என் மலர்

  தொழில்நுட்பம்

  எல்லா நோக்கியா போன்களுக்கும் நிச்சயம் கிடைக்கும்
  X

  எல்லா நோக்கியா போன்களுக்கும் நிச்சயம் கிடைக்கும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அனைத்து நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கும் ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என ஹெச்எம்டி குளோபல் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
  மாஸ்கோ:

  ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் மூன்று நோக்கியா போன்களை ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்த நிலையில், ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் முன் அந்நிறுவன சர்வதேச விளம்பர பிரிவு மேளாலர் நெய்ல் பிராட்லி ஆன்ட்ராய்டு அப்டேட் குறித்த முக்கிய தகவலை தெரிவித்தார்.

  அந்த வகையில் இதுவரை ஹெச்எம்டி குளோபல் வெளியிட்டிருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஆன்ட்ராய்டு பி அப்டேட் நிச்சயம் வழங்கப்படும் என தெரிவித்தார். அனைவருக்கும் புத்தம் புதிய ஆன்ட்ராய்டு அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற ஹெச்எம்டி குளோபல் நெறிமுறைகளுக்கு ஏற்ப புதிய அப்டேட் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் போதே ஆன்ட்ராய்டு அப்டேட் உறுதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 2017-ம் ஆண்டு அறிமுகமான நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இதனால் நோக்கியா 3 ஸ்மார்ட்போனுக்கும் ஆன்ட்ராய்டு பி அப்டேட் நிச்சயம் வழங்கப்படுகிறது.  ஆன்ட்ராய்டு பி பீட்டா அப்டேட்

  முதற்கட்டமாக நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு பி பீட்டா வழங்கப்பட்டுள்ளது. கூகுள் IO 2018 நிகழ்வுக்கு முன் சில ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு பி பீட்டா வெளியிடப்பட்ட நிலையில், நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கும் வழங்கப்பட்டது. பீட்டா பதிப்பை பயன்படுத்துவோர் ஆன்ட்ராய்டு பி முக்கிய அம்சங்களை பயன்படுத்த முடியும்.

  ஆன்ட்ராய்டு கோ சாதனங்கள்

  ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு கோ இயங்குதளம் கொண்டிருக்கும் பட்ஜெட் சாதனங்களான நோக்கியா 1 மற்றும் நோக்கியா 2.1 ஸ்மார்ட்போன்களுக்கும் ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பட்ஜெட் விலை சாதனங்களை பயன்படுத்துவோரும் புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை அனுபவிக்க முடியும்.
  Next Story
  ×