search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஸ்போர்ட்"

    • தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.
    • தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டராக உள்ள சுரேஷ் பாபுவிடம் 2 தவணைகளாக ரூ.40 லட்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அதன் பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.

    திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசியாக கடந்த 20-ந் தேதி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே சுப்ரீம் கோர்ட்டில் அங்கித் திவாரி சார்பில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அங்கித் திவாரிக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டது.

    அந்த உத்தரவில் திண்டுக்கல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அப்போது அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.

    இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் கோர்ட்டில் அங்கித் திவாரியின் பெற்றோர் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வந்தனர். அதனுடன் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இடைக்கால நிபந்தனை ஜாமீன் நகலையும் வழங்கினர். இதனைத் தொடர்ந்து விரைவில் அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படும் என அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.

    • ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக பி.வி.ஆர் பாஸ்போர்ட் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • பி.வி.ஆர் பாஸ்போர்ட்டின் மூலம் மக்கள் மாதத்திற்கு 4 படங்கள் பார்க்கலாம்

    சினிமாவை அதிகம் விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக பி.வி.ஆர் பாஸ்போர்ட் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.வி.ஆர் பாஸ்போர்ட்டின் மூலம் மக்கள் மாதத்திற்கு 4 படங்கள் பார்க்கலாம். திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே இது செல்லுபடியாகும். வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பி.வி.ஆர் பாஸ்போர்ட் வைத்து படம் பார்க்க முடியாது.

    ஒரு நாளுக்கு ஒரு படம் மட்டுமே பார்க்க முடியும். ஒரு படத்தை 2 தடவைக்கு மேலாக பார்க்க முடியாது. பி.வி.ஆர் பாஸ்போர்ட் A-விற்கு மாதம் சந்தாவா 349 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு மாததிற்குள் 4 படம் பார்க்க முடியும். இல்லை என்றால் இது அடுத்த மாதத்திற்கு செல்லுபடி ஆகாது.

    பாஸ்போர்டின் இரண்டாம் B வகை மாதம் சந்தா ரூ.1047 செலுத்த வேண்டும். இதில், 90 நாட்கள் வரை உபயோகிக்கலாம். 90 நாட்களில் 12 படங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

    திங்களில் இருந்து வியாழக்கிழமை வரை மட்டுமே இதை உபயோகிக்க முடியும். வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமையில் புதுபடங்கள் வெளிவருவதால் மக்கள் அந்நாட்களில் பணம் கொடுத்துதான் பார்க்க வேண்டும்.

    பி.வி.ஆர் பாஸ்போர்ட்டை உபயோகித்து படம் பார்த்தால் ஒரு டிக்கெட்டின் விலை 87 ஆகவும், டிக்கெட்டுடன் சேர்ந்து கன்வீனியன்ஸ் ஃபீ செலுத்தி நாம் டிக்கெட்டுகளைப் பெறலாம். ஆன்லைனில் மட்டுமே பாஸ்போர்ட்டை வைத்து டிக்கெட் பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.

    பிவிஆர் பாஸ்போர்ட் ஏற்கனவே ஐதராபாத்தில் நடைமுறையில் உள்ளது. இப்போது, தெலுங்கானா, தமிழகத்திலும், கேரளத்திலும் அமலுக்கு வந்து இருக்கிறது. ரசிகர்களுக்கு மத்தியில் பி.வி.ஆர் பாஸ்போர்ட் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், நளினி உள்பட 7 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு முன்கூட்டியே விடுவித்தது.

    முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை குடிமகன் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இவர்கள், இலங்கை மற்றும் இங்கிலாந்து செல்ல சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, முருகன் உள்ளிட்டோருக்கு பாஸ்போர்ட் வாங்குவதற்கு நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.முனியப்பராஜ், முருகனின் நேர்காணலுக்காக நாளை அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்ததாகவும் நாளை அவர்களையும் அழைத்துச் செல்ல உள்ளதாகவும் கூறினார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    நாளை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

    • இந்தியர்களுக்கு 62 நாடுகள், விசா இல்லா சலுகைகளை வழங்கி உள்ளன.
    • தென் ஆப்பிரிக்கா (55-வது) (மாலத்தீவு 58), சவூதி அரேபியா (67), தாய்லாந்து (66), இந்தோனேசியா (60)

    உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் முதலிடம் வகிக்கிறது.

    ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முறையே 2 முதல் 5 இடங்களில் உள்ளன. அடுத்தபடியாக ஸ்பெயின், பின்லாந்து, நெதர்லாந்து, தென்கொரியா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன.

    இந்த பட்டியலில் இந்தியா 85-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 84-வது இடத்தில் இருந்தது. தற்போது ஒரு இடம் பின் தங்கியுள்ளது.

    இந்தியர்களுக்கு 62 நாடுகள், விசா இல்லா சலுகைகளை வழங்கி உள்ளன. இதில் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகியவை அடங்கும் தென் ஆப்பிரிக்கா (55-வது) (மாலத்தீவு 58), சவூதி அரேபியா (67), தாய்லாந்து (66), இந்தோனேசியா (60), உஸ்பெகிஸ்தான் (84) ஆகியவை பட்டியலில் உள்ளது.

    இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 106-வது இடத்திலும், இலங்கை 101-வது இடத்திலும், வங்கதேசம் 102-வது இடத்திலும், நேபாளம் 103-வது இடத்திலும் உள்ளன. ஆப்கானிஸ்தான் 109-வது இடத்தில் உள்ளது.

    • வீடியோவில், விசா முத்திரைகளுக்கு பயன்படுத்தும் பாஸ்போர்ட்டின் வெற்று பக்கங்களை ஒருவர் திருப்புவதையும், அதில் ஏராளமான தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருப்பதையும் காட்டுகிறது.
    • வீடியோ 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்ட நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ஒரு வாலிபர் தனது பாஸ்போர்ட்டை தொலைபேசி எண்களின் கோப்புகளாக மாற்றிய வீடியோ 'எக்ஸ்' தளத்தில் வைரலாகி வருகிறது.

    கேரளாவில் புதுப்பிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோவில் பாஸ்போர்ட்டில் காலியாக உள்ள கடைசி பக்கத்தில் ஏராளமான தொலைபேசி எண்கள் எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில், விசா முத்திரைகளுக்கு பயன்படுத்தும் பாஸ்போர்ட்டின் வெற்று பக்கங்களை ஒருவர் திருப்புவதையும், அதில் ஏராளமான தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருப்பதையும் காட்டுகிறது.

    இந்த வீடியோ 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்ட நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இலங்கை செல்வதற்காக வந்த ஒரு பெண்ணின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • போலீசார் அவரை கைது செய்து மோசடி தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரையில் இருந்து நேற்று இலங்கைக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகளின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை செய்து விமானத்தில் ஏற அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது இலங்கை செல்வதற்காக வந்த ஒரு பெண்ணின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அவர் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத்தார். அதில் மதுரையில் தங்கியிருப்பதற்கான முகவரிகள் இருந்தன. ஆனால் அந்த பெண் இலங்கை தமிழ் பேசியதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் இலங்கையை சேர்ந்த உமாவதி என தெரியவந்தது. இவர் கடந்த 2015-ம் ஆண்டு மதுரை புதூரை சேர்ந்த பிரதாப்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர் முறைப்படி இந்திய குடியுரிமை பெறாமல் திருமணமான பதிவை வைத்து ஆதார், பான்கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை பெற்று அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட்டையும் விண்ணப்பித்து பெற்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் உமாவதியை அவனியாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து மோசடி தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்து சிங்கப்பூர் செல்ல இருந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • ஏர்போர்ட் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டார்

    கே.கே. நகர்,

    திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் செல்லும் பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தெலுங்கன் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது33) என்பவர் தான் ஏற்கனவே சிங்கப்பூரிலிருந்து வந்த தேதியை மாற்றி போலியான சீல் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக ஏர்போர்ட் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் ஹரிஹரன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த அபுதாகிர் என்பவரே போலி பாஸ்போர்ட்டை தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.
    • முக்கிய குற்றவாளியான அபுதாகிரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட்டுகளை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அந்தோணிசாமி என்பவர் போலி பாஸ்போர்ட்டுடன் வந்திருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகள் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரிடம் புகார் அளித்தனர். இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. உதவி கமிஷனர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் எமர்சன் ஆகியோர் நடத்திய விசாரணையில் கோவிந்தசாமிக்கு போலி பாஸ்போர்ட் வழங்கியது ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரை சேர்ந்த புரோஷ்கான் என்பது தெரியவந்தது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். புரோஷ்கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த அபுதாகிர் என்பவரே போலி பாஸ்போர்ட்டை தயாரித்து கொடுத்தது தெரியவந்தது. அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது அபுதாகிர் தப்பி ஓடிவிட்டார். அவரது வீட்டில் இருந்து 100 பாஸ் போர்ட்டுகள் போலி ஆவணங்கள், மலேசியா சிம்கார்டுகள், ரூ.57 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வெளிநாடு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் புரோஷ்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முக்கிய குற்றவாளியான அபுதா கிரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது.
    • நமது இந்தியாவின் பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டை அதாவது பாஸ்போர்ட்டை கொண்ட நாடுகளின் புதிய தரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் இருந்த ஜப்பானை மூன்றாம் இடத்திற்கு பின் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது

    எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது.

    சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருந்தால்192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

    அடுத்து ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    மூன்றாவதாக ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்சு, ஜப்பான், லக்சம்பர்க், தென் கொரியா, சுவீடன் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    இங்கிலாந்து, அயர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 188 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    பெல்ஜியம், மால்டா, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, செச்ரிபப்ளிக் நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    ஆஸ்திரேலியா, ஹங்கேரி, போலந்து நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 186 நாடுகளுக்கு செல்லலாம்.

    கனடா, கிரீஸ் - 185 நாடுகள்.

    8வது இடத்தில் உள்ள அமெரிக்கா , லிதுவேனியா- 184 நாடுகள்.

    லேத்வியா, சுலோவாக்கியா, சுலோவேனியா- 183 நாடுகள்.

    10வது இடத்தில் உள்ள எஸ்டோனியா, ஐஸ்லாந்து - 182 நாடுகள்.

    மலேஷியா 11 ஆம் இடம் 180 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

    தாய்லாந்து 64 ஆம் இடம் - 79 நாடுகள்.

    80வது இடத்தில் உள்ள நமது இந்தியாவின் பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    இலங்கை 95 ஆம் இடம் - 41 நாடுகள்.

    100 வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் பாஸ்போர்ட் மூலம் - 33 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    -தனுராஜன்

    • பாகிஸ்தானுக்கு கீழ் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளது
    • சிங்கப்பூர் பாஸ்போர்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது

    ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் என்பது உலகின் அனைத்து அசல் பாஸ்போர்ட்டுகளில், அதனை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டியலிடப்படும் ஒரு அதிகாரப்பூர்வ தரவரிசையாகும். இந்த பட்டியல் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் பிரத்தியேக தரவுகளின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது.

    உலகின் 199 பாஸ்போர்ட்டுகளில் அந்த பாஸ்போர்ட்டின் உரிமையாளர்கள் முன் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின்படி கணக்கிடப்பட்ட 2023-க்கான ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

    இதன்படி பாகிஸ்தானிய பாஸ்போர்ட் 'நான்காவது மோசமானது' என்று தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை மட்டுமே பாகிஸ்தான் மிஞ்சி பட்டியலில் மேலான இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் பாஸ்போர்ட் 33 மாநிலங்களுக்கு விசா இல்லாத அணுகலை அனுமதிக்கிறது.

    சிரியாவின் பாஸ்போர்ட் 30 இடங்களுக்கும், ஈராக் 29 இடங்களுக்கும் மற்றும் ஆப்கானிஸ்தான் 29 இடங்களுக்கும் இது போன்ற அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    குடிமக்களுக்கு 192 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் சிங்கப்பூர் இந்த பட்டியலில் முதல் இடம் பெறுகிறது.

    190 இடங்களுக்கு செல்ல அனுமதிப்பதால் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய 3 நாடுகளும் இந்த பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளன.

    முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளில், கடந்த பத்தாண்டுகளை ஒப்பிடும்போது, அமெரிக்கா தனது தரவரிசையில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது. 2-வது இடத்தில் இருந்த அமெரிக்கா 8-வது இடத்திற்கு விழுந்துள்ளது.

    2022-ம் வருடம் இப்பட்டியலில் 85-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 80-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. உலகின் 57 இடங்களுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும். டோகோ மற்றும் செனகல் ஆகிய நாடுகளும் இந்தியாவை போல 80-வது இடத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1.60 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • 1.57 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு வசதியாக கோவையில் பாஸ்போர்ட் சேவை மையமும் சேலம், ராசிபுரம், குன்னூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்படுகின்றன.

    2022-23ம் ஆண்டில் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1.60 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1.57 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது 2021ம் ஆண்டை விட 35 சதவீதம் அதிகம்.நடப்பாண்டு மே மாதம் வரை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 78 ஆயிரத்து914 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 76 ஆயிரத்து 134 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பூபதி கணேஷ் கூறுகையில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். பாஸ்போர்ட் குறித்த சந்தேகங்களுக்கு 1800 258 1800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதையடுத்து தனது ராஜதந்திர பயண பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.
    • தடையில்லா சான்றிதழ் தொடர்பான வழக்கில் சுப்பிரமணியசாமி பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு அனுமதி அளித்தது.

    புதுடெல்லி:

    பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தனது ராஜதந்திர பயண பாஸ்போர்ட்டை ஒப்படைத்த அவர் புதிதாக சாதாரண பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கில் சுப்பிரமணியசாமி பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு அனுமதி அளித்ததுடன், ராகுல் காந்தியின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது. அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக ராகுல் காந்திக்கு தடையில்லா சான்று வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்பதாகவும், ஆனால் அவர் கேட்ட 10 வருடங்களுக்கு அல்லாமல் 3 வருடங்களுக்கு தடையில்லா சான்று வழங்குவதாகவும் நீதிபதி தெரிவித்தார். 

    ×