search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sealing"

    • பழனி கடையில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது.
    • ரூ.2,200 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    வடலூர் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடலூர் -நெய்வேலி மெயின் ரோட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் பழனி (வயது 40), அவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது.

    இதேபோல் ஆர்.சி. தெற்கு தெருவில் கடை வைத்திருந்த ஆலிஸ்மேரி (41) என்பவரும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வந்தார். இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.2,200 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், மண்டல துணை தாசில்தார் துரைராஜ், சம்பவ இடத்திற்கு வந்து கடைகளுக்கு சீல் வைத்தார்.

    • கடைகளை காலி செய்யக் கோரி அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கினர்.
    • முன்னதாக அனைத்து கடைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர், கத்திப்பாரா ஜி.எஸ்.டி. சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.

    இது கடந்த 1967-ம் ஆண்டு தனியார் ஒருவருக்கு 40 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. இங்கு மது பார், ஒட்டல், டீக்கடை என 17 கடைகள் கட்டப்பட்டு வணிக வளாகமாக செயல்பட்டது. குத்தகை முடிந்த பின்னரும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தொடர்ந்து ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு செயல்பட்டு வந்தன.

    இதைத்தொடர்ந்து கடைகளை காலி செய்யக் கோரி அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கினர். ஆனால் கடைகள் தொடர்ந்து செயல்பட்டன.

    இந்நிலையில் பல்லாவரம் தாசில்தார் முன்னிலையில் இன்று காலை வருவாய்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.

    முன்னதாக அனைத்து கடைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் கடைகளில் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் ரூ. 150 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இது தொடர்பான பெரிய பேனரையும் அங்கு வைத்தனர்.

    • வருவாய் துறை அதிகாரிகள் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு உள்ள கோவில்கள், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் இலைகள், டம்ளர்கள் மற்றும் நெகிழி தட்டுகள் பயன்படுத்தக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இருந்தபோதிலும் நீலகிரியில் ஒருசில வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக வருவாய்த்துறைக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் ஊட்டி ஆர்.டி.ஓ., துரைசாமி தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு உள்ள ஒரு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த கடைக்கு அதிகாரிகள் உடனடியாக சீல் வைத்தனர். ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வழங்கக்கூடாது, பிளாஸ்டிக் 'பேக்கிங்' உள்ளிட்ட பயன்பாடுகளும் தடை விதிக்கப்பட்டு உள்ளன. எனவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அனுமதியின்றி செயல்பட்ட மதுபான கூடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
    • அங்கிருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள வெல்ல நாதன்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடை அருகே அனுமதியின்றி திறந்தவெளியில் மது பார் இயங்கி வந்தது. இங்கு வரும் குடிமகன்களால் அப்பகுதி யில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் மேலூர் கோட்டாட்சியர் பிர்தவுஸ் பாத்திமா மற்றும் அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மதுபார் அனுமதியின்றி நடத்துவது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் மது பார் கூடத்துக்கு சீல் வைத்தனர். மேலும் அங்கிருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடந்த வாரம் அரசு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக மது விற்றதாக கச்சிராயன்பட்டி டாஸ்மாக் கடை ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்டு செய்தது குறிப்பிடத்தக்கது.

    • சத்திரம் பஸ் நிலையத்தில் 2 மாநகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கபட்டுள்து
    • வாடகை செலுத்தாததால் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி சத்திரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 30 -க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வாடகை செலுத்தாமல் உள்ள 12 கடைகளை சீல் வைத்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டார். அதன்படி வாடகை நிலுவையில் உள்ள கடைகளை இன்று மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் சிவசங்கர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர்கள் பிச்சைமணி, செந்தில்குமார், ராஜேந்திரன் மற்றும் வரித்தண்டளர்கள் கொண்ட குழு கடைகளை பூட்டி சீல் வைத்தார்கள்.பின்னர் அவர்கள் தெரிவிக்கையில், வாடகை பாக்கி வைத்திருக்கும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களைக் கண்டறிந்து அவற்றிற்கு சல் வைக்க நடவடிக்கை எடுக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
    • மாநகரில் 13 டாஸ்மாக் பார்கள் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    தஞ்சையில் டாஸ்மாக் மதுக்கூடத்தில் போலி மது வாங்கி குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவத்தை யடுத்து தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களைக் கண்டறிந்து அவற்றிற்கு சல் வைக்க நடவடிக்கை எடுக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தர வின் பேரில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் குப்பு சாமி, கலால் உதவி ஆணை யர் மாறன் மற்றும் மது விலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் செல்வி ஆகி யோர் அடங்கிய குழுவினர் கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கூடங்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது சேலம் டவுன் ரெயில் நிலையம் எதிரில், புதிய பேருந்து நிலையம், நெத்திமேடு, கொண்ட லாம்பட்டி, கந்தம்பட்டி உள்ளிட்ட மாநகரில் 13 டாஸ்மாக் பார்கள் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது

    இதேபோல ஊரக பகுதி களில் ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உள்பட புகர் பகுதியில் 14 டாஸ்மாக் மதுக்கூடங்கள் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்த மொத்தம் 27 டாஸ்மாக் பார்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

    மேலும் டாஸ்மாக் கடை களில் நிர்ணயம் செய்யப் பட்ட விலையை விட கூடு தல் விலைக்கு மது விற்பனை செய்தால் கடையின் விற்ப னையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • மேட்டுப்பாளையம் வட்டத்தில் அரசு டாஸ்மாக் கடைகள் 16 உள்ளது.
    • பார் நடத்துவதற்கான தொகையை கட்டாமல் அதன் உரிமையாளர்கள் இழுத்தடிப்பு செய்து வந்ததாக தெரிகிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளில் கடந்த ஓராண்டாக டாஸ்மாக் மதுக்கடையில் பார் ஏலம் எடுத்தவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால் பார்களுக்கு மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    மேட்டுப்பாளையம் வட்டத்தில் அரசு டாஸ்மாக் கடைகள் 16 உள்ளது. இந்த கடைகள் அனைத்திலும் அரசு சார்பில் மது அருந்துவதற்கும் அதற்கு தின்பண்டங்களை விற்பனை செய்வதற்கும் பார்கள் உள்ளன.

    இதில் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய எல்லையில் ஓடந்துறை 1 கடை, உருளைக்கிழங்கு மண்டி 10, பஸ் நிலையம் 1, அபிராமி பஸ் நிறுத்தம் 1, சி.டி.சி பகுதியில் 1, பூ மார்க்கெட் சந்தில் 3 கடைகள் என 8 கடைகள் உள்ளன.

    சிறுமுகை போலீஸ் நிலைய எல்லையில் ஜடையம்பாளையம் காய்கறி மண்டி பகுதியில் 1, பெத்திக்குட்டையில் 1, வெள்ளிப்பாளையத்தில் 2 என 4 கடைகள். காரமடை போலீஸ் நிலைய எல்லையில் காரமடை, திம்மம்பாளையம், கணுவாய்ப்பாளையம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு என 5 கடைகள் உள்ளன.

    இதில் கடந்த ஓராண்டாக மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பார் நடத்துவதற்கான தொகையை கட்டாமல் அதன் உரிமையாளர்கள் இழுத்தடிப்பு செய்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து பார்களுக்கு சீல் வைக்க மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து நேற்று மேட்டுப்பாளையத்தில் பூ மார்க்கெட் சந்தில் 2 கடைகள், ஓடந்துறை, சிறுமு கையில் வெள்ளிப்பா ளையத்தில் 2 கடைகள், பெத்திகுட்டை, காரமடையில் , தோலம்பாளையம், வெள்ளியங்காடு, கணுவாய்ப்பாளையம் என மொத்தம் 10 கடைகளுக்கு மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    • அரசு தடை விதித்துள்ள புகையிலைபொருள்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கிடுக்கிப் பிடி விசாரணை நடத்திநீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்தாண்டி குப்பம் கடை வீதி பகுதியில் அரசு தடை விதித்துள்ள புகையிலைபொருள்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காடா ம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் சப்-–இன்ஸ்பெக்டர் வெங்க டேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் முத்தாண்டி க்குப்பம் புதுகுளம்தெரு சின்ராசு (வயது34) என்பவரது கடையில்இ ருந்துமூட்டை,மூட்டையாக ஹான்ஸ் பாக்கெ ட்டுகள் அடுக்கி வைக்கப்ப ட்டிருந்தது. அதனை தொடர்ந்து 130 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து முத்தாண்டி க்குப்பம்போலீசார் வழக்கு பதிவு செய்து சின்ராசுவை கைது செய்தனர். புகையிலை பொருட்கள்எப்படி கிடைத்தது? யார் யாருக்கு விற்பனை செய்துள்ளார்? என்பது குறித்து கிடுக்கிப் பிடி விசாரணை நடத்திநீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் வருவா ய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 

    • நிலுவை தொகை செலுத்தாத டிரஸ்ட் அலுவலகத்துக்கு சீல்வைக்கப்பட்டது.
    • நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஏ.கே. டி. டிரஸ்டுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் கடைகள் உள்ளன. இதற்கு 2011-12 முதல் 2022-23 வரை சுமார் ரூ.30 லட்சம் நிலுவை தொகை உள்ளது. இந்த டிரஸ்டுக்கும், நகராட்சிக்கும் கோர்ட்டில் வழக்கு நடந்தது.

    இதில் நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அதன் பிறகும் டிரஸ்ட் அலுவலகம் நிலுவை தொகையை செலுத்தவில்லை. நிலுவை தொகையை செலுத்தக்கோரி அலுவலகம் மற்றும் டிரஸ்டுக்கு சொந்தமான கடைகளுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் பிறகும் நிலுவை தொகைகள் நகராட்சிக்கு செலுத்தப்படவில்லை.

    இதையடுத்து ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையில் வருவாய் அலுவலர் முத்துசெல்வம், வருவாய் ஆய்வர்கள் பாண்டி, நாகராஜ், சிவராமன் மற்றும் நகராட்சி வருவாய் உதவியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், பணியாளர்களால் டிரஸ்ட் அலுவலகத்தை ஜப்தி செய்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    • குடிநீர் வசதி, மின்வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியுள்ளது.
    • கடைகாரர்கள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை ஏழு நாட்களுக்குள் அகற்றி கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையாளர் பார்த்த சாரதி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நெல்லிக்குப்பம் நகராட்சி க்குட்பட்ட 30 வார்டுகளுக்கும் சாலைவசதி, கால்வாய் வசதி, குடிநீர் வசதி, மின்வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியுள்ளது. மின்சார வாரியத்திற்கு மின் கட்டணம் 0.75 லட்சம் பாக்கி உள்ளது. இந்நிலையில் வரிவிதிப்புதாரர்கள் செலுத்த வேண்டியது. சொத்துவரி நிலுவை- ரூ. 206.34 லட்சம், குழாய் கட்டணம் நிலுவை-ரூ. 37.18 லட்சம், காலிமனை வரி நிலுவை-ரூ. 41.93 லட்சம், தொழில்வரி நிலுவை-ரூ. 13.53 லட்சம், கடை வாடகை நிலுவை- ரூ. 13.22 லட்சம், எஸ்.யூ.சி. கட்டணம்-ரூ. 21.61 லட்சம், மொத்தம்-ரூ. 333.81. எனவே, மேற்படி ரூ.333.81 லட்சம் வரி மற்றும் குழாய், வரியில்லா இனங்களை 15 தினங்களுக்குள் செலுத்த வேண்டும் தவறி னால் விதிகளின்படி ஜப்தி, குழாய் இணைப்பு துண்டிப்பு, கடையை பூட்டி சீல் வைப்பு நடவ டிக்கை மேற்கொள்ள நட வடிக்கை எடுக்கப்படும்.

    அனுமதியற்ற குழாய் இணைப்புகளுக்கு தாமாக முன்வந்து நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தி ஒழுங்குபடுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், ஆலை ரோட்டில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால் கடை காரர்கள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை ஏழு நாட்களுக்குள் அகற்றி கொள்ள வேண்டும். தவறினால் நகராட்சி சார்பில் ஆக்கிரமி ப்புகளை அகற்ற நேரிடும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. சொத்துவரி குறைக்க வேண்டுபவர்கள் நகராட்சி விதிகளின்படி 2022-2023 முதல் அரையாண்டுக்கான தொகை முழுவதும் செலுத்தி ஆணையருக்கு விண்ணப்பிக்கும் படியும் கோரப்படுகிறது. பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

    • வரி பாக்கி செலுத்தாத நிறுவனங்களுக்கு சீல் நகரசபை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • 30-ந் தேதிக்குள் செலுத்தாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும், குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்போவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

    சிவகங்கை

    மாவட்ட தலைநகராக இருக்கும் சிவகங்கை 27 வார்டுகளை கொண்ட நகராட்சியாக உள்ளது. இங்கு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று நகராட்சி தலைவராக சிவகங்கை தி.மு.க. செயலாளர் துரைஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.

    தற்போது சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.

    நகராட்சி நிர்வாகத்திற்கு தொழில், குடிநீர், பாதாள சாக்கடை மற்றும் வீட்டு வரி பாக்கி, குத்தகை பாக்கி மட்டும் ரூ.5 கோடி நிலுவையில் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.

    இந்த வரி பாக்கிகளை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும், குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்போவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

    மேலும் வரிப்பாக்கி உள்ளவர்களின் பெயர்களை நகராட்சி அலுவலக வாயிலில் பிளக்ஸ் பேனர்களாக வைக்க உள்ளதாகவும் நகரசபை தலைவர் தலைவர் துரைஆனந்த் தெரிவித்தார்.

    • விழுப்புரத்தில் அதிரடி: குட்கா விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல்வைத்தனர்.
    • அதிகாரி பாலசுப்பிரமணியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகர போலீஸ் நிலையம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் குருசாமி பிள்ளை தெருவில் பங்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ், ஆர்எம்.பி பாக்கு, விமல் பாக்கு வைத்து வியாபாரம் செய்த விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்த திவாகர் (வயது 27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பங்க் கடையை விழுப்புரம் நகராட்சி அதிகாரி பாலசுப்பிரமணியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    ×