search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியானது
    X

    மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியானது

    மோட்டோரோலா ஆன்ட்ராய்டு ஒன் பிரான்டு ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    லெனோவோவின் மோட்டோரோலா தனது ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது.  

    மோட்டோரோலா ஒன் பவர் என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் மற்றும் லைவ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. 

    ஸ்பெயின் நாட்டு வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 6.2 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2280 பிக்சல், 19:9 ரக நாட்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3780 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.



    புகைப்படங்களை எடுக்க டூயல் பிரைமரி கேமரா, 12 எம்பி, f/1.8 அப்ரேச்சர் மற்றும் 5 எம்பி சென்சார், f/2.0 அப்ரேச்ர் முன்பக்கம் 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர் வழங்கப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் X போன்ற நாட்ச், கீழே சிறிய சின், பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா மாட்யூல் அதன் கீழ் ஆன்ட்ராய்டு ஒன் பிரான்டிங் கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்பீக்கர் கிரில் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டது.

    இதுதவிர ஸ்மார்ட்போனின் இதர அம்சங்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை. மேலும் மோட்டோரோலா ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனின் தகவல்கள் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
    Next Story
    ×