search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடுத்த"

    • குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்.
    • பொதுமக்கள் பரிதவிப்பு.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாமிரபரணி ஆறு வள்ளியாறு, பெரியாறு, கோதையாறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும் விளை நிலங்க ளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளா கியுள்ளனர்.

    மாங்காடு-முஞ்சிறை சாலையில் தண்ணீர் தேங்கி யுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி யுள்ளனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவர்கள் தவித்து வருகி றார்கள். திக்குறிச்சி பகுதிகளிலும் குடியிருப்பு களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தவிப்பிற்குள் ளாகி உள்ளனர். சுசீந்திரம் பழைய ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெ ருக்கின் காரணமாக சுசீந்திரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. வடக்கு தாமரைகுளம் பகுதியில் தென்னந்தோப்புக்குள் பழையாற்று தண்ணீர் புகுந்துள்ளது. அழிக்கால் பிள்ளைதோப்பு பகுதியிலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொது மக்கள் பரித விப்பிற்கு ஆளாகியுள்ள னர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை அப்புறப் படுத்தும் பணியில் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர்.திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் அருவியில் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை விதிக்கப் பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. தொடர் மழை யின் காரணமாக நேற்று ஒரே நாளில் 15 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. அகஸ்தீஸ்வரம், கல்குளம், திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்களில் 9 மரங்களும் வேரோடு சாய்ந்தன. அகஸ்தீஸ்வரம் தாலு காவுக்குட்பட்ட பகுதிகளில் 3 மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.

    இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மலையோர பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் மழையினால் குலசேகரம், அருமனை, சுருளோடு, தடிக்கா ரன்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப் பட்டுள்ள சிரட்டைகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. மழைக்கு தாழக்குடி அருகே மீனமங்கலம் பகுதியில் வீடு இடிந்து ஒருவர் பலியான நிலையில் நேற்று இரவு குலசேகரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணி உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டம் முழுவதும் மழைக்கு நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீராக அதிகரித்துள்ளது.
    • மேலும் ஆற்றில் சீறி பாயும் வெள்ளத்தை பொதுமக்கள் செல்பி எடுக்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீராக அதிகரித்துள்ளது.

    இதனால் பரமத்தி வேலூர் காவிரி ஆற்று பாலத்தின் வழியாக இரு கரைகளையும் மூழ்கடித்தப்படி வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் வழியாக செல்லும் கார்கள், இரு சக்கர வாகனங்களை நிறுத்தி குடும்பத்தினருடன் பாலத்தின் மீது நின்று காவிரி ஆற்றில் செல்லும் வெள்ளத்தை பார்க்கிறார்கள்.

    அதேபோல் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் காவிரி ஆற்று பாலத்திற்கு வந்து வெள்ளப்பெருக்கை அதிசயமாக பார்க்கின்றனர். மேலும் ஆற்றில் சீறி பாயும் வெள்ளத்தை செல்பி எடுக்கின்றனர்.

    இந்நிலையில் பரமத்தி வேலூர் போலீஸ் டிஎஸ்பி கலையரசன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். காவிரி ஆற்று பாலத்தில் நெடுகிலும் வாகனங்களை நிறுத்திவிட்டு அதிக நேரம் வாகன ஓட்டிகள் பார்வையிட கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சென்று நீண்ட நேரம் பார்வையிடவும் அனுமதிக்கவில்லை.

    பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். அங்கு மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் போலீஸ் சோதனை சாவடி அருகே ஆங்காங்கே புதிய கடைகள் முளைத்துள்ளது. வியாபாரம் களை கட்டுகிறது.

    எடப்பாடி அருகே சலூன் கடைக்கு வந்த பெண்ணை ஆபாச படம் எடுத்த வாலிபர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    எடப்பாடி:

    எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பட்டி, காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் ஜோதிகா (22), இவரது கணவர் சக்கரவர்த்தி, நூற்பாலையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இத் தம்பதிகளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஜோதிகா தனது மகனுக்கு முடி திருத்தம் செய்வதற்காக எடப்பாடி அங்காளம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு நாற்காலியில் ஜோதிகாவின் குழந்தையை அமர வைத்த சலூன் கடைக்காரர் முடி திருத்தம் செய்து கொண்டிருந்த போது, குழந்தையின் தலையை ஜோதிகா ஆடாமல் பிடித்துக் கொண்டு இருந்தார்.

    அப்போது எடப்பாடி அடுத்த தேவனா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஜோதிகாவின் அருகே அமர்ந்து, அவரை ஆபாசமாக தனது செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட ஜோதிகாவிடம் அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து ஜோதிகா எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பந்தப்பட்ட வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட சலூன் கடைக்காரரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

    ×