

கடலூர்:
வடலூர் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடலூர் -நெய்வேலி மெயின் ரோட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் பழனி (வயது 40), அவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது.
இதேபோல் ஆர்.சி. தெற்கு தெருவில் கடை வைத்திருந்த ஆலிஸ்மேரி (41) என்பவரும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வந்தார். இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.2,200 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், மண்டல துணை தாசில்தார் துரைராஜ், சம்பவ இடத்திற்கு வந்து கடைகளுக்கு சீல் வைத்தார்.