search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்ட்ராய்டு"

    ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான கூகுள் மேப்ஸ் செயலியில் க்விக் அக்சஸ் பட்டன் சோதனை செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான கூகுள் மேப்ஸ் செயலியில் க்விக் அக்சஸ் பட்டன்கள் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்த அம்சம் செயிலியின் ஹோம் திரையில் இருக்கும் க்விக் அக்சஸ் பட்டனை ஒரு முறை க்ளிக் செய்து நேவிகேட் செய்ய முடியும்.

    முன்னதாக அடிக்கடி பயணிக்கும் முகவரிகளை செட் செய்து, பின் சர்ச் பாரில் ஒற்றை க்ளிக் மூலம் செட் செய்த முகவரிகளை நேவிகேட் செய்யும் வசதி வழங்கப்பட்ட நிலையில், நீண்ட இடைவெளுக்கு பின் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதுதவிர கூகுள் அசிஸ்டன்ட் கொண்டும் வீடு அல்லது அலுவலகத்துக்கான நேவிகேஷன்களை பெற முடியும்.

    முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த அம்சம் கொண்டு வீடு மற்றும் அலுவலகத்துக்கு சென்று வர எளிமையானதாக மாற்றும்.



    இந்த அம்சத்தை பயன்படுத்திய பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதில் சர்ச் பாரில் வீடு மற்றும் அலுவலகத்துக்கான ஷார்ட்கட் இருப்பது மட்டுமின்றி கூகுள் மேப்ஸ் ஹோம் ஸ்கிரீனில் க்விக் ஆக்ஷன் பட்டன்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

    தற்போதைய ஷார்ட்கட்களுக்கு மாற்றாக புதிய பட்டன்கள் வழங்கப்படுமா அல்லது இரண்டு ஆப்ஷன்களும் கிடைக்குமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. பல்வேறு ஆன்ட்ராய்டு சாதனங்களில் கூகுள் மேப்ஸ் புதிய அம்சம் வழங்கப்படாத நிலையில் விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம்: நன்றி PIXABAY | TWITTER / TotalSecurily
    ஸ்மார்ட்போன்களில் பயனரின் வங்கி சார்ந்த மிகமுக்கிய தகவல்களை திருடும் ட்ரோஜன் மால்வேர் சார்ந்த விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் க்விக்ஹீல் (QuickHeal) ட்ரோஜன் மால்வேர் ஒன்றை கண்டறிந்துள்ளது. இது ஸ்மார்ட்போன்களில் பயனர்கள் பயன்படுத்தி வரும் வங்கி சார்ந்த செயலிகளில் இருந்து முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை திருடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கி சார்ந்த பரிவர்த்தனைகள் ஸ்மார்ட்போன்களில் அன்றாடம் அதிகளவு நடைபெறுவதை தொடர்ந்து புதிய அச்சுறுத்தல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பூனேவில் இயங்கி வரும் க்விக்ஹீல் பாதுகாப்பு ஆய்வகம், பயனர்களின் தகவல்களை ஸ்மார்ட்போன்களில் இருந்து திருடும் இரண்டு ட்ரோஜன்களை கண்டிறிந்திருக்கிறது.

    புதிய மால்வேர் மற்றும் ட்ரோஜன்கள் குறித்த தகவல்களை க்விக்ஹீல் தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன் படி ஸ்மார்ட்போனில் இதுபோன்ற மால்வேர்களை கண்டறிவது எப்படி என்பது குறித்த தகவல்களும் பதிவிடப்பட்டுள்ளது.


    கோப்பு படம்

    பேங்கிங் ட்ரோஜன் என்றால் என்ன?

    பொதுவாக பேங்கிங் ட்ரோஜன் என்பது செயலி அல்லது மென்பொருள்களில் இருந்து பயனர்களின் பேங்கிங் சார்ந்த விவரங்களை திருடும் தன்மை கொண்டதாகும். 

    பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் ஆட்டோ-சேவ் செய்திருந்த பேங்க் பாஸ்வேர்டு மற்றும் லாக்-இன் விவரங்கள், வங்கி வலைத்தளங்களுக்கு பயனர் செல்லும் விவரங்கள், மற்றும் வங்கி சார்ந்த இதர நடவடிக்கைகளை பேங்கிங் டேட்டா என அழைக்கப்படுகிறது.

    க்விக்ஹீல் கண்டறிந்த பேங்கிங் ட்ரோஜன்களின் விவரங்கள்

    க்விக்ஹீல் ஆய்வகம் பிளே ஸ்டோரில் இருந்து பயனர் தகவலை திருடும் இரண்டு செயலிகளை கண்டறிந்திருக்கிறது. முதல் ஆப் அடோப் ஃபிளாஷ் பிளேயர் போன்ற ஐகான், இரண்டாவது ஆப் அப்டேட் என்ற பெயர் கொண்டிருக்கிறது. இவை பயனர்களை பிரபல பெயர்கள் மற்றும் ஐகான் மூலம் ஏமாற்றுகின்றன.


    கோப்பு படம்

    இந்த ட்ரோஜன்கள் எவ்வாறு வேலை செய்யும்?

    பயனர்கள் இதுபோன்ற செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்யும் போது, செயலி தரப்பில் பயனருக்கு சில அனுமதிகளை வழங்க கோரிக்கை விடுக்கப்படும், இவற்றில் டிவைஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் செட்டிங்-களும் அடங்கும். இந்த செட்டிங்களில் பாஸ்வேர்டு மாற்றுவது, பாஸ்வேர்டு விதிமுறைகளை செட் செய்வது, லாக் ஸ்கிரீன் மற்றும் பல்வேறு அம்சங்கள் அடங்கும். 

    பயனர் இதற்கான அனுமதியை ரத்து (cancel) செய்தாலும் அடிக்கடி பாப்-அப் ஆகி இதற்கான அனுமதியை கோரும். சில பயனர்கள் செயலியை அன்-இன்ஸ்டால் செய்யலாம், எனினும் பலர் இவற்றை இன்ஸ்டால் செய்து அதற்கான அனுமதியை வழங்கி விடுகின்றனர். ட்ரோஜன் அடங்கிய செயலி பயனர் ஏதேனும் வங்கி சார்ந்த செயலியை இயக்கும் வரை காத்திருந்து, பின் தானாகவே பின்னணியில் இயங்க துவங்கிடும்.

    சில சமயங்களில் போலி விண்டோ திரையில் தோன்றி தானம் செய்ய கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை பதிவு செய்ய கோரும். இதில் பயனர் லாக்-இன் செய்யும் போது ட்ரோஜன்கள் பயனர் விவரங்களை ஹேக்கர் வைத்திருக்கும் சர்வெருக்கு அனுப்பும், பின் சேகரிக்கப்பட்ட விவரங்கள் தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு பயன்படுத்தப்படலாம்.

    புகைப்படம்: நன்றி PIXABAY
    கூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் புதிய தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் ஆஃப்லைன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    கூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் நியூரல் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் சார்ந்த ஆஃப்லைன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் சாதனத்தில் மொழிமாற்றம் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டு இருப்பதால், ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் தளங்களில் கூகுள் டிரான்ஸ்லேட் செயலியால் அதிக தரமுள்ள மொழிமாற்றங்களை இணைய வசதி இல்லாதபோதும் மேற்கொள்ள முடியும்.

    செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் நியூரல் சிஸ்டம் ஒவ்வொரு வார்த்தையாக மொழிமாற்றம் செய்யாமல், ஒட்டுமொத்த வாக்கியத்தையும் மொழிமாற்றம் செய்யும் என கூகுள் தெரிவித்துள்ளது. மிகவும் நேர்த்தியான மொழிமாற்றம் செய்ய பல்வேறு அம்சங்களை கணக்கில் கொண்டு, அவற்றில் பொருத்தமானவற்றை, கிட்டத்தட்ட மனித குரலிலேயே வழங்கும். 



    மொழி தெரியாத, டேட்டா கனெக்டிவிட்டி பெற சிக்கலாக இருக்கும் வெளிநாட்டு பயணங்களின் போது ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மொழியும் 35 முதல் 45 எம்பி அளவு கொண்டிருப்பதால், மொபைலில் அதிக ஸ்டோரேஜ் எடுத்துக் கொள்ளாது.

    ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் நியூரல் மெஷின் டிரான்ஸ்லேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆஃப்லைன் டிராஸ்லேஷன் அம்சம் பயன்படுத்தியிருந்தால், ஹோம் ஸ்கிரீனிலேயே பேனர் ஒன்று காட்சியளிக்கும், இதை க்ளிக் செய்ததும் உங்களின் ஆஃப்லைன் ஃபைல்களை அப்டேட் செய்யும். 

    ஒருவேளை பயன்படுத்தவில்லை எனில் ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் செட்டிங்ஸ் சென்று, ஆஃப்லைனில் பயன்படுத்த வேண்டிய மொழியை டவுன்லோடு செய்யலாம். அடுத்த சில நாட்களில் ஆஃப்லைன் வசதி கூகுள் டிரான்ஸ்லேட் செயலியின் 59 மொழிகளில் சேர்க்கப்படுகிறது.
    பாஸ்போர்ட் விண்ணப்பம் சார்ந்த அனைத்து சேவைகளை வழங்கும் செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    ஆமதாபாத்:

    பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியும். 

    இத்துடன் ஏற்கனவே பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து இருந்தால், அதன் ஃபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவற்றை கொண்டு விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள முடியும். தபால் மூலம் அனுப்பப்பட்ட பாஸ்போர்ட் டெலிவரி சார்ந்த விவரங்களை இந்த செயலி மூலம் டிராக் செய்ய முடியும்.



    பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை மிக எளிமையாக மாற்றும் திட்டத்தின் முதல் படியாக இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கும் செயலியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க முடியும். என ஆமதாபாத் வட்டார பாஸ்போர்ட் அலுவலர் நீலம் ரானி தெரிவித்தார்.

    இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைகளில் ஏஜென்டுகள் மற்றும் தரகர்களின் உதவியை நாட வேண்டிய அவசியமின்றி நேரடியாக விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம். என அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்த செயலியை கொண்டு பாஸ்போர்ட் சேவா கேந்ரா அல்லது வட்டார பாஸ்போர் மையத்தையும் தேட முடியும்.
    மோட்டோரோலா ஆன்ட்ராய்டு ஒன் பிரான்டு ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    லெனோவோவின் மோட்டோரோலா தனது ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது.  

    மோட்டோரோலா ஒன் பவர் என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் மற்றும் லைவ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. 

    ஸ்பெயின் நாட்டு வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 6.2 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2280 பிக்சல், 19:9 ரக நாட்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3780 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.



    புகைப்படங்களை எடுக்க டூயல் பிரைமரி கேமரா, 12 எம்பி, f/1.8 அப்ரேச்சர் மற்றும் 5 எம்பி சென்சார், f/2.0 அப்ரேச்ர் முன்பக்கம் 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர் வழங்கப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் X போன்ற நாட்ச், கீழே சிறிய சின், பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா மாட்யூல் அதன் கீழ் ஆன்ட்ராய்டு ஒன் பிரான்டிங் கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்பீக்கர் கிரில் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டது.

    இதுதவிர ஸ்மார்ட்போனின் இதர அம்சங்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை. மேலும் மோட்டோரோலா ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனின் தகவல்கள் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
    ஜிமெயில் ஆன்டராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய அம்சம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு வருகிறது. இவை மின்னஞ்சல்களில் வலது மற்றும் இடது புறமாக ஸ்வைப் செய்து அவற்றின் ஆக்ஷன்களை கஸ்டமைஸ் செய்கிறது. 

    ஆன்ட்ராய்டு தளத்தின் புதிய வெர்ஷன் 8.5.20-வில் கிடைக்கும் இந்த வசதி, வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்டில் கிடைக்குமா அல்லது இது சர்வெர் சார்ந்த அப்டேட்டா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் ஜிமெயில் பயனர்கள் இனி வலது மற்றும் இடது புற ஸ்வைப்களுக்கான கன்ட்ரோல்களை மாற்றியமைக்க முடியும். 

    ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் வழக்கமாக இருபுறமும் ஸ்வைப் செய்தால் மின்னஞ்சல்கள் ஆர்ச்சிவ் செய்யப்படும். ஆன்ட்ராய்டு போலீஸ் மூலம் முதலில் கண்டறியப்பட்ட இந்த அம்சம் மே 30-ம் தேதி வாக்கில் வெளியிடப்பட்ட சமீபத்திய அப்டேட் மூலம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய அம்சத்தை இயக்க ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியின் செட்டிங்ஸ் -- ஜெனரல் செட்டிங்ஸ் -- ஸ்வைப் ஆக்ஷன்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன்களில் ஆர்ச்சிவ், டெலீட், மார்க் ஆஸ் ரீட்/ அன்ரீட், மூவ் டூ மற்றும் ஸ்னூஸ் போன்ற ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

    புதிய அப்டேட் மூலம் ஜிமெயில் இந்த அம்சத்தை அதிகம் தெரிவிக்கவில்லை என்றாலும், பிழை திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் ஜிமெயில் தளத்தில் மிகப்பெரிய அப்டேட் வழங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டது. இதே அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு இமெயில் ஷார்ட்கட்கள், ஸ்மார்ட் ரிப்ளை, கான்ஃபிடென்ஷியல் மோட் மற்றும் நேட்டிவ் ஆஃப்லைன் மோட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டது.
    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு தளத்துக்கான பீட்டா பதிப்பில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    வாட்ஸ்அப் புதிய பீட்டா பதிப்பில் (2.18.179) உங்களுக்கு வரும் மெசேஜ்களை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்யும் போது லேபெல் செய்யப்படுகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் ஃபார்வேர்டு மெசேஜ்களில் இனி ஃபார்டுடெடு (Forwarded) என்ற லேபெல் இருக்கும்.

    இந்த புதிய அம்சம் மூலம் இனி உண்மையான மெசேஜ்கள் மற்றும் ஃபார்வேர்டு செய்யப்பட்ட மெசேஜ்களுக்கு வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும். இந்த லேபெல் மெசேஜை அனுப்புவோர் மற்றும் அதனை பெறுவோருக்கும் காணப்படும். முன்னதாக பீட்டா செயலியில் மீடியா விசிபிலிட்டி அம்சத்தை மறைக்கும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. இது கேலரியில் இருக்கும் வாட்ஸ்அப் மீடியாவை மறைக்கவோ அல்லது காண்பிக்கவோ செய்யும்.

    இந்த அம்சத்துடன் புதிய கான்டாக்ட் ஷார்ட்கட் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இது பீட்டா பயனர்களை மிக எளிமையாக கான்டாக்ட்களை சேர்க்க வழி செய்கிறது. 



    புதிய ஃபார்வேர்டெடு லேபிலை பார்க்க உங்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் வரும் மெசேஜ்களை தேர்வு செய்து மற்றவர்களுக்கு வாட்ஸ்அப்-இல் ஃபார்வேர்டு செய்ய வேண்டும். இந்த லேபில் மெசேஜின் மேல்புறம் பார்க்க முடியும். குறிப்பாக இந்த லேபிளலை மறைக்கச் செய்யும் ஆப்ஷன் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் மெசேஜ்களை மற்றவர்களுக்கு அனுப்பினால் நிச்சயம் அதில் ஃபார்வேர்டடு லேபில் இருக்கும். 

    வாட்ஸ்அப் பீட்டா செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய வசதி ஸ்பேம் மெசஜ்கள் அதிகம் பரப்பப்படுவதை தவிர்க்கவோ அல்லது தெரியப்படுத்தவோ ஏதுவாக இருக்கும். முன்னதாக ஃபார்வேர்டடு மெசேஜ் லேபெல் பிப்ரவரி மாத வாக்கில் காணப்பட்டது. தற்சமயம் பீடடா டெஸ்டிங்-இல் இருக்கும் இந்த அம்சத்தை உடனே பயன்படுத்த வாட்ஸ்அப் பீட்டா செயலியை ஆன்ட்ராய்டு சாதனத்தில் டவுன்லோடு செய்ய வேண்டும்.

    மேலும் இந்த செயலி கூகுள் பிளே பீட்டா திட்டம் மற்றும் ஏபிகே மிரர் தளத்தின் ஏபிகே ஃபைல் வடிவிலும் கிடைக்கிறது. புதிய அம்சம் ஐஓஎஸ் தளத்தில் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    புகைப்படம்: Twitter
    வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக பதாஞ்சலி அறிமுகம் செய்த கிம்போ செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாபா ராம்தேவின் பதாஞ்சலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கிம்போ எனும் குறுந்தகவல் செயலியை வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக வெளியிட்டது. 

    ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வெளியான சில மணி நேரங்களில் செயலியின் பாதுகாப்பு குறித்து பலரும் குற்றஞ்சாட்டினர். பாதுகாப்பு வல்லுநர்கள் செயலியின் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் வெளியான ஒரே நாளில் கிம்போ செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டதோடு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

    செயலி நீக்கப்பட்டதை ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கும் கிம்போ பிளே ஸ்டோர்களில் கிம்போ பெயரில் இருக்கும் மற்ற போலி செயலிகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக செயலியை நீக்கியதற்கு அதிகப்படியான வரவேற்பு தான் முக்கிய காரணம் என கிம்போ சார்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பாதுகாப்பு வல்லுநர்கள் இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற வாக்கில் தகவல் தெரிவித்துள்ளனர்.



    பிளே ஸ்டோரில் கிம்போ ஆப் என டைப் செய்தாலே, ஒரே பெயரில் சில எழுத்து மாற்றங்களுடன் பல செயலிகள் வெவ்வேறு டெவலப்பர்களின் பெயரில் இடம்பெற்றிருக்கின்றன. நாளுக்கு நாள் கிம்போ பெயரில் கிடைக்கும் போலி செயலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதால் வாடிக்கையாளர்கள் இவற்றை டவுன்லோடு செய்யாமல் இருப்பது நல்லது. 

    ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று அதிகாரப்பூர்வ கிம்போ ஆப் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. எனினும் பதாஞ்சலி சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களில் இந்த செயலி விரைவில் மீண்டும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அனைத்து நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கும் ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என ஹெச்எம்டி குளோபல் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
    மாஸ்கோ:

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் மூன்று நோக்கியா போன்களை ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்த நிலையில், ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் முன் அந்நிறுவன சர்வதேச விளம்பர பிரிவு மேளாலர் நெய்ல் பிராட்லி ஆன்ட்ராய்டு அப்டேட் குறித்த முக்கிய தகவலை தெரிவித்தார்.

    அந்த வகையில் இதுவரை ஹெச்எம்டி குளோபல் வெளியிட்டிருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஆன்ட்ராய்டு பி அப்டேட் நிச்சயம் வழங்கப்படும் என தெரிவித்தார். அனைவருக்கும் புத்தம் புதிய ஆன்ட்ராய்டு அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற ஹெச்எம்டி குளோபல் நெறிமுறைகளுக்கு ஏற்ப புதிய அப்டேட் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் போதே ஆன்ட்ராய்டு அப்டேட் உறுதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 2017-ம் ஆண்டு அறிமுகமான நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இதனால் நோக்கியா 3 ஸ்மார்ட்போனுக்கும் ஆன்ட்ராய்டு பி அப்டேட் நிச்சயம் வழங்கப்படுகிறது.



    ஆன்ட்ராய்டு பி பீட்டா அப்டேட்

    முதற்கட்டமாக நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு பி பீட்டா வழங்கப்பட்டுள்ளது. கூகுள் IO 2018 நிகழ்வுக்கு முன் சில ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு பி பீட்டா வெளியிடப்பட்ட நிலையில், நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கும் வழங்கப்பட்டது. பீட்டா பதிப்பை பயன்படுத்துவோர் ஆன்ட்ராய்டு பி முக்கிய அம்சங்களை பயன்படுத்த முடியும்.

    ஆன்ட்ராய்டு கோ சாதனங்கள்

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு கோ இயங்குதளம் கொண்டிருக்கும் பட்ஜெட் சாதனங்களான நோக்கியா 1 மற்றும் நோக்கியா 2.1 ஸ்மார்ட்போன்களுக்கும் ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பட்ஜெட் விலை சாதனங்களை பயன்படுத்துவோரும் புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை அனுபவிக்க முடியும்.
    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் செய்யும் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது.
    கலிஃபோர்னியா:

    வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்ரூப் வீடியோ காலிங் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது.

    புதிய அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் க்ரூப் வீடியோ கால் மேற்கொள்ள முடியும். பிப்ரவரி மாத வாக்கில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.39 ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி வழங்கப்படுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. 

    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதியில் க்ரூப்களில் இருக்கும் அதிகபட்சம் நான்கு பேருடன் வீடியோ கால் ஒரே சமயத்தில் பேச முடியும். புதிய அம்சம் ஏற்கனவே  2.18.145 பதிப்பில் வழங்கப்படுகிறது. புதிய அப்டேட் பெற்றவர்கள் மட்டுமின்றி இந்த அம்சத்தை பெற அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.


    புகைப்படம்: நன்றி WABetaInfo

    க்ரூப் வீடியோ கால் அம்சம் தற்சமயம் சர்வெர் சார்ந்த அப்டேட் மூலம் வெளியிடப்பட்டு இருப்பதால் அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்படாமல் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய அம்சத்தை குறைந்தளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

    வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் மற்ற அம்சங்களை போன்று இல்லாமல் புதிய வசதியை இன்வைட் மூலமாக ஆக்டிவேட் செய்ய முடியாது. இதே நிலை ஐஓஎஸ் தளத்துக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.52 க்ரூப் வீடியோ காலிங் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

    புதிய க்ரூப் காலிங் செய்ய வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் வீடியோ கால் செய்ய வேணடிய கான்டாக்ட்-ஐ தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது புதிய க்ரூப் காலிங் வசதி உங்களுக்கு வழங்கப்பட்டு இருந்தால், Add participant என்ற பட்டன் திரையில் தெரியும், இந்த பட்டன் தெரியாதபட்சத்தில் வீடியோ காலிங் செய்ய முடியாது.
    இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபீட் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபீட் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    புதிய அப்டேட் மூலம் பயனரின் ஃபீடில் வரும் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களாக ஷேர் செய்ய முடியும். இனி ஃபீட் போஸ்ட்களை ஸ்டோரீக்களில் ஷேர் செய்ய போஸ்ட்-இன் கீ்ழ் காணப்படும் பேபர் ஏர்பிளேன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் புதிய ஸ்டோரீயை உருவாக்குவதற்கான ஆப்ஷன் தெரியும். 



    இன்ஸ்டாகிராமில் பீட் போஸ்ட்-ஐ ஸ்டிக்கர் வடிவில் பிரத்யேக பேக்கிரவுன்டுடன் ஷேர் செய்ய தயார் நிலையில் இருக்கும். இதனை ஷேர் செய்யும் முன் ஸ்டிக்கரை ஸ்கேல் செய்யும் ஆப்ஷன்களை இயக்கலாம். இன்ஸ்டாகிராம் ஃபீட்களில் இருந்து ஷேர் செய்யப்படும் ஸ்டோரீக்களில் குறிப்பிட்ட போஸ்ட்-ஐ உண்மையில் பதிவிட்டவரின் யூசர்நேம் இடம்பெற்றிருக்கும்.

    நீங்கள் பதிவிடும் போஸ்ட்களை மற்றவர்கள் ஸ்டோரீக்களாக ஷேர் செய்யாமல் இருக்க ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய வசதிக்கான அப்டேட்கள் முதற்கட்டமாக ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வழங்கப்பட இருக்கிறது.
    ஃபேஸ்புக் ஸ்டோரீஸ் அம்சம் இந்தியாவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டோரீஸ் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கும் புதிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஃபேஸ்புக் தளத்தில் ஸ்டோரீஸ் அம்சத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மூன்று புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஃபேஸ்புக் தளத்தில் போட்டோ மற்றும் வீடியோக்களை பின்னர் பார்க்க சேமித்து வைக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் வாய்ஸ் போஸ்ட் மற்றும் ஸ்டோரிக்களை ஆர்ச்சிவ் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய வசதிகள் ஏற்கனவே பயனர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

    ஃபேஸ்புக் கேமரா கொண்டு படமாக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாடிக்கையாளர்கள் சேமித்து வைக்க முடியும். இவற்றை குறிப்பிட்ட வாடிக்கையாளர் மட்டும் பார்க்க முடியும். இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களில் மெமரியை சேமிக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது. இந்த அம்சத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் கிளவுடில் சேமிக்கப்படுகிறது. இவற்றை சேமித்து வைத்து பின்னர் பகிர்ந்து கொள்ள முடியும்.


    ஃபேஸ்புக் கேமரா

    ஃபேஸ்புக் கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் மட்டும் வீடியோக்களை மட்டுமே தளத்தில் சேமிக்க முடியும். முதற்கட்டமாக இந்த அம்சம் ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டுள்ளது. என ஃபேஸ்புக் ஸ்டோரீஸ் அம்சத்திற்கான தலைவர் கானர் ஹேஸ் தெரிவித்துள்ளார். 

    வாய்ஸ் போஸ்ட் அம்சத்தில் வாடிக்கையாளர்கள் ஆடியோ நோட்களை ஸ்டோரீக்களாக பதிவு செய்ய முடியும். இத்துடன் புகைப்படங்களையும் சேர்க்க முடியும். “வாய்ஸ் போஸ்ட் அம்சம் மூலம் பயனர்கள் தங்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்திருக்க அவர்கள் விரும்பும் வழிகளை பயன்படுத்த முடியும்.”  என்றும் ஹேஸ் மேலும் தெரிவித்தார்.

    இந்த அம்சம் குறைந்த டேட்டா அல்லது நெட்வொர்க் இருக்கும் பகுதிகளிலும் சீராக வேலை செய்யும் படி உருவாக்கப்பட்டுள்ளது. உங்களது நியூஸ் ஃபீடில் மற்றவர்களும் வாய்ஸ் போஸ்ட்களை பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. தற்சமயம் வாய்ஸ் போஸ்ட் செய்யும் கால அளவு 20 நொடிகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


    ஃபேஸ்புக் வாய்ஸ் போஸ்ட்

    இந்த அம்சம் தற்சமயம் ஃபேஸ்புக் லைட் பதிப்பில் வழங்கப்பட்டு இருந்தாலும் விரைவில் ஆன்ட்ராய்டு செயலியிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான ஸ்டோரீ அம்சம் போன்றே இந்த போஸ்ட்களும் 24 மணி நேரத்திற்கு பின் மறைந்து விடும்.

    ஃபேஸ்புக் ஸ்டோரீஸ் ஆர்ச்சிவ் அம்சம் வாடிக்கையாளர்களை தங்களது ஸ்டோரீக்களை பார்க்கவும், ஷேர் செய்ய முடியும். இந்த அம்சம் வரும் வாரங்களில் வழங்கப்பட இருக்கிறது. ஸ்டோரீக்களை ஆர்ச்சிவ் செய்வதற்கான அனுமதி கோரப்படும், இங்கு உறுதி செய்ய OK பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். ஆர்ச்சிவ் செய்ய வேண்டாமெனில் மறுக்க கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்யலாம். 

    இதனை எப்போது வேண்டுமானலும் பார்க்கவும், அவற்றை போஸ்ட் அல்லது ஸ்டோரியாக மீண்டும் ஷேர் செய்யும் வசதிகள் வழங்கப்படுகிறது. ஸ்டோரீஸ் அம்சத்தில் வாய்ஸ் போஸ்ட் பதிவு செய்தால் குறிப்பிட்ட ஸ்டோரி 24 மணி நேரத்தில் மறைந்து விடும், எனினும் ஆர்ச்சிவ் அம்சத்தை செயல்படுத்தி இருந்தால், அவற்றை ஸ்டோரீஸ் ஆர்ச்சிவ் பகுதியில் பார்க்க முடியும்.
    ×