வலிமையான பாஸ்போர்ட் பட்டியல்: முன்னேற்றம் கண்ட இந்தியா

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் முதலிடத்தை தக்கவைத்தது.சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 192 நாடுகளுக்குப் பயணிக்க முடியும்.
வலிமையான பாஸ்போர்ட் பட்டியல்: முன்னேற்றம் கண்ட இந்தியா
Published on

புதுடெல்லி:

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026 பட்டியலில் இந்தியா 75-வது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை 10 இடங்கள் முன்னேறியுயுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போது விசா இல்லாமல் 56 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.

விசா இல்லாமல் பயணியக்கூடிய நாடுகளில் இந்தோனேசியா, பூட்டான், மாலத்தீவு,தாய்லாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.

ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026 பட்டியலில், சிங்கப்பூர் மீண்டும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 192 நாடுகளுக்குப் பயணிக்க முடியும்.

அதன்பிறகு, ஜப்பான் மற்றும் தென் கொரியா (187 நாடுகள்) இரண்டாவது இடத்தையும், ஸ்வீடன் மற்றும் யுஏஇ ஆகியவை (186 நாடுகள்) அடுத்த இடங்களைப் பிடித்தன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com