search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police quarters"

    • புகார் அளித்தால் தங்களுக்கு வேலையில் ஏதும் பாதிப்புகள் ஏற்பட்டு விடுமோ? என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
    • பழமையான கட்டிடங்களை உடனடியாக இடிக்கவும் அங்கு வசிப்பவர்களுக்கு புதிய வீடுகளை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

    சென்னை:

    பொதுமக்களை காக்கும் காவல் பணியில் ஈடுபட்டுள்ள சென்னை மாநகர காவல் துறையினர் வசித்து வரும் குடியிருப்புகள் இடிந்து விழுந்தும் நிலையில் இருக்கின்றன என்று போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

    சென்னையில் காவலர்கள் குடியிருப்புகள் பல இடங்களில் கட்டப்பட்டுள்ளது. அங்கு போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்புகளில் பல ஆபத்தான முறையில் இடிந்து விடும் நிலையில் காணப்படுகிறது. கீழ்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர்கள் அங்கிருந்து காலி செய்யுமாறு அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரின் குடும்பப் பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர். மாற்று இடம் ஒதுக்கி கொடுக்காமல் எங்களை காலி செய்யச் சொன்னால் நாங்கள் எங்கே செல்வோம்? எனவே உரிய குடியிருப்புகளை அடையாளம் காட்டிவிட்டு எங்கள் வீடுகளை காலி செய்ய சொல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். கீழ்ப்பாக்கம் குடியிருப்பை போன்றே சென்னையில் நரியன்காடு பழைய போலீஸ் குடியிருப்பு, புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பு ஆகியவையும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஆனால் இங்கு குடியிருக்கும் காவலர்கள் அது தொடர்பான புகார் மனுக்களை கொடுப்பதற்கு தயங்குவதாக கூறப்படுகிறது. அது போன்று புகார் அளித்தால் தங்களுக்கு வேலையில் ஏதும் பாதிப்புகள் ஏற்பட்டு விடுமோ? என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

    சென்னை மாநகரில் இதேபோன்று பல்வேறு போலீஸ் குடியிருப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த குடியிருப்புகளிலும் காவலர்களுக்கு தேவையான வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை என்பதே போலீசாரின் குற்றச்சாட்டாக உள்ளது. பழமையான இது போன்ற போலீஸ் குடியிருப்புகளை இடித்து விட்டு அதற்கு பதில் புதிய குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே காவலர்களின் கோரிக்கையாக உள்ளது. கடந்தாண்டு கட்டி முடிக்கப்பட்டு காவலர்களின் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்ட குடியிருப்புகளும் சில இடங்களில் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக காவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களும் ஒரு வித பயத்துடனேயே அங்கு குடியிருந்து வருகிறார்கள். சிலர் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாடகை வீடுகளில் தங்கி இருக்கிறார்கள். எனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களின் குடும்பத்தை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உயர் அதிகாரிகள் போலீஸ் குடியிருப்புகளின் தரத்தை ஆய்வு செய்து பழமையான கட்டிடங்களை உடனடியாக இடிக்கவும் அங்கு வசிப்பவர்களுக்கு புதிய வீடுகளை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

    • போலீஸ் குடியிருப்பில் சிறுவர்கள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டது.
    • குடியிருப்பை சுற்றிலும் புதர் மண்டியும் காணப்படுகிறது.

     உடுமலை :

    உடுமலை போலீஸ் குடியிருப்பில் சிறுவர்கள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து அவை பராமரிக்கப்படாமல் உடைந்து உள்ளது.

    மேலும் பூங்கா பராமரிப்பின்றியும், குடியிருப்பை சுற்றிலும் புதர் மண்டியும் காணப்படுகிறது இதனால் இங்கு சிறுவர்கள் விளையாட அச்சமடைகின்றனர். அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.எனவே போலீஸ் குடியிருப்பில் உள்ள பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் அச்சம் அடைந்து உள்ளனர்.
    • குடியிருப்புகளை காட்டு யானை அடிக்கடி முற்றுகையிட்டு வருகிறது.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே சேரம்பாடி போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு பணிபுரியும் போலீசார் தங்கி பணிபுரியும் வகையில், அப்பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்புகளை காட்டு யானை அடிக்கடி முற்றுகையிட்டு வருகிறது. இந்தநிலையில் குட்டியுடன் காட்டு யானை ஒன்று போலீஸ் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்கு மூங்கில் மரங்களை ஒடித்து தின்றது. போலீசார் செல்லும் சாலையின் நடுவே யானை நின்றதால், போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்த சேரம்பாடி வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையை விரட்டினர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானை நடமாட்டத்தால் பணி முடிந்து குடியிருப்புக்கு திரும்பும் போலீசார் அச்சம் அடைந்து உள்ளனர்.

    • பா.ஜனதா கட்சியின் மேலப்பாளையம் நகர் கிழக்கு மண்டல நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.
    • குடிநீர் பிரச்சினையை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    நெல்லை:

    பா.ஜனதா கட்சியின் மேலப்பாளையம் நகர் கிழக்கு மண்டல நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.

    மண்டல தலைவர் பெரியதுரை தலைமை தாங்கினார்.மண்டல பொதுச்செயலாளர் பாலகுரு வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட பொது செயலாளர் சுரேஷ், ராதாபுரம் சட்டமன்ற பொறுப்பாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிர்வாகிகள் கோபால்,அருள் முகேஷ், சுப்பிரமணி சண்முகம் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    இந்த செயற்குழு கூட்டத்தில் 31-வது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சினையை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது, 43-வது வார்டு பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீர் சாலைகளில் தேங்குவதையும், குடியிருப்பு பகுதிகளில் நுழைவதையும் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்க வலியுறுத்துவது, 51-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை சரிவர செயல்படுத்த வேண்டும்.

    40-வது வார்டு பகுதியில் காவலர் குடியிருப்பு அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவை சீரமைக்க வேண்டும். 41- வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும். 42- வது வார்டு தாமஸ் தெரு பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×