search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறிமுதல் வாகனங்கள்"

    • உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.
    • ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி, நல்லூர் மற்றும் மங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்ற வழக்கில் பதிவு செய்யப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. அவ்வகையில், 3 போலீஸ் நிலையங்களை சேர்ந்த, 163 வாகனங்கள் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 7-ந் தேதி காலை 11 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது.ஏலம் கோர விருப்பமுள்ள நபர்கள் ஆதார் கார்டு, வைப்பு தொகை 10 ஆயிரம் ரூபாயை வங்கி வரைவோலையாக தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 6-ந் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் மோட்டார் சைக்கிள் ஏலம் எடுக்க விரும்புவர்கள் வீரபாண்டி, நல்லூர், மங்கலம் போலீஸ் நிலையங்களை அணுகி, ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம். கூடுதல் விபரங்களுக்கு தெற்கு தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு அணுகலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • விதிகளை மீறி இரு சக்கர வாகனங்களை மது அருந்திவிட்டு ஓட்டிச் சென்றது தொடர்பாக மொத்தம் 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவுப்படி மாவட்டத்தின் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சிறப்பு வாகன சோதனை நடத்தினார்கள்.

    அப்போது போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனங்களை மது அருந்திவிட்டு ஓட்டிச் சென்றது தொடர்பாக மொத்தம் 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக 70 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 28 வழக்குகளும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக 27 வழக்குகளும், பணம் வைத்து சூதாடியது தொடர்பாக 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

    • உடுமலை குட்டைத்திடலில் தனியார் வீட்டுமனை அமைந்துள்ள பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன
    • பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் வீணாகி வருகிறது

    உடுமலை :

    உடுமலை போலீஸ் சார்பில் மது போதை, விபத்து, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை போலீசார் பறிமுதல் வைத்துள்ளனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பாதுகாப்பாக வைத்து பராமரிக்க வேண்டும். வழக்கு முடிந்ததும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வழக்கு முடிந்தது மற்றும் உரிமை கோரப்படாத வாகனங்களை, உரிய உத்தரவு அடிப்படையில், பொது ஏலம் விட வேண்டும் .

    இந்தநிலையில் உடுமலை குட்டைத்திடலில் மேம்பாலத்தின் கீழ், தனியார் வீட்டுமனை அமைந்துள்ள பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மோட்டார்சைக்கிள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு இல்லாமலும், வெயிலிலும், மழையிலும் நனைந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் வீணாகி வருகிறது. புதர் மண்டியும், பழைய இரும்புக்குக்கூட பயன்படாத அளவிற்கு வீணாகின்றன. எனவே நீதிமன்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்களை உரிய முறையில் பாதுகாக்கவும், உரிமை கோரப்படாத வாகனங்களை, வழிமுறைகள் அடிப்படையில் ஏலம் விட்டு, அரசுக்கு நிதி வருவாயை ஏற்படுத்தவும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×