search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pema Khandu"

    அருணாச்சலப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அம்மாநிலத்தில் முதல் மந்திரியாக பேமா கன்டு மீண்டும் இன்று பதவியேற்றார்.
    இட்டாநகர்:

    சீனாவை ஒட்டியுள்ள இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் அம்மாநிலத்தின் சட்டசபைக்கும் சேர்த்து கடந்த மாதம் 11-ம் தேதி தேர்தல் நடந்தது. அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் 41 இடங்களை கைப்பற்றினர்.



    இந்நிலையில், அம்மாநிலத்தில் முதல் மந்திரியாக பேமா கன்டு மீண்டும் இன்று பதவியேற்றார். அவருக்கும் 11 மந்திரிகளுக்கும் அருணாச்சலப்பிரதேசம் கவர்னர் பி.டி.மிஷ்ரா பதவிப் பிரமாணமும் காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

    அருணாசல பிரதேச மாநிலத்தில் ரூ.163 கோடி சொத்துடன் முதல்-மந்திரி பெமா காண்டு முதல் இடத்தில் உள்ளார். #Arunachal #PemaKhandu
    இட்டாநகர்:

    அருணாசல பிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், 60 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்துக்கும் வருகிற 11-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் தற்போதைய முதல்- மந்திரி பெமா காண்டு, முக்தோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில், வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்த தகவலின் அடிப்படையில் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் ரூ.163 கோடி சொத்துடன் முதல்-மந்திரி பெமா காண்டு முதல் இடத்தில் உள்ளார்.

    மொத்த வேட்பாளர்களில் 131 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், அவர்களில் 67 பேருக்கு ரூ.5 கோடிக்கு அதிகமான சொத்துகளும், 44 பேருக்கு ரூ.2 கோடிக்கு மேல் சொத்துகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Arunachal #PemaKhandu 
    அருணாசல பிரதேசத்தில் குடியுரிமை சான்று வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ந்த வன்முறைப் போராட்டத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், கோரிக்கை ஏற்கப்பட்டுவிட்டதாக முதல்வர் அறிவித்துள்ளார். #ArunachalPradesh #ResidencyCertificate
    இடாநகர்:

    அருணாசல பிரதேசத்தின் நம்சாய், சாங்லாங் மாவட்டங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 6 பிரிவினருக்கு நிரந்தர குடியுரிமை (பிஆர்சி) சான்று வழங்க, உயர்மட்டக்குழு ஒன்று அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் இடாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போராட்டமும், வன்முறையும் பரவி வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 60 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த திட்டத்தை ஒத்திவைத்திருப்பதாக அரசு உறுதி அளித்தபோதும் போராட்டம் நீடித்தது.

    நேற்று நித்தி விகாரில் உள்ள துணை முதல்-மந்திரி சவ்னா மெயினின் வீட்டை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். மேலும் போலீஸ் துணை கமிஷனர் ஒருவரின் அலுவலகம் சூறையாடப்பட்டது. முதல்வரின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர். துப்பாக்கி சூடும்நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.



    நிலைமை கட்டுக்கடங்காமல் போனதையடுத்து, இன்று அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் பீமா காண்டு, போராட்டக்காரர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதாகவும், சர்ச்சைக்குரிய நிரந்தர குடியுரிமை சான்று விவகாரம் முடிந்துவிட்டதாகவும் கூறினார். போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பிஆர்சி விவகாரத்தை அரசு எடுக்காது என தலைமைச் செயலாளர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

    காங்கிரசின் ஆதரவுடன் இந்த போராட்டம் நடந்திருக்கலாம் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. #ArunachalPradesh #ResidencyCertificate

    ×