search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு"

    • ஆக்கிரமிப்பு நிலம் கோவிலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
    • இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.5.14 கோடி ஆகும்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை காசாங்குளம் மேல்கரையில் உள்ள விஸ்வநாதசாமி கோவிலுக்கு சொந்தமான, பட்டுக்கோட்டை , காசாங்கு ளம் கீழ்க்கரை பகுதியில் உள்ள 14 ஆயிரத்து 811 சதுர அடி பர ப்பளவு இடம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணை யர் ஞானசேகரன் மற்றும் தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) கவிதா தலைமையில், தஞ்சாவூர் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் சங்கர், தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தலைமை எழுத்தர் பிரகாஷ் பரம்பரை அறங்காவலர் கட ம்பநாதன், திருக்கோயிலின் செயல் அலுவலர் சுந்தரம் கணக்கர் ரெங்கராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் முன்னிலையில் ஆக்கிரமி ப்பு நிலம் மீட்கப்பட்டு அங்கு நிரந்தர அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு நிலம் திருக்கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.5.14 கோடிகள் என இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு‌ ஏற்படுத்தும் வகையில் கடைகள் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது.
    • இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி வேலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பொதுமக்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ள இடங்களில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது.

    இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி வேலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அதன் அடிப்படையில் பரமத்திவேலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

    மேலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
    • அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அப்பகுதிக்கு சென்று கட்சி கொடிகளை நட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் ரவுண்டனா அருகில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்நிலையில் இன்று காலை அரசு இடத்தில் கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரி அ.தி.மு.க, பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலை அப்பகுதிக்கு சென்று கட்சி கொடிகளை நட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடைகளின் கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அதிரடியாக இடித்து அகற்றினர்.
    • கடைகள் இடிக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் மற்றும் விளம்பர போர்டுகள் வைத்து இருந்தனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட கடைகளின் கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அதிரடியாக இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • இந்த ஆக்கிரமிப்பு நிலம் சுமார் 3 ஏக்கர் 17 சென்ட் உள்ளது
    • நிலம் மீட்டுக்கப்பட்டு எல்லை அளவீடு செய்து கல் நடப்பட்டது.

    நாகர்கோவில் :

    மார்த்தாண்டம் முஞ்சி றை திருமலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உரிய மகாதேவர் கோவி லுக்கு சொந்தமான கோவில் நிலங்களை தனி யார் கல்லூரி ஒன்று ஆக்கிர மித்து வைத்துள்ளது.

    இந்த ஆக்கிரமிப்பு நிலம் சுமார் 3 ஏக்கர் 17 சென்ட் கோர்ட் உத்தரவுபடி இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் (குமரி மாவட்ட கோவில்கள், சுசீந்திரம்) பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் இணை ஆணையாளர் ரத்னவேல் பாண்டியன் முன்னிலையில் மீட்டுக்கப்பட்டு எல்லை அளவீடு செய்து கல் நடப்பட்டது.

    அப்போது கோவில் நிலம் எடுப்பு தாசில்தார் சஜித், தொகுதி கண்காணிப்பாளர் சிவக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜோதீஷ்குமார், ராஜேஷ், துளசிதரன் நாயர், சுந்தரி, தி.மு.க முஞ்சிறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மாஸ்டர் மோகன் உட்பட பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

    • கடைகளை காலி செய்யக் கோரி அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கினர்.
    • முன்னதாக அனைத்து கடைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர், கத்திப்பாரா ஜி.எஸ்.டி. சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.

    இது கடந்த 1967-ம் ஆண்டு தனியார் ஒருவருக்கு 40 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. இங்கு மது பார், ஒட்டல், டீக்கடை என 17 கடைகள் கட்டப்பட்டு வணிக வளாகமாக செயல்பட்டது. குத்தகை முடிந்த பின்னரும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தொடர்ந்து ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு செயல்பட்டு வந்தன.

    இதைத்தொடர்ந்து கடைகளை காலி செய்யக் கோரி அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கினர். ஆனால் கடைகள் தொடர்ந்து செயல்பட்டன.

    இந்நிலையில் பல்லாவரம் தாசில்தார் முன்னிலையில் இன்று காலை வருவாய்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.

    முன்னதாக அனைத்து கடைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் கடைகளில் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் ரூ. 150 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இது தொடர்பான பெரிய பேனரையும் அங்கு வைத்தனர்.

    • அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் அறிக்கை
    • நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் அலுவலகம் (இருப்பு நாகராஜா கோவிலில்) வைத்து நடைபெறும்.

    நாகர்கோவில் :

    இந்து சமய அறநிலை யத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ள தாவது:-

    நான் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற பின் அறநிலையத்துறைக்கு சொந்தமான 490 கோவில்களை ஆய்வு செய்து நிறை, குறைகளை அறிந்து அமைச்சர் சேகர்பாபுவிடம் அறிக்கை சமர்பித்தேன். இதன் அடிப்படையில் கோவில்க ளுக்கு திருப்பணி கள் செய்திடவும், கும்பாபி ஷேகம் நடத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை துரிதப்படுத்தவும், மேலும் விளக்கமான குறைகள் கேட்டறியவும், ஆக்கிரமிப்பு ஆவணங்கள் பெற்றிடவும் பொதுமக்களிடம் மனுக்கள் பெற உள்ளோம்.

    முதற்கட்டமாக நாளை (26-ந் தேதி) நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட கன்னியாகுமரி, சுசீந்திரம், நாகர்கோவில், கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், தாம ரைக்குளம், மருங்கூர், பாணத்திட்டை, தளியல், கிருஷ்ணன் கோவில், பெருவிளை, பறக்கை, தெங்கம்புதூர், பேரம்பலம், ஏழகரம், வடிவீஸ்வரம், புரவசேரி, கோதிச்ச பிள்ளையகரம் ஆகிய பகுதிகளில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் சம்மந்தமாக மனுக்கள் கொடுக்க, நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் அலுவலகம் (இருப்பு நாகராஜா கோவிலில்) வைத்து நடைபெறும்.

    இதுபோல் நாளை மறுநாள் (27-ந்தேதி) பத்மநாபபுரம் தேவஸ்தனம் தொகுதிக்குட்பட்ட மண்டைக்காடு, வேளிமலை, வெள்ளிமலை, திருநந்திக்க ரை, பொன்மனை, மணலி கரை, பன்னிப்பாகம், மேலாங்கோடு, நீலகண்ட சுவாமி கோவில், திருவி டைக்கோடு, திருவி தாங்கோடு, சே ரமங்கலம், கரகண்டேஸ்வ ரம், ராதாகிருஷ்ணசன் கோவில், திருபன்னியோடு, வாள் வச்சகோஷ்டம் ஆகிய பகுதிகளுக்கு பத்மநாபபுரம் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடை பெறும். இரு நாட்களும் மனு பெறும் நேரம் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த வாய்பினை பொதுமக்கள், பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுள்ளப்படு கிறது.

    இந்த முகாமில் இணை ஆணையாளர் ரத்னவேல் பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 35 ஏக்கர் நிலம் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தனியாரிடமிருந்து வந்தது.
    • 6.5 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து கையகப்படுத்தி உள்ளனர்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம் கோபாலசமுத்திரம், தைக்கா ல் பகுதியில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான அன்னச்ச த்திரத்துக்கான 35 ஏக்கர் நிலம் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தனியாரிடமிருந்து வந்தது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நிலத்தை மீட்கும் பணி நடைபெற்றது.

    இதனை அடுத்து கொள்ளிடம் ஒன்றிய பெரு ந்தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய குழு துணை தலைவர் பானுசேகர், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமி ப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்றினர்.

    மேலும் நில அளவையர்களை கொண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி மற்றும் பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு நிலத்தை கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தற்போது அதிகாரிகள் முதற்கட்டமாக 6.5 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து கையகப்படுத்தி யுள்ளனர். மீதமுள்ள நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சங்ககிரி அருகே கஸ்துாரிப்பட்டி கிராமத்தில் 5 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
    • இந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கஸ்துாரிப்பட்டி கிராமத்தில் 5 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.

    அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் அறிவுடைநம்பி தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டது. அப்போது வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர்.

    • தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
    • சிமெண்டு சாலை அமைக்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராமமக்கள் அறிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திரும ருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு வயல்வெளி களுக்கு நடுவில் மயானம் உள்ளது.இந்த மயானத்திற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் வயல் வெளி வழியாக உடலை தூக்கிச் செல்கின்றனர்.இந்த நிலையில் மயானம் செல்வ தற்கு சிமெண்டு சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

    இந்த மயானம் செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் இருந்த தால் சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மாவட்ட கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பலமுறை மனு அளித்துள்ளனர்.

    ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் ஆக்கிரமிப்பில் உள்ள மயான பாதையை மீட்டு சிமெண்டு சாலை அமைக்கக்கோரி திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் மறியல் போராட்ட த்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த இடங்களின் ஆக்கிரமிப்பு களை திருமருகல் சரக வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி,திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி,ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்,கிராம நிர்வாக அலுவலர்கள் குமரேசன்,ரத்தினவேல் ஆகியோர் பொதுமக்கள் முன்னிலையில் ஆக்கிரமப்பு களை அகற்றினார்.

    • 15 தினங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையின் மையப்பகுதியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலைகளில் தினமும் நூற்றுக்கணக்கான தனியார் அரசு பயணிகள் வாகனங்களும், ஏராளமான சுற்றுலா வாகனங்களும் செல்கின்றன. இதனால் தொண்டி பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்து வதற்கும், இச்சாலையில் உள்ள வணிக நிறுவ னங்களால் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் கட்டாயமாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்தவும் திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் ஆேலாசனை கூட்டம் நடந்தது.

    தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்திர பாண்டியன் முன்னிலை வகித்தனர். வர்த்தக சங்க, வணிகர் நலச்சங்க பிரதிநிதிகள் தனியார் வாகன ஓட்டுநர் சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் வணிக நிறுவனங்கள் சாலைகளில் உள்ள தங்களது ஆக்கிர மிப்புகளை தாங்களாகவே 15 தினத்திற்குள் அகற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் வருகிற 26-ந் தேதி நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி துறை மற்றும் வருவாய்துறையினர் காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் உட்பட வார்டு கவுன்சிலர்கள், நெடுஞ்சாலை, வருவாய்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் 50 ஆக்கிரமிப்பு கடைகள் திடீர் அகற்றப்பட்டது
    • போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

    திருச்சி,

    திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதில் திருச்சி மத்திய நிலைய சாலை மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து புகார்கள் கூறப்ப ட்டது. இதையடுத்து கலெ க்டர் ஆக்கிரப்புகளை அகற்றுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.அதன் பேரில் திருச்சி மாநகராட்சி உதவி கமிஷனர் சண்முகம், இளநிலை பொறியாளர் பாவா பக்ருதீன், சுகாதார ஆய்வா ளர் பிரின்ஸ் சகாயராஜ் ஆகியோர் கொண்ட அதிகா ரிகள் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையி லான போலீசார் உதவியுடன் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர் .திருச்சி மத்திய பஸ் நிலையத்தின் உள்பகுதி, வில்லியம்ஸ் ரோடு, பாரதி தாசன் ரோடு, ராக்கின்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்து உள்ள 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஜேசிபி எந்திரம், இரண்டு லாரிகள் உதவியுடன் 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சாலை மற்றும் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் உட னடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று தெரிவித்தனர்.

    ×