்பா தனது பிரசார பயணத்தை ரத்து செய்து, திரும்பிச் சென்றார். இதன்மூலம் பாஜகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதில், விஜய் சங்கல்ப் யாத்திரையில் கலந்து கொள்ளாமல் எடியூரப்பா அந்த இடத்தை விட்டு வெளியேறியதையும், அந்த இடத்தில் இருந்த சி.டி.ரவி தனது ஆதரவாளர்களுடன் வேறு திசையில் நடந்து செல்வதையும் காண முடிகிறது.

    • இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.
    • ராகுல் காந்திக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

    விஜயாப்புரா :

    முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா விஜய சங்கல்ப யாத்திரை மேற்கொண்டு வருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் எங்கள் கட்சிக்கு மக்களின் ஆதரவு கிடைத்து வருகிறது. எங்கள் இரட்டை என்ஜின் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கூறி வருகிறோம். கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.

    பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இணையானவர் இல்லை. வெளிநாட்டிற்கு சென்று நமது நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று ராகுல் காந்தி குறை கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    • கர்நாடகா முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா கலபுரகி நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
    • அங்கு ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவரான பி.எஸ்.எடியூரப்பா கலபுரகி நகருக்கு நேற்று ஹெலிகாப்டர் ஒன்றில் வருகை தந்தார். அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது அப்பகுதியில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் ஷீட்டுகள், காகிதங்கள், கவர்கள் உள்ளிட்ட குப்பைகள் காற்றில் பறந்தன. இதனால் அந்தப் பகுதியே தூசு மண்டலம் போன்று காட்சியளித்து, தெளிவற்ற சூழல் காணப்பட்டது. ஹெலிகாப்டர் தரையிறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

    இதையறிந்து கொண்ட பைலட் ஹெலிகாப்டரை தரையிறக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன்பின் அதிகாரிகள் அந்தப் பகுதியை தூய்மை செய்தனர். அதுவரை விமானி வானத்தில் பறந்தபடி இருந்துள்ளார். இதன்பின் ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதனால் ஆபத்து எதுவும் ஏற்படாமல் எடியூரப்பா உயிர் தப்பினார். இதனால், சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    • நான் அரசியலில் இந்த உயரத்திற்கு வளர ஆர்.எஸ்.எஸ். தான் காரணம்.
    • தேவகவுடா எனக்கு ஒரு வழிகாட்டி.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபையின் கூட்டு மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தநிலையில், பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக ஏற்கனவே அறிவித்தார். அவருக்கு நேற்று சபையில் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதன்பிறகு இறுதியில் எடியூரப்பா உணர்ச்சி பூர்வமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது வாழ்க்கையின் கடைசி மூச்சு உள்ள வரை பா.ஜனதாவை பலப்படுத்த நேர்மையாக உழைப்பேன். கட்சியை ஆட்சி கட்டிலில் அமர வைப்பேன். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். சிலர் மோடி, பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்க்கும் மாய உலகில் வாழ்கிறார்கள். இதனால் தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் அவர்களின் இந்த மாய உலகம் மிக விரைவிலேயே நொறுங்கிவிடும்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும். எனக்கு பா.ஜனதா அநீதி இழைத்ததாகவும், புறக்கணித்து விட்டதாகவும் சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடி என்னை ஓரங்கட்டியதே இல்லை. பிரதமர் மோடி எனக்கு உரிய பதவி மற்றும் கவுரவத்தை வழங்கினார். இதற்காக அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

    கட்சி எனக்கு கொடுத்த பதவி, வாய்ப்புகளை நான் மறக்கவே மாட்டேன். தேவகவுடா எனக்கு ஒரு வழிகாட்டி. அவரை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. இந்த வயதிலும் தேவகவுடா பிரச்சினைகளை பற்றி பேசுகிறார். நான் அரசியலில் இந்த உயரத்திற்கு வளர ஆர்.எஸ்.எஸ். தான் காரணம். நான் அங்கு பயிற்சி பெற்றதால் தான் எனக்கு பல பதவிகள் கிடைத்தன.

    நான் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன். தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஆனால் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை ஆட்சியில் அமர்த்த பாடுபடுவேன்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    • இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி 27-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
    • வளர்ச்சி பணிகள் என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு நடைமுறை.

    பெங்களூரு :

    சிவமொக்காவில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    சிவமொக்கா மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (நேற்று) மட்டும் ரூ.1,000 கோடிக்கு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சிவமொக்கா விமான நிலையத்திற்கு எடியூரப்பா பெயரை சூட்ட மந்திரிசபை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு ஒரு வரைவு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 27-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

    ஷராவதி அணையில் நீரில் மூழ்கிய நிலங்களின் விவசாயிகளுக்கு மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இதுகுறித்து ஒரு அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். சிவமொக்கா-சிகாரிபுரா-ராணிபென்னூர் ரெயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    இதற்கு பிரதமர் மோடி சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். வளர்ச்சி பணிகள் என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு நடைமுறை. குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. சிவமொக்காவின் வளர்ச்சிக்கு இருபெரும் தலைவர்களான எடியூரப்பாவும், ஈசுவரப்பாவும் நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    • கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கும்.
    • எடியூரப்பாவுக்கும், பசவராஜ் பொம்மைக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மந்திரிசபையை விரிவாக்கம் செய்யக்கூறி நீண்ட நாட்களாக போராடி வருகிறார்கள். ஆனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையோ, கட்சி மேலிடமோ ஆர்வம் காட்டவில்லை. இதன் ரகசியம் என்ன என்று எனக்கு தெரியும்.

    எடியூரப்பா தனது மகன் விஜயேந்திராவுக்கு மந்திரி பதவி வழங்குமாறு கேட்டிருந்தார். தற்போது மந்திரிசபையை விரிவாக்கம் செய்தால், எடியூரப்பாவின் மகனுக்கு மந்திரி பதவியை கொடுக்க வேண்டி இருக்கும் என்ற காரணத்தால் பா.ஜனதாவினர் மந்திரிசபையை விரிவாக்கம் செய்யாமல் இருக்கிறார்கள். இதன்மூலம் பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது.

    ஆர்.எஸ்.எஸ்.சின் பேச்சை கேட்டுக்கொண்டு எடியூரப்பாவை தரம் தாழ்த்த பார்க்கிறார்கள். தற்போது எடியூரப்பாவுக்கும், பசவராஜ் பொம்மைக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் எடியூரப்பாவின் மகனுக்கு மந்திரி பதவி கொடுக்காதது தான். கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக மந்திரிசபையில் 6 இடங்களை காலியாக வைத்திருக்கும் பசவராஜ் பொம்மை, முக்கியமான துறைகளை தன்னிடமே வைத்திருப்பது ஏன்?.

    ஏனெனில் அப்போதுதான் அவரால் பல்வேறு ஊழல்களில் ஈடுபட முடியும். மொத்தம் உள்ள துறைகளில் 4-ல் ஒரு பங்கு துறைகள் பசவராஜ் பொம்மையிடமே உள்ளன. அவற்றை விட்டுக்கொடுக்க அவரால் முடியாது. பசவராஜ் பொம்மை, கட்சி மேலிட தலைவர்களிடம் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அழுத்தம் கொடுத்தால் கண்டிப்பாக அனுமதி கிடைக்கும். ஆனால் அதை அவர் செய்ய மாட்டார். கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
    • பா.ஜ.க. கட்சியின் வலுவான தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என எடியூரப்பா கூறினார்.

    பெங்களூரு:

    கர்நாடக பா.ஜ.க. கட்சியின் சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க.வின் உயர்நிலை குழு உறுப்பினருமான எடியூரப்பா கலந்து கொண்டு பேசியதாவது:

    கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 10 அல்லது 12-ம் தேதிக்கு முன்னதாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 140 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

    காங்கிரஸ் கட்சியில் முதல் மந்திரி யார் என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் தாங்கள் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் தனித்தனியாக யாத்திரையை தொடங்கியுள்ளனர்.

    ராகுல் காந்தி உங்கள் தலைவரா? எங்கள் கட்சியின் வலுவான தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார். அவரை உலகம் முழுவதும் உள்ள மக்கள் நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள். அதனால் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் தலைமையில் கர்நாடகம் உள்பட வரும் அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறுவது உறுதி. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

    நமது கட்சியினர் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். இதை நீங்கள் செய்தால், நமது கட்சி 130 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி.

    அதிகாரம், பணம், படை பலம், மது, சாதி, மதம், வெறுப்புகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த காங்கிரசின் நாட்கள் முடிந்துவிட்டது. அது தற்போது எடுபடாது என கூறினார்.

    ×