search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வள்ளி கும்மியாட்டம்"

    • ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
    • மயான பூஜை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது.

    இதனையொட்டி கோவிலில் நள்ளிரவில் மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜைகள் முடிந்ததும் அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு அம்மனின் சூலம் தாங்கி சென்றனர்.

    அங்கு மயான மண்ணை கொண்டு மாசாணியம்மன் திருவுருவம் உருவாக்கப் பட்டிருந்து. நள்ளிரவு 1 மணிக்கு பம்பை இசை முழங்க மயான பூஜை தொடங்கியது.

    அப்போது அம்மன் அருளாளி அருண் சாமி வந்து ஆடியபடி, அம்மன் உருவத்தை சிதைத்து எலும்பை வாயில் கவ்வியபடியே பிடி மண்ணை எடுத்தார். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மாசாணி தாயே என பக்தி கோஷம் எழுப்பினர்.

    இந்த பூஜையில் ஆனைமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள், வெளிமாவட்டத்தினர், வெளி மாநிலத்தினர் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஸ்ரீ மாசாணி அம்மன் நற்பணி மன்றம் சார்பில் வள்ளி கும்மியாட்டமும் நடைபெற்றது. இதனையும் பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

    மயான பூஜையையொட்டி அங்கு ஆனைமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீநிதி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகா பூஜை நடந்தது. நாளை (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடக்கிறது.

    அதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சித்திரைத் தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவையும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.

    25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் திரளான பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 26-ந்தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடி இறக்குதல், காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜையும், 27-ந்தேதி காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.
    • பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    காங்கேயம் :

    காங்கேயம் அருகே உள்ள பாப்புரெட்டிப்பாளையம் பழனி ஆண்டவர் அக்கினி நட்சத்திர பரம்பரை தீர்த்தக் காவடி குழுவினர் சார்பில் வருடாந்திர அக்கினி நட்சத்திரத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் 750 பேர் கொடுமுடி காவேரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வந்து பழனிக்கு சென்று முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமிக்கு தீர்த்த அபிஷேகமும், ஆராதனையும் நடத்தி வழிப்பட்டனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    முன்னதாக பொத்திபாளையம் பஞ்சாயத்து துணைத்தலைவர் தெய்வசிகாமணி தலைமையில் பழனி ஆண்டவர் கோவிலில் கொடுவாய் வெற்றிவேலன் கலைக்குழு சார்பில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரியர் வேலன் தங்கவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேஜஸ் அரங்கில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
    • ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    உடுமலை :

    உடுமலை புத்தகாலயம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் தளி ரோடு தேஜஸ் அரங்கில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.இங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு, சிறுகதை, கவிதை, மாணவர்களுக்கான பொது அறிவு, தமிழ், ஆங்கில நாவல்கள், வண்ண கோலங்கள், மருத்துவம், திரைப்படம் என ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, தேவையான புத்தகங்களை வாங்கியும் செல்கின்றனர்.

    இந்நிலையில் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தலைமையாசிரியர் கண்ணகி தலைமையில் புத்தக அரங்குகளை பார்வையிட்டனர். பின் தேவையான புத்தகங்களை வாங்கினர். இதற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் செய்திருந்தார். தொடர்ந்து வலசுபாளையம் சக்தி பவளக்கொடி குழுவினரின் வள்ளி, கும்மியாட்டம் கலைநிகழ்ச்சி நடந்தது.

    • கொங்கு மண்டலத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • இரு மாதங்களாக பயிற்சி பெற்று பாரம்பரியத்தை மீட்டுள்ளனர்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் மாவட்டம் வேட்டுவபாளையம் ஊராட்சி அ.குரும்பபாளையத்தில் ஊர்மக்கள் சார்பில், பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் வள்ளி கும்மியாட்ட பயிற்சி கடந்த இரு மாதங்களாக நடைபெற்றது. இதையடுத்து அ.குரும்பபாளையம் குழு வள்ளிக் கும்மியாட்டம் அரங்கேற்ற விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். அ.குரும்பபாளையம் ஊர் தலைவர் பி.சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சுதா மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி அறங்காவலர் கே.வெங்கடாசலம், ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.கணேசன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். காவல் ஆய்வாளர் சரஸ்வதி வள்ளி கும்மியாட்ட குழுவினருக்கு பரிசு வழங்கினார்.

    பயிற்சி அளித்த சாமிக்கவுண்டம்பாளையம் வேலவன் வள்ளி கும்மி கலைக்குழு மற்றும் ஆய்வு மைய ஆசிரியர் எஸ்.ஏ.ராமசாமி, நடன ஆசிரியர் எஸ்.ஆர்.விக்னேஸ்குமார் ஆகியோர் கூறியதாவது:-குழு சார்பில் இது வரை திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆண்கள் மட்டுமே வள்ளிக்கும்மியில் இடம் பெற்று வந்த நிலையில், குழு சார்பில் 2009 ஆம் ஆண்டு முதல் பெண்களையும் இணைத்து இக்கலையை வளர்த்து வருகிறோம். மேலும் அ.குரும்பபாளையத்தில் நடைபெற்ற பயிற்சியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் உள்பட 60 வயதுக்கும் மேற்பட்டோர் இரு மாதங்களாக பயிற்சி பெற்று பாரம்பரியத்தை மீட்டுள்ளனர். சனிக்கிழமை நடைபெற்ற அரங்கேற்றத்தில், வள்ளி பிறந்தது முதல் முருகனை திருமணம் செய்து கொண்டது வரையிலான கதை, மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, மது, புகைப்பிடித்தல் ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, சாலை விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்து நடனம், பாடல் வடிவில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் சாமி கதைகள் ஆகியவை மேளங்களுடன் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. என்றார். மாலை தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    • கடந்த ஒரு மாத காலமாக தினந்தோறும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கும்மியாட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
    • சிறப்பு செய்யும் விதமாக அரங்கேற்ற விழா நடைபெற்றது.

    வீரபாண்டி :

    திருப்பூர் அருகே உகாயனூர் ஊராட்சியில் உள்ள நல்லகாளிபாளையத்தில் மங்கை வள்ளி கும்மி 34-வது குழுவினரின் அரங்கேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஒரு மாத காலமாக தினந்தோறும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கும்மியாட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் நன்றாக பழகிய நிலையில் அதை சிறப்பு செய்யும் விதமாக அரங்கேற்ற விழா நடைபெற்றது.

    கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை கற்றுக் கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். முருகன் வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும் பாடப்பட்டு பயிற்சி தரப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பரிய சீருடைகளை அணிந்து கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது.

    ×