search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே ஹான்ஸ் பாக்கெட்டுகளை பதுக்கிய கடைக்கு சீல்
    X

    பண்ருட்டி அருகே மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பண்ருட்டி அருகே ஹான்ஸ் பாக்கெட்டுகளை பதுக்கிய கடைக்கு சீல்

    • அரசு தடை விதித்துள்ள புகையிலைபொருள்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கிடுக்கிப் பிடி விசாரணை நடத்திநீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்தாண்டி குப்பம் கடை வீதி பகுதியில் அரசு தடை விதித்துள்ள புகையிலைபொருள்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காடா ம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் சப்-–இன்ஸ்பெக்டர் வெங்க டேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் முத்தாண்டி க்குப்பம் புதுகுளம்தெரு சின்ராசு (வயது34) என்பவரது கடையில்இ ருந்துமூட்டை,மூட்டையாக ஹான்ஸ் பாக்கெ ட்டுகள் அடுக்கி வைக்கப்ப ட்டிருந்தது. அதனை தொடர்ந்து 130 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து முத்தாண்டி க்குப்பம்போலீசார் வழக்கு பதிவு செய்து சின்ராசுவை கைது செய்தனர். புகையிலை பொருட்கள்எப்படி கிடைத்தது? யார் யாருக்கு விற்பனை செய்துள்ளார்? என்பது குறித்து கிடுக்கிப் பிடி விசாரணை நடத்திநீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் வருவா ய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    Next Story
    ×