search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபாச படம்"

    • செல்போன்களில் பயணிகள் சிலரால் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது.
    • தகவல்களை ஒளிபரப்பும் ஏஜென்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னா ரெயில் நிலைய பிளாட்பாத்தில் உள்ள எல்இடி திரையில் திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் இந்த வீடியோ சுமார் 3 நிமிடங்களுக்கு பிளே ஆகி உள்ளது. பயணிகள் சிலர் இதை தங்கள் செல்போன்களில் பதிவு செய்துள்ளனர்.

    அந்த பிளாட்பாரத்தில் நின்றிருந்த பலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் வேகமாக சென்று அந்த வீடியோவை ஆப் செய்தனர்.

    அதன்பின்னர், செல்போன்களில் பயணிகள் சிலரால் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது. முதல்வர் நிதிஷ் குமாரையும், ரெயில்வே மந்திரியையும் பயனர்கள் டேக் செய்து அந்த வீடியோவை ஷேர் செய்யத் தொடங்கினர்.

    ரெயில் நிலைய எல்இடி திரைகளில் விளம்பரம் மற்றும் ரெயில்வே மற்றும் பொது தகவல்களை ஒளிபரப்பும் ஏஜென்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடன் செயலி மூலம் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மக்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் கும்பல் ஈடுபட்டுள்ளது.
    • கேரள கும்பலிடம் கிடைத்த சில தகவல்களின் படி கும்பல் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 200 பேரிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பொங்குபாளையத்தை சேர்ந்த 32 வயது பெண் கடந்த டிசம்பர் மாதம் 15ந் தேதி 'பைசா ஹோம்' என்ற கடன் செயலியை பதிவிறக்கம் செய்து 3 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். அந்த பணத்தை குறிப்பிட்ட சில நாட்களுக்குள் அப்பெண் செலுத்தினார். தொடர்ந்து கடன் பெற தகுதியுடையவர் என்று எஸ்.எம்.எஸ்., வந்தது. இதையடுத்து கடன் செயலி மூலம் 15 ஆயிரம் ரூபாயை கடன் பெற்றார்.

    இந்தநிலையில் தவணை காலம் முடியும் முன்னரே பணத்தை திருப்பி செலுத்த கூறி எஸ்.எம்.எஸ்., வந்தது. பணத்தை செலுத்தாவிட்டால் சமூகவலைதளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவோம் என்று அந்த பெண்ணை மிரட்டியதுடன் அந்த பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாசமான பதிவுகளை அனுப்பி உள்ளனர்.

    இது தொடர்பாக அந்த பெண் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சஷாங் சாயிடம் புகார் செய்தார். எஸ்.பி., உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில் திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காதர்பேட்டை மற்றும் பி.என்., ரோடு புஷ்பா சந்திப்பு அருகே அறை எடுத்து கால் சென்டர் அமைத்து ஒரு கும்பல் குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரிந்தது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த முகமது அஸ்கர், (வயது 24), முகமது ஷாபி(36), முகமது சலீம்(37), அனீஷ் மோன் (33) மற்றும் அஸ்ரப்( 46) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் வெளிநாட்டு கடன் செயலி மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு கடன் வழங்குவதாகவும், புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டியும் பணம் பறித்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் பயன்படுத்திய ஹைடெக்கான 11 சிம் பாக்ஸ், 500 சிம் கார்டுகள், 6 மோடம், 3 லேப்டாப், யு.பி.எஸ்., மற்றும் பேட்டரி, 20 ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகள், யூரோ டாலர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து கைதான 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இக்கும்பல் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 200 பேரின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டு பண மோசடியில் ஈடுபட்ட புதிய தகவல் தெரியவந்துள்ளது.

    கடன் செயலி மூலம் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மக்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் இக்கும்பல் ஈடுபட்டுள்ளது. கேரள கும்பலிடம் கிடைத்த சில தகவல்களின் படி இக்கும்பல் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 200 பேரிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.

    இதில் ஏராளமான மோசடி நபர்கள் தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் எண், ஐ.எம்.இ., உள்ளிட்ட விபரங்களை டெல்லியில் உள்ள தேசிய சைபர் கிரைமிடம் ஒப்படைக்கப்பட்டு முதல்கட்டமாக விசாரிக்கப்பட்டது.

    அதில் மேற்கொண்ட விபரங்கள் 200 மோசடி புகார்களில் பொருந்துவது தெரிய வந்துள்ளது. 200 பேரின் ஆபாச படங்களை வெளியிட்டு பணம் பறித்துள்ளனர். தற்போது இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்த எஸ்.டி.பி. என்ற பெயரை கொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரின் உண்மையான பெயர், முகவரி உள்ளிட்டவை குறித்து விசாரணை நடக்கிறது.

    இதுதவிர இந்த நபர் மூலமாகவே திருப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிம் பாக்ஸ், சிம் கார்டு மாற்றுவது உட்பட அனைத்து உத்தரவுகளையும் இக்கும்பல் பெற்று செயல்படுத்தி வந்துள்ளனர். கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்த எஸ்.டி.பி. என்ற பெயரை கொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஸ்கேன் மையத்திற்கு வரும் பெண்கள் உடைகளை மாற்றும் போது தனது செல்போனில் படம் பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
    • ஸ்கேன் மையம் வந்த ஒரு பெண் போலீசில் புகார் கொடுத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் அடூரில் பொது மருத்துவமனை அருகே தனியார் ஸ்கேன் மையம் உள்ளது.

    இங்கு தினமும் நோயாளிகள் வந்து ஸ்கேன் எடுப்பது வழக்கம். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வருவது உண்டு. இந்த மையத்தில் ஊழியராக இருப்பவர் கொல்லம் கடக்கலைச் சேர்ந்த அஞ்சித் (வயது 34).

    இவர் ஸ்கேன் மையத்திற்கு வரும் பெண்கள் உடைகளை மாற்றும் போது தனது செல்போனில் படம் பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஸ்கேன் மையம் வந்த ஒரு பெண் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்த போது, அஞ்சித் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவர் எவ்வளவு காலம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்தோணியார் கோவில் தெரு பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பொது கழிப்பிடம் கட்டித் தரப்பட்டுள்ளது.
    • மணிகண்டன் என்பவர் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கழிவறைக்கு சென்ற போது அவருக்கு தெரியாமல் ஜன்னல் வழியாக செல்போனில் ஆபாச படம் எடுத்தார்.

    திருச்சி,

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் மேட்டுத்தெரு மற்றும் அந்தோணியார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு இன்னமும் தனிநபர் கழிப்பிடம் என்பது எட்டாக் கனியாக உள்ளது.

    அந்தோணியார் கோவில் தெரு பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பொது கழிப்பிடம் கட்டித் தரப்பட்டுள்ளது. இதனை மேற்கண்ட பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 28) என்பவர் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கழிவறைக்கு சென்ற போது அவருக்கு தெரியாமல் ஜன்னல் வழியாக செல்போனில் ஆபாச படம் எடுத்தார்.

    இதனை ஆண்கள் கழிப்பகத்திற்கு வந்த ஒருவர் பார்த்து எடமலைப்பட்டி புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மணிகண்டனை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அதில் அந்த பெண்ணின் ஆபாச படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து மணிகண்டனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பெயிண்டரான அவர் தினமும் அந்த கழிப்பிடத்திற்கு வந்து சென்றுள்ளார். ஆகவே வேறு பெண்களையும் அவர் ஆபாசமாக படம் எடுத்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சி.பி.ஐ. நாடு முழுவதும் இன்று 56 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
    • 19 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தது, பகிர்ந்தது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    சிங்கப்பூரில் உள்ள இன்டர்போல் அளித்த தகவலின்படி, சி.பி.ஐ. இது குறித்து 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தது, பகிர்ந்தது தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. நாடு முழுவதும் இன்று 56 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.

    19 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    • மதுரையில் முகநூல் பக்கத்தில் இளம்பெண் படத்துடன் ஆபாசமாக பதிவிடப்பட்டது.
    • இதுதொடர்பாக பெண் உள்ளிட்ட சிலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பெத்தானியபுரம், காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவியும் சமூக சேவகியுமான முத்துலட்சுமி (வயது 34), மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறக்கட்டளை தொடங்கி ஆதரவற்ற முதியோர் மற்றும் ஏழை எளியோருக்கு தினமும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்தேன். இதற்காக எனது முகநூல் பக்கத்தில் அன்னதானத்திற்கு நன்கொடை வேண்டி, தொலைபேசி எண்ணை பதிவிட்டு இருந்தேன்.

    அப்போது கத்தாரில் இருந்து மாரிச்சாமி கோசாலை என்பவர் என்னை தொடர்பு கொண்டு "எனது மகன் பிறந்த நாள் அன்று அன்னதானம் வழங்குங்கள்" என்று கூறி, எனது வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தினார். அதன்படி அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மதுரை திரும்பிய மாரிச்சாமி, என் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்து சென்றார். இதற்கிடையே மாரிச்சாமியின் மனைவி வினிதாராஜி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, நீங்கள் என் கணவருடன் பேசுவது பிடிக்கவில்லை என்று கூறினார். எனவே நான் மாரிச்சாமியின் போன் நம்பரை பிளாக் செய்து விட்டேன். அதன் பிறகும் வினிதாராஜி என்னிடம், என் கணவரை ஏமாற்றி எவ்வளவு பணம் வாங்கினாய்? என்று அசிங்கமான வார்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இந்த நிலையில் எனக்கு நள்ளிரவு நேரங்களில் புதுப்புது எண்களிலிருந்து அழைப்பு வரத் தொடங்கியது. எதிர் முனையில் பேசியவர்கள், 'ஒரு இரவுக்கு உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்? இந்த போட்டோவில் உள்ள மாதிரி இருப்பாயா? அல்லது சிறு வயது போட்டோவா?' என்று கேட்டு மனஉளைச்சல் ஏற்படுத்தினர். நான் அந்த போன் நம்பர்களை பிளாக் செய்தேன்.

    அதன் பிறகு 60-க்கும் மேற்பட்ட போன் நம்பரில் இருந்து போன் வந்தது. இந்த நிலையில் ஒரு பெண் எனக்கு போன் செய்து, 'உங்கள் போட்டோ மற்றும் தொலைபேசி எண்ணை டெலிகிராம் இணையதளத்தில் பதிவு செய்து, 'நீங்கள் விபச்சாரி' என்று யாரோ குறிப்பிட்டு உள்ளனர்' என்று தெரிவித்தார். அந்தப் பதிவின் ஸ்க்ரீன் ஷாட் தகவலையும் எனக்கு அனுப்பி வைத்தார்.

    என்னை இணையதளம் வாயிலாக விபச்சாரி என்று அவதூறு பதிவு செய்த வினிதா ராஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த புகார் மனு தொடர்பாக போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் விசாரணை நடத்த தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

    தனிப்படை போலீசார் அந்த இணையதளத்தில் பதிவான தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தனர். அது டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றின் செல்போன் நம்பர். அந்த எண்ணை இதற்கு முன்பு ராஜ் கோசாலை என்பவர் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

    தனிப்படை போலீசார் இது தொடர்பாக மாரிச்சாமி மனைவி வினிதாராஜி மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எடப்பாடி அருகே சலூன் கடைக்கு வந்த பெண்ணை ஆபாச படம் எடுத்த வாலிபர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    எடப்பாடி:

    எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பட்டி, காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் ஜோதிகா (22), இவரது கணவர் சக்கரவர்த்தி, நூற்பாலையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இத் தம்பதிகளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஜோதிகா தனது மகனுக்கு முடி திருத்தம் செய்வதற்காக எடப்பாடி அங்காளம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு நாற்காலியில் ஜோதிகாவின் குழந்தையை அமர வைத்த சலூன் கடைக்காரர் முடி திருத்தம் செய்து கொண்டிருந்த போது, குழந்தையின் தலையை ஜோதிகா ஆடாமல் பிடித்துக் கொண்டு இருந்தார்.

    அப்போது எடப்பாடி அடுத்த தேவனா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஜோதிகாவின் அருகே அமர்ந்து, அவரை ஆபாசமாக தனது செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட ஜோதிகாவிடம் அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து ஜோதிகா எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பந்தப்பட்ட வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட சலூன் கடைக்காரரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

    • என்ஜினீயரின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது அதில் பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் இருந்தது.
    • தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    நெல்லை:

    நெல்லை அருகே பாளை பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு மர்மநபர் ஒருவர் சுவர் ஏறி குதித்துள்ளார். பின்னர் வீட்டின் குளியலறை பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை படம் பிடித்துள்ளார்.

    இதனை வீட்டின் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பார்த்து கத்தி கூச்சலிட்டான். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அதற்குள் அந்த தெருவில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து அந்த நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவர் பாளை ராஜேந்திரன் நகர் 8-வது தெருவில் வசிக்கும் பால் ராபின்சன்(வயது 36) என்பது தெரியவந்தது.

    என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா காலத்தில் அங்கிருந்து நெல்லை வந்த இவர் அதன் பிறகு வேலைக்கு செல்லவில்லை. அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் இருந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    பால் ராபின்சனுக்கு சமீபத்தில் திருமணம் ஆகியது. இவரது மனைவி அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக பால் ராபின்சன் பகல் நேரங்களில் தெரு தெருவாக சென்று அங்கு ஒவ்வொரு வீட்டிலும் சி.சி.டி.வி. இருக்கிறதா என்பதை நோட்டமிட்டுள்ளார். எந்த வீட்டில் எல்லாம் நாய்கள் இருக்கிறது என்பதையும் பார்த்து வைத்துள்ளார்.

    பின்னர் இரவு நேரத்தில் ஒவ்வொரு வீடாக சென்று அங்கு இருக்கும் குளியல் மற்றும் கழிப்பறைகளில் ஜன்னல் வழியாக செல்போனில் பெண்களை வீடியோக்கள் எடுத்துள்ளார்.

    தனது வீட்டில் மனைவி இல்லாதபோது அந்த வீடியோக்களை பார்த்து ரசித்துள்ளார். இதேபோல் ஏராளமான பெண்களின் வீடியோக்களை அவர் செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து அவர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் வேறு பகுதிகளில் இதை போன்று வீடியோக்கள் எடுத்துள்ளாரா? அதனை காட்டி பெண்களிடம் பணம் பறித்தாரா? அல்லது சமூக வலைதளங்களில் பரப்பினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவியின் புகைப் படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் சம்மந்தம் தெருவை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் வேலாயுதம் (வயது 26). இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பி.எச்.டி.படித்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் பி.எட். இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் படித்து வருகிறார்.

    மாணவர் வேலாயும் அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துள்ளார். மேலும் அவர் அந்த புகைப்படத்தை மாணவிக்கும், தனது நண்பர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து அவர் சமூக வலைத் தளங்களிலும் அந்த படங்களை வெளியிட்டுள்ளார். அந்த ஆபாச படத்தை பார்த்து அந்த மாணவி அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய மாணவர் வேலாயுதத்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

    மாணவியின் புகைப் படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட பின்னர் தனது வருங்கால கணவனின் மொபைலில் ஆபாச படம் இருந்ததன் காரணமாக பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் உடா பகுதியை சேர்ந்த க்ளாய்ரே டால்டன் என்ற 21 வயது பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது திருமணம் நடக்காது என நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கூறியுள்ளார். அதற்கான காரணத்தையும் அந்த பதிவில் க்ளாய்ரே தெரிவித்துள்ளார்.

    4 ஆண்டுகளாக காதலித்து சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனது வருங்கால கணவனின் மொபைல் போனில் ஆபாச படங்கள் இருந்ததே திருமணம் நிறுத்தப்பட்டதற்கு காரணம். மிகவும் மதநம்பிக்கை கொண்டதாக தன்னை கூறிக்கொண்ட அந்த பெண், கடவுளின் விதிகள் சுற்றிய ஒரு உறவு எங்களுக்குள் வேண்டும் என விரும்பியதாக பதிவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக தனது வருங்கால கணவரிடம் க்ளாய்ரே கேட்டுள்ளார். அதற்கு ‘தனது சகோதரன் அந்த படங்களை பார்த்ததாகவும். தன் மீது தவறில்லை’ எனவும் வாதிட்டுள்ளார். ஆனாலும், அதனை ஏற்றுக்கொள்ளாத க்ளாய்ரே நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

    க்ளாய்ரேவின் இந்த பேஸ்புக் பதிவுக்கு பலர் ஆறுதலாகவும், பலர் கிண்டலாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். 
    தாலி கட்டிய மனைவியை ஆபாசமாக படம் எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு கணவர் மிரட்டிய சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலத்தை சேர்ந்தவர் அரசு பெண் டாக்டர். 42 வயதான இவர் தற்போது கோவையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சேலத்தை சேர்ந்த சென்னையில் பணிபுரியும் அரசு டாக்டர் ஒருவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் பெண் டாக்டர் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், எனது கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டு விவகாரத்து கேட்டு என்னிடம் வற்புறுத்தி வந்தார்.

    தற்போது சேலத்தை சேர்ந்த ஒரு வக்கீலுடன் சேர்ந்து கொண்டு அவருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்து அந்த செல்போனில் புதிய ஆப்பை இன்ஸ்டால் செய்து எனக்கு தெரியாமல் என்னை ஆபாச படம் எடுத்துள்ளார்.

    மேலும் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன், சேலத்தில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த படங்களை பேஸ்புக், வாட்-அப்களில் வெளியிடுவதாகவும் மிரட்டினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நான் விவாகரத்து கொடுத்ததுடன், எனது பெயரில் இருந்த வீட்டையும் எழுதி கொடுத்து விட்டேன். தற்போது ஆபாச படங்களை வெளியிடாமல் இருக்கவும், அதனை என்னிடம் ஒப்படைக்கவும் ரூ.10 லட்சம் கேட்பதுடன் அதனை ஏற்காட்டிற்கு கொண்டு வந்து தர வேண்டும் என்றும் மிரட்டி வருகிறார்கள்.

    மேலும் நாங்கள் சொன்னப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் எனது கணவரும், அந்த வக்கீலும் மிரட்டி வருகிறார்கள். இதனால் அவர்கள் மீது விசாரித்து நடவடடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறி இருந்தார்.

    இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு கமி‌ஷனர் உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி பெண் டாக்டரின் கணவரான அரசு டாக்டர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த வக்கீல் மீதும் 4 பிரிவிகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறார்கள்.

    அரசு பெண் டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவரான அரசு டாக்டர் மற்றும் வக்கீல் மீதும் 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×