search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடுமலை"

    • இரண்டாம் மண்டல பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • நிலைப்பயிராக மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகள் உள்ளன.

    உடுமலை :

    பி.ஏ.பி., கிளை கால்வாய்களில் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு இரண்டாம் அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலைப்பயிராக மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகள் உள்ளன.

    போதிய மழை இல்லாத காரணத்தால் பயிர்களுக்கு கூடுதலாக தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. இந்நிலையில் உடுமலை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.குறித்த நேரத்தில் தண்ணீர் நீரிட விலையெனில் பயிர்கள் கருகி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் திருட்டை தடுக்க பொதுப்பணித்துறையினர் போலீஸ் உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைத்து ரோந்து செல்ல வேண்டும் தண்ணீர் திருட்டை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் கௌரவமான வாழ்க்கை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் சர்வதேச ஓய்வூதியர் பாதுகாப்பு தினமான இன்று அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் கௌரவமான வாழ்க்கை உத்தரவாதப்படுத்த வேண்டும், அனைத்து முதியோர்களுக்கும் வேறுபாடு பார்க்காமல் பணம், மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்.

    புதிய ஓய்வூதியத்திற்கு ரத்து செய்து ஏற்கனவே உள்ள பயனளிப்பு ஓய்வு பெற்று அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியம் அமைப்பு செயலாளர் ஸ்ரீரங்கன், அரசு போக்குவரத்துக் கழகம் ஓய்வூதியர் சங்கம் காளிமுத்து, மின்வாரியம் ஓய்வூதியம் பெற்றோர் நல அமைப்பு எஸ்.எஸ்.அலி, அகில இந்திய அஞ்சல் ஓய்வூதிய அமைப்பு செயலாளர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
    • பல்வேறு சலுகைகள் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டி உள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் , கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசாணையால் மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு, சம்பள உயர்வு, பஞ்சபடி ,புதிய பதவிகள் பெறுவது உட்பட பல்வேறு சலுகைகள் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டி உள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பஞ்சப்படி உயர்வு காலம் தாழ்த்தி தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு பறிக்கும் விதமாக அரசாணை உள்ளதால் அரசாணைைய உடனே ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு தொழிலாளர் சங்கம் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் மாரிமுத்து ,கணக்காளர் தொழிலாளர் பொன்ராஜ், சிஐடியு. கோவிந்தன், ஏடிபி. சக்திவேல் ,ஐக்கிய சங்கம் செல்வராஜ், என்ஜினீயர் சங்கம் ஜெயக்குமார், என்ஜினீயர் கழகம் செல்வகுமார், மோகன் உட்பட 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் தரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    • சந்தேகப்படும் படியான நபர்கள் மற்றும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டத்தின் அண்டை மாவட்டமான கோவை மற்றும் பொள்ளாச்சி தாலுகாவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் எதிரொலியாக திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் தரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆங்காங்கே தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து சந்தேகப்படும் படியான நபர்கள் மற்றும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., சசாங்சாய் உத்தரவின் பேரில் உடுமலை உட்கோட்ட காவல்சரக பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை டி.எஸ். பி., தேன்மொழிவேல் தலைமையில் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் இரவு பகலாக வாகனங்களை கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில் தளி காவல் சரக பகுதியில் பள்ளபாளையம் அருகே உடுமலை- மூணாறு சாலையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு போலீசார் இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வாகனங்களை தணிக்கை செய்தும் அதில் செல்கின்ற நபர்கள் குறித்த விவரங்களையும் விசாரித்து வருகின்றனர்.

    • ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா 26-ந் தேதி தொடங்கி 4ந் தேதி வரை நடக்கிறது.
    • மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தாயார் உள் புறப்பாடு மற்றும் 7.30 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலை தளி ரோட்டில் பள்ளபாளையம்அருகில் உள்ள உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 4ந்தேதி வரை நடக்கிறது.வரும் 27 ந்தேதி பிரம்மச்சாரிணி அலங்காரமும் மாலை 5:30 மணிக்கு உமா நந்தினி பக்தி இன்னிசையும் நடக்கிறது. 28 ந்தேதி சந்திரகாந்தா அலங்காரம் மாலை கமலாலயா நாட்டியப்பள்ளி பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. வியாழக்கிழமை குஷ்மந்தா அலங்காரம் மாலை உமா நந்தினியின் சூழலும் பாடலும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    5-ம் நாள் (வெள்ளிக்கிழமை) ஸ்கந்த மாதா அலங்காரமும் மாலை சொர்ணாலயா நாட்டியாஞ்சலி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. 6-ந்தேதி கார்த்தியாயினி அலங்காரமும் மாலை ரிதம் இசைப்பள்ளி பாடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    7-ந்தேதி கால் ராத்திரி அலங்காரமும் மாலை பரதநிகழ்ச்சியும் நடக்கிறது. 8ந்தேதி மகா கெளரி அலங்காரமும் மாலை பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. 8 ந்தேதி மகா கெளரி அலங்காரமும் மாலை பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தாயார் உள் புறப்பாடு மற்றும் 7.30 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் மற்றும் இன்னர் வீல் கிளப்பினர் செய்து வருகின்றனர்.

    • உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
    • 1098 எண்ணுக்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் உதவி மையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி தலைமை ஆசிரியை அந்த மாணவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து 1098 எண்ணுக்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் உதவி மையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.அவர்களின் விசாரணையைத் தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பிறகு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மீது உடுமலை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் அது ஒருதலைபட்சமாக இருப்பதாக கூறி மாணவியின் தாயார் வக்கீல் உதவியுடன் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உடுமலை குட்டைத்திடலில் தனியார் வீட்டுமனை அமைந்துள்ள பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன
    • பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் வீணாகி வருகிறது

    உடுமலை :

    உடுமலை போலீஸ் சார்பில் மது போதை, விபத்து, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை போலீசார் பறிமுதல் வைத்துள்ளனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பாதுகாப்பாக வைத்து பராமரிக்க வேண்டும். வழக்கு முடிந்ததும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வழக்கு முடிந்தது மற்றும் உரிமை கோரப்படாத வாகனங்களை, உரிய உத்தரவு அடிப்படையில், பொது ஏலம் விட வேண்டும் .

    இந்தநிலையில் உடுமலை குட்டைத்திடலில் மேம்பாலத்தின் கீழ், தனியார் வீட்டுமனை அமைந்துள்ள பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மோட்டார்சைக்கிள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு இல்லாமலும், வெயிலிலும், மழையிலும் நனைந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் வீணாகி வருகிறது. புதர் மண்டியும், பழைய இரும்புக்குக்கூட பயன்படாத அளவிற்கு வீணாகின்றன. எனவே நீதிமன்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்களை உரிய முறையில் பாதுகாக்கவும், உரிமை கோரப்படாத வாகனங்களை, வழிமுறைகள் அடிப்படையில் ஏலம் விட்டு, அரசுக்கு நிதி வருவாயை ஏற்படுத்தவும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீஸ் குடியிருப்பில் சிறுவர்கள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டது.
    • குடியிருப்பை சுற்றிலும் புதர் மண்டியும் காணப்படுகிறது.

     உடுமலை :

    உடுமலை போலீஸ் குடியிருப்பில் சிறுவர்கள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து அவை பராமரிக்கப்படாமல் உடைந்து உள்ளது.

    மேலும் பூங்கா பராமரிப்பின்றியும், குடியிருப்பை சுற்றிலும் புதர் மண்டியும் காணப்படுகிறது இதனால் இங்கு சிறுவர்கள் விளையாட அச்சமடைகின்றனர். அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.எனவே போலீஸ் குடியிருப்பில் உள்ள பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • உடுமலை வழியாக திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
    • 2 ரெயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது.

    உடுமலை :

    மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தில் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை திட்டம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நான்கு வழிச்சாலையில் பழநி, சண்முகநதி, அமராவதி ஆறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலங்கள், 2 ெரயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது.தற்போது உடுமலை-செஞ்சேரிமலை ரோடு மற்றும் உடுமலை-பல்லடம் மாநில நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையில், குறுக்கிடும் பகுதியில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி தீவிரமடைந்துள்ளது.இதில் செஞ்சேரிமலை ரோட்டில் பாலம் கட்டுமான பணிகளின் போது, போக்குவரத்து பாதிக்காமல் இருக்க தற்காலிக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், ஒரு பகுதியில், பாலம் கட்டுமான பணிகள் தீவிரமடைந்துள்ளது. மறு பகுதியில் பணிகள் இன்னும் துவங்கவில்லை.முக்கிய ரோடுகளின் குறுக்கிடும் பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற பிறகு ஆறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது.

    • 1987-89ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
    • மாணவர்கள் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.

    உடுமலை :

    உடுமலை திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 1987-89ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் உடுமலை தனியார் அரங்கில் நடந்தது.

    முன்னாள் ஆசிரியர் பயிற்சி மாணவர் தலைவர் பூபதி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சின்னப்பராஜ் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் வரவேற்றார்.பலரும் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் நிலையில் தங்களின் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து நல்லாசிரியர் விருது பெற்ற வீராசாமியை அனைவரும் வாழ்த்தினர். துணை ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.

    • தேஜஸ் அரங்கில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
    • ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    உடுமலை :

    உடுமலை புத்தகாலயம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் தளி ரோடு தேஜஸ் அரங்கில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.இங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு, சிறுகதை, கவிதை, மாணவர்களுக்கான பொது அறிவு, தமிழ், ஆங்கில நாவல்கள், வண்ண கோலங்கள், மருத்துவம், திரைப்படம் என ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, தேவையான புத்தகங்களை வாங்கியும் செல்கின்றனர்.

    இந்நிலையில் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தலைமையாசிரியர் கண்ணகி தலைமையில் புத்தக அரங்குகளை பார்வையிட்டனர். பின் தேவையான புத்தகங்களை வாங்கினர். இதற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் செய்திருந்தார். தொடர்ந்து வலசுபாளையம் சக்தி பவளக்கொடி குழுவினரின் வள்ளி, கும்மியாட்டம் கலைநிகழ்ச்சி நடந்தது.

    • முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • 69 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜ்குமார் தலைமை வகித்தார். பயிற்சி அலுவலர் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார்.

    உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் இ. டி. என். பொது மேலாளர் மோகன்ராஜ் ,அரசு கலைக் கல்லூரி முதல்வர் கல்யாணி ,உடுமலை நகராட்சி தலைவர் மத்தின், சமூக ஆர்வலர்கள் ராமராஜ் , செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 69 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.முடிவில்உதவி பயிற்சி அலுவலர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

    ×